முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலங்கடந்த பதிவு! - சிந்தாநதிக்கு இரங்கல்!

யாருடைய நினைவு என்றைக்கு வரும் என்று சொல்லமுடியாது? திடீரென்று சாலையின் விளக்கொளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போதோ, எப்போதோ சந்தித்தவர்களின் நினைவு தோன்றும்! பிறகு அது வாய்ப்பான நேரத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதும், வரும் நேரத்தில் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ வாய்ப்புக் கிடைப்பதும் அரிது!

அப்படி யாரையாவது தொடர்புகொள்ள, தேடிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? ’அவர் போயி வருசம் ஆச்சே!’ என்று ஊரில் யாரைப் பற்றியாவது கேட்டால் கிடைக்கும் பதிலைப் போலத் தான் ’சிந்தாநதி’ மறைந்து இரண்டாண்டுகள் ஆயிற்று என்ற தகவலையும் நான் தெரிந்துகொண்டேன்.

வலைப்பூவில் எழுதத்தொடங்கிய காலத்தில், blogspot-இல் எழுதும் எனக்கு, Wordpress-காரர்களே அந்நியமாகத் தெரிவார்கள். யாருமே பயன்படுத்தாத blogspirit.com-இல் ஒருவர் எழுதிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் கஜகஜவென்று, எந்த மூலையிலாவது துடித்துக் கொண்டோ, எரிந்துகொண்டோ இருக்கும் ஏதாவது ஒரு GIF படத்தோடு கூடிய அந்த வடிவமைப்பைப் பார்க்கும்போதெல்லாம், எல்லா கலரையும் போட்டு பத்திரிகை வடிவமைக்கும் அச்சக வடிவமைப்பின் நினைவுதான் வரும்.

(சிந்தாநதி என்னும் பெயரைக் கேட்டதும் மனதில் தோன்றும் வடிவம் அவரது பெயருக்கு முன்னால் இருக்கும் கட்டம் - ”✪சிந்தாநதி” ! ஏதோ ஒரு எழுத்து ஒருங்குறியில் இல்லாததால் தோன்றும் கட்டம்... வித்தியாசமாகப் பெயருக்கு முன்னால் நிற்கும் அந்தக் கட்டம் Webdings Font-ல் இருக்கும் ✪ நட்சத்திரத்தின் வடிவம் தாங்கிய எழுத்து என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.)

ஆனால், அவருடைய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து, பிடித்துப் போனதாலும், தமிழ்க் கணினி சிறக்க அவர் தனது பங்களிப்பைச் செய்துவருகிறார் என்பதை அண்ணன் பாலபாரதி மூலம் கேட்டறிந்ததாலும் அவர் மீது மதிப்பு ஏற்பட்டது. பிறகு சிந்தாநதி எழுதிய “இந்திரலோகத்தில் எய்ட்ஸ்” என்ற மினி தொடர்கதையை உண்மையில் வெளியிட விரும்பி, அதற்கும் பாலபாரதி மூலம் தான் தொடர்புகொண்டு அனுமதி பெற்று வெளியிட்டேன். அது பற்றி வலைச்சரத்தில் நான் குறிப்பிட்டது:

மலேசியாவைச் சேர்ந்த சுயமரியாதைக்காரர் அ.சி.சுப்பையா எழுதி அன்றைய அரசுகளால் தடை செய்யப்பட்ட "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்"- இந்துமதக் கடவுள்களை கூண்டில் நிறுத்திய அற்புதமான நூல். அதைப் போன்று நல்ல கற்பனை வளத்துடன் எழுதப்பட்ட சிந்தாநதியின் படைப்பு. நான்கு பாகமாக இணையத்தில் (1) (2)(3) (4) வந்த இந்த சிறுகதை, உண்மை மார்ச் 1-15, 2007 இதழில் வெளியிடப்பட்டது.
(நான் பரிமாறிய பதார்த்தங்கள் - வலைச்சரம்)

வலைச்சரத்தின் பதிப்பாசிரியராகவும் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு அவசரக் காலத்தில் என் கையில் வந்த வலைச்சரத்தில் என்னால் இயன்றவரை நான் ப்திவுகளைத் தொகுத்துக் கொடுத்தேன். கடைசி நாள் தொகுப்புக்குப் போகும் வேளையில் என் நேரம் முடிந்திருந்தது. அதையொட்டி எனக்கும் சிந்தாநதி அவர்களுக்கும் நடந்த உரையாடல்:

