முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே மெட்டு - எத்தனை பாடல்!! அடடா...என்றும் ராஜா!

அவசியம் எழுத வேண்டும்; பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று நாம் கருதி பணி/சோம்பல் காரணமாக தள்ளிப்போடும் செய்திகள் பல பிறரால் சொல்லப்பட்டுவிடும் போது, நாம் நினைத்தது வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும், கொஞ்சம் இயலாமையால் உருவான பொறாமையும் ஏற்படுவதை மறுக்க முடியாது. ஆனால் அதை மீறி, மகிழ்ச்சியை வளர்த்துக் கொள்ளுதலே நமது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிற உணர்வில் தான் இது வரை செயல்பட்டு வந்திருக்கிறேன். (வேற வழி...!)

அந்த வகையில் நீண்ட நாட்களாக நினைத்துவைத்திருந்த சில விசயங்கள் பதிவாகவோ, செய்தியாகவோ, படத்திலோ வெளிவந்து விட்டன. எனவே இனியும் அவற்றைக் காலம் கடத்தாமல் பதிவது என்ற நோக்கில் தொடங்கிவிட்டேன். அநேகமாக, அடுத்த ஓரிரண்டு பதிவுகளும் இதே திக்கில் இருக்கலாம்..

---------------------------------------
இளையராஜாவின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, அணுஅணுவாய் ரசிக்கும் பழக்கம் அண்ணன்களிடமிருந்து தொற்றியது. ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் ரசித்து, வியந்து, மகிழ்வது தனிசுகம்.

இப்போதிருக்கும் சன் மியூசிக் வருவதற்கு முன்னால், சன் தொடங்கிய சில ஆண்டுகளில் சன் மூவீஸ் என்றும், சன் மியூசிக் என்றும் இரண்டு சேனல்கள் தோன்றின. பின்னர் அவை தொடரப்படாமல் நின்றுபோயின. அதன் பின்னர் 2000-ஆம் ஆண்டு வாக்கில் கே டிவி-யும் பின்னர் சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என அடுத்தடுத்து சேனல்கள் வந்தன.

நிறைய இடைக்காலப் படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது சன் மூவீஸும், கே டி.வியும் தான். அதே போல் தான் சன் மியூசிக் சேனலும்.

ஆட்டோ ராஜா படத்தில் ’சங்கத்தில் பாடாத கவிதை...’ பாடலுக்கு பாட்டி ஒருவருடன் மலர்களுக்கு மத்தியில் காதல் செய்து கொண்டிருப்பார் விஜயகாந்த். அட்டகாசமான அந்தப் பாடலை தேடித்தேடிக் கேட்கத் தொடங்கினேன். பிறகு இணையத்தின் துணை கொண்டு அந்தப் பாடலை தேடிய போது, அதே இசையில் எண்ணற்ற பாடல்களை பல மொழிகளில் ராஜா உருவாக்கியிருப்பது தெரிந்தது.

தம்பி புருனோவும், நானும் அவற்றைத் தொகுத்துக் கொடுத்து, ஒரு முறை சூரியன் பண்பலையில் நண்பர் ராஜசேகர் மூலமாக பகிர்ந்து கொண்டோம். அந்த இணைப்புகளோடு நமது வலைப்பூவிலும் எழுத வேண்டுமென்று அதை வைத்திருந்தும் இழுத்துக்கொண்டே போய் எழுத முடியவில்லை.

இத்தொகுப்புகளை பலரும் யூடியூப் இணையதளத்தில் குறிப்புடன் கூட இணைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று அக்கா கவின் மலர் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இந்த தொகுப்பைத் தேடிப் பகிர்ந்திருந்தார்கள். எனவே வாயை மூடிக் கொண்டு அதையே எடுத்து இந்தப் பக்கத்திலும் பதிந்துவிட்டுப் போகிறேன்... பொறாமை கலந்த மகிழ்ச்சியுடன்!

-------------------------------------------------------
திகமாக இசை கேட்டுக்கொண்டிருப்பதன் பலன் இந்த குறிப்பு..

எனக்குத் தெரிந்து மிக அதிகமான எண்ணிக்கையில் ஒரே ஒரு மெட்டு இத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருப்பது இளையராஜாவின் இந்த ஒரு மெட்டுதான் என்று நினைக்கிறேன்.

