முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழன் பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்...

பார்ப்பனர்கள் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் போதெல்லாம் ’அவர்களும் தமிழர்கள் தானே! அவர்களுக்கும் மொழிப் பற்றெல்லாம் உண்டு’ என்று நம்மவர்களே திரண்டு வருவார்கள். அதிலும் அந்தப் பார்ப்பனரால் பலனோ, விளம்பரமோ கிடைக்கும் என்றால் இந்தக் குரல் இன்னும் வேகமாக எழும்புவதோடு, ”இன்னும் ஆரியர், திராவிடர், பார்ப்பனர் என்றெல்லாம் திட்டிக் கொண்டு...” என்று நம்மை ஏதோ பிற்போக்குவாதிகள் போலப் பார்ப்பார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பகரவும் செய்வார்கள். ஏனெனில் அத்தகையோருக்குத் தான் விபீஷணப் பட்டமும், பார்ப்பனர்களின் விளம்பர சடகோபமும் கிடைக்கும்.

அண்மைக் காலமாக, பனியாவின் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக நுழைந்திருக்கும் பார்ப்பனர் ஒருவர் எங்கெங்கு தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும், அங்கெல்லாம் விஜயம் செய்து வருகிறார். அந்த அச்சு அசல் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான வைத்தியநாத அய்யர்வாளுக்கு, திடீரென தமிழ்ப் பற்று பீறிட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேயமெங்கும் அதைப் பாய்ச்சுவதைக் கடமையாகக் கொண்டு செயலாற்றிவருகிறார். (அழைத்தால் வெளிநாடுகளுக்கும் அவாள் வரத் தயார். ’கடல் தாண்டக் கூடாது என்பதெல்லாம் பழைய கதைங்காணும்...’, ’அப்போ... அந்த அனைத்துச் சாதியினர் அர்ச்சகர்’ -’பேசப்பிடாது... அதெல்லாம் பெரியவா அந்தக் காலத்திலேயே வகுத்து வச்சது... நம்ம இஷ்டத்துக்கு மாத்திடமுடியாது’)

தமிழ் என்றாலே மொட்டைத் தலையில் மிளகாய் அரைத்தது போல் துள்ளும் துக்ளக்காரிடம் பயிற்சி பெற்று, அடுத்த தலைமுறை வந்துவிட்டது என்ற அவரது வாழ்த்துகளோடு, ஆழம் பார்த்து இறக்கிவிடப்பட்டிருக்கும் வைத்தியநாத அய்யருக்கு மட்டும் தமிழ்ப் பற்று எங்கிருந்து பிறக்கும்?

பிறகேன் அவர் தமிழ்ச் சங்கங்கள் அனைத்திற்கும் சென்று வருகிறார். விளம்பர வெளிச்சத்தைக் காட்டி அனைத்து சங்கங்களுக்கும் தனது ஆலோசனை என்ற பெயரில் நச்சை விதைக்கவும், தங்கள் ஆட்களை விதைக்கவும்.செய்யும் சூழ்ச்சியே இது என்பதை விடுதலை கொஞ்ச நாளுக்கும் முன்பு போட்டு உடைத்திருந்தது. 

அதற்கெல்லாம் வேலை வேண்டாம். இதோ நான் இருக்கிறேன் என்று பூணூலைத் தூக்கிப் பிடித்தபடி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்வார் அவ்வப்போது! இப்போதும் அப்படித் தான். 

கம்யூனிசம், தமிழ்த் தேசியம் என அதீத முற்போக்கு பேசும் பார்ப்பனர்களுக்கான ஆசிட் டெஸ்ட் - சமூகநீதி!

அதேபோல் தீவிர தமிழ் ஆதரவு பேசும் பார்ப்பனர்களுக்கான ஆசிட் டெஸ்ட் - அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் என்பதும், கோவில்களில் தமிழ் என்பதும்!

அய்யர்வாளுக்கு ஆசிட் டெஸ்ட் வெற்றி - அய்யர்வாளை அது அடையாளம் காட்டிவிட்டது. ஆலயங்களில் இடம்பெறத் தமிழுக்கெல்லாம் தகுதி உண்டா? அது குறித்தெல்லாம் நாம் கவலைப் படக்கூடாது. அங்கே தேவபாஷைக்குத் தான் தகுதி உண்டு என்று குட்டியை விட்டு ஆழம் பார்த்திருக்கிறார் சீனியர்.

இப்போதாவது புத்தி வருமா தமிழர்களுக்கு! குறிப்பாக தினமணியைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் உலகத் தமிழ் பேரமைப்பாளர்களுக்கும், தமிழ்ச் சங்கங்களுக்கும்! 

புரட்சிக் கவிஞர் தெளிவாகப் பாடிவிட்டுப் போயிருக்கிறார். “தமிழன் பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்...” பார்ப்பான் - பார்ப்பானாகவே இருப்பான். எச்சரிக்கை..! எச்சரிக்கை!!
”பார்ப்பான் பால் படியாதீர்; - சொற்குக் கீழ்ப் படியாதீர்;
பார்பபான்; தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் -எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வம் மிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம்பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே பார்ப்பான்
தின்னப் பார்ப்பான் தமிழன் பேர் சொல்லி மிகுதமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்
தமிழழித்துத் தமிழர் தம்மைத் தலை தூக்கா தழித்துவிடநினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்தமிழர்கடன் பார்ப்பானைத் தரை மட்டம்
ஆக்குவதேஎன்றுணர்வீர்!”

கருத்துகள்

ssk இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதம்... கவியின் வார்த்தை இன்றும் பொய்க்கவில்லை, நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…