PRINCENRSAMA said...
பேப்பரைப் பிடுங்கும் வரை பரிட்சை எழுதும் மாணவனைப் போல் கடைசி வரை எழுதிக் கொண்டிருந்தேன். நேரம் முடிந்ததும் பேப்பரைப் பிடுங்கும் வாத்தியாரைப் போல் பிடுங்கிவிட்டார்கள் பொறுப்பாசிரியர்கள் :-(
சரி... வலைச்சரத்தின் பெயரைச் சொல்லி என் தளத்தில் ஒன்றிரண்டு தொடர்கிறேன். அந்த இணைப்போடு சுட்டியாய் வந்து பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.


ஹை! இப்ப என்ன பண்ணுவீங்க!
September 10, 2007 8:10:00 AM GMT+05:30  


✪சிந்தாநதி said...
அடுத்தவருக்கு கைமாறும் நேரம் வந்துவிட்டதால் இரவு உங்க பேப்பரைப் பிடுங்கியது நான் தான்.;)
நீங்க முடித்து விட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன். இப்படி கடைசி நேரம் வரை பரீட்சை எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு பதிவு கிடைத்திருக்குமே..அடடா தவற விட்டுட்டமே ;(


//வலைச்சரத்தின் பெயரைச் சொல்லி என் தளத்தில் ஒன்றிரண்டு தொடர்கிறேன். அந்த இணைப்போடு சுட்டியாய் வந்து பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.//


கண்டிப்பா செய்யுங்க...
September 10, 2007 9:09:00 AM GMT+05:30


PRINCENRSAMA said...
அடடா, பதிப்பாசிரியரே களத்தில் இறங்கிவிட்டாரா? மகிழ்ச்சி!
September 10, 2007 10:15:00 AM GMT+05:30  


----------------------------------------------------------


பிறகு அவ்வப்போது அவரது படைப்புகளைப் படிப்பதுண்டு. ஆண்டுகள் கடந்து திடீரென அவருடைய ‘இந்திரலோகத்தில் எய்ட்ஸ்’ நினைவுக்கு வரவே, ’வேறெதுவும் ரசிக்கத்தகு பதிவுகள் உள்ளதா?’ என சிந்தாநதி தளத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்று தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் 2009-க்குப் பிறகு பதிவுகள் எதுவும் போடவில்லை என்பதைக் கண்ணுற்ற பிறகே கடைசிப் பதிவு எது எனத் தேடிப் போனேன்! வலைப்பூ முகவரியை மாற்றுவதும், தனி டொமைன் பெயர் போட்டு சொந்த வீட்டில் குடியேறிவிடுவதும் அதிகம் நடக்கும் வலைப்பூ உலகில் எங்கே போயிருக்கிறார் என்று தேட அதுதானே வழி!அப்போது தான் அவருக்கு அஞ்சலிப் பதிவுகள் இருந்ததைக் கவனித்தேன். எப்படி கவனிக்காமல் போனேன் என்று தெரியவில்லை. இளம்வயதில் அவர் மரணம் - பேரிழப்பு! நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், சிலரிடம் அன்பு கொண்டிருப்போம் அல்லவா? அப்படித்தான் சிந்தாநதியின் மீதான என் அன்பு! அவர் மறைந்தாலும் அவரது பதிவுகள் இன்னும் இருக்கின்றன - அவர் கருத்தைச் சொன்னபடி! தாமதமாக என் இரங்கலைப் பகிர்ந்து கொள்ள நேர்ந்தாலும், சிந்தாநதியினால் blogspirit இணையமும்,  வலைப்பூ - Blog எழுதுவதற்கான Spirit-ம் என் நினைவில் தொடர்கிறது. வாழ்க சிந்தாநதி!
----------------------------------------------------------

அண்மையில் அப்படி நேர்ந்த மற்றொரு இழப்பு முகநூல் தோழர் கிப்டன் அவர்கள். விவாதங்களுக்கு மத்தியில் முகநூலில் சந்திக்கும் உணர்வாளர்! திராவிட இயக்கத்தில் பணியாற்றி மறைந்த தோழர் கிப்டன் அவர்களுக்கு என் வீரவணக்கங்கள்!!

கருத்துகள்

யுவகிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
:-(

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…