மலையாளத்தில் ’ஓலங்கள்” படத்தில் இடம்பெற்ற ‘தும்பி வா’ முதல்... 

இதோ..:http://www.youtube.com/watch?v=QczFj252vGE


அதன்பின் தமிழில் ‘ஆட்டோ ராஜா’வுக்காக இங்கே : 

http://www.youtube.com/watch?v=DQg-5s21zP4


அதன்பின் தெலுங்கில் பாலுமகேந்திரா இயக்கத்தில் ’Nireekshana’ படத்தில்:

http://www.youtube.com/watch?v=hNaJftkrKcU


அதனபின் தமிழில் அதேபடம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘கண்ணே கலைமானே” என்ற பெயரில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=bXsHgqTwRl0
அநேகமாக பாலுமகேந்திராவுக்கு மிகப் பிடித்த மெட்டாக இது இருந்ததால்...மீண்டும்..Aur ek prem kahani" இந்திப் படத்தில் அதே மெட்டை மீண்டும் பயன்படுத்தினார்
https://www.youtube.com/watch?v=CayXUhErirI
மீண்டும் 'Paa" படத்தில் அதே மெட்டு..வேறொரு வடிவத்தில்... :
http://www.youtube.com/watch?v=Ir6tShQJmHk


இவை மட்டுமல்ல....வரிகளே அல்லத ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் போனஸ்
:http://www.youtube.com/watch?v=8Thz8_Z7rw8எல்லாம் ஓர் இடத்தில்!
https://www.youtube.com/watch?v=8aUOeT2i9CQ
இது மாதிரி ஒரே மெட்டு இத்தனை முறை வேற்ங்காவது பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்.

எத்தனை முறை எப்படிக் கேட்டாலும் பிடித்துப் போகும் மாயம் தான் என்ன?
நன்றி: கவின்மலர்
https://www.facebook.com/kavinnnn/posts/3148563476301
--------------------------------------------------------

ஒரே மெட்டு தான்.. ஆனால் அதில் எத்தனை உணர்வுகளைக் கொடுக்க முடிகிறது இவரால்...!

காதலாகிக் கசிந்துருகும் பாடல், அப்படியே உற்சாகமாக குழந்தைகள் பாடும் பாடலாகிறது, இளசுகள் சுற்றுலாவில் கரகரப்புடன் பாடும் துள்ளல் பாடலாகிறது...! இது தவிர கார்த்திக்ராஜா இசையில் விளம்பர இசையாகவும் வந்துள்ளது. (’நீர்வீழ்ச்சி தீமூட்டுதே’ பாடலை எழுதியவர் பாவலர் அண்ணன் அறிவுமதி அவர்கள்)

ராஜா - நீ - தமிழன் உலகுக்குத் தந்த இசைக் கொடை!

கருத்துகள்

கோவை எம் தங்கவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை அருமை... என்ன ஒரு ரசனை உங்களுக்கு.... ரசிகன் என்றால் ரசிகன்...
தமிழ் பிரியன் இவ்வாறு கூறியுள்ளார்…
ராஜா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் ஏகமனதாக பிடித்த பாடல்... பல வலைத்தளங்களில் இது குறித்து எழுதி இருக்கின்றார்கள்.
http://www.youtube.com/watch?v=ZFq8a5vPFuU
ஏசியாநெட் ஐடியா ஸ்டார் சிங்கரில் துர்கா விஸ்வநாத் என்பவர் பாடியது.. கேட்டுப் பாருங்கள்...
"என் ராஜபாட்டை"- ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரே மெட்டு தான்.. ஆனால் அதில் எத்தனை உணர்வுகளைக் கொடுக்க முடிகிறது இவரால்...!
//

அதனால் தான் அவர் இசைக்கு ராஜ வாக உள்ளார்
bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
//இது மாதிரி ஒரே மெட்டு இத்தனை முறை வேற்ங்காவது பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்//
S A ராஜ்குமாரை மறந்து விட்டு பேசுகிறீர்கள். ஒரே மெட்டை வைத்து பற்பல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.. (ஆனால் கேட்கும்போது கொலைவெறி வருவதை தவிர்க்க முடியாது!)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…