முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈழப் பற்றாளர்களே! இவருக்கா உங்கள் ஆதரவு?



மாவீரன் பிரபாகரன்பற்றி சட்டமன்றத்திலேயே ஜெ கூறியது என்ன?

16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:
நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான LTTE.-யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். 20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந் தேன். அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இது குறித்து நடவடிக்கை எடுத்து, 1995-இல் - Interpol-International Criminal Police Commission அமைப்பின் வாயிலாக பிரபாகரனைக் கைது செய்ய Red Corner Notice  வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.  இவ்வாறு சட்டப் பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா.

----------------------------------
"தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பெற்ற பிறகு, மத்திய அரசை வலியுறுத்தினேன். என்னுடைய பெரு முயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீதான தடை இன்று வரை தொடருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி. பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்"
 (நமது எம்.ஜி.ஆர். 23.10.2008 பக்கம் 1). 
(மதிமுக பொதுக்குழுவில் (9.4.2009) விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளார்களே - இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? விடுதலைப்புலிகள் இயக்கம் என்னால்தான் தடை செய்யப்பட்டது என்று கித்தாப்புப் பேசும் அம்மையாரிடம் அல்லவா கூட்டு சேர்ந்துள்ளனர்?)
-------------------------------------

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டுத் தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளை பேச ஆரம்பித்து விட்டனர். POTA இல்லாவிட்டாலும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி திமுக அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.
- ஜெயலலிதா அறிக்கை (நமது எம்.ஜி.ஆர். ஏடு 23.10.2008)
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?
கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா? உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை விரோதியாகவும் கருதுவார்களா?
--------------------------------------

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி !
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது.
- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)
------------------------------------
போரை நிறுத்த வேண்டும் என்பதன்மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. 
(நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)

ஈழப் போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளும் கூறுகின்றன. ஜெயலலிதாவோ என்ன சொல் லுகிறார்? அப்படி தலையிட்டால், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என்கிறார். இந்த ஜெயலலிதாவுடன் தான் இவர்கள் கூட்டாம் -குழம்பாம் - பொரியலாம் - ரசமாம் - துவையலாம் - குருமாவாம்! தமிழர்களே, புரிந்து கொள்வீர்!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழப் பற்றாளர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அம்மையாரை ஆதரிக்க முடியாது. எம் ஜி ஆ ருடன் அ தி மு க வின் ஈழ ஆதரவு புதைக்கப் பட்டு விட்டது. பார்ப்பனர்களும், வட இந்தியர்களும் சிங்களவர்களை ஆரியர்களாகவும், தமிழர்களைத் திராவிடர்களாகவும் நினைக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கருணாநிதியின் நயவஞ்சக நாடகத்தை நேரில் பார்த்தோமே, ஜெயா கருணா இரண்டுபேரும் நாய்கள் தான். ஈழத்தமிழரைக் கொன்ற காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் கருணாநிதி சொறி நாய். திமுக ஆதரவு தெரிவிக்கும் குஞ்சாமணிகள் பொத்திக்கொண்டுபோங்கள்.
Ravi இவ்வாறு கூறியுள்ளார்…
YES, we don't have any other choice.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பதவிக்காக துடிக்கும் மனது வேறு
நியாயத்துக்காக துடிக்கும் மனது வேறு
அரசியல்வாதிகளிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது மடத்தனம்
நியாயத்துக்காக வேறு வழி ஒன்ன்றை யோசிக்கணும் தோழரே
Hector's Blog இவ்வாறு கூறியுள்ளார்…
தோழரே, நாம் என்றும் ஜெயலலிதாவை ஆதரித்தது கிடையாது. தமிழீழத்தில் இனப்படுகொலை நடந்த போது அவர் போட்ட நாடகமும் எமக்குப் புரியும். அதே நேரம் பதவியில் இருந்த கொலைஞர் போட்ட நாடகமும் துரோகமும் அதை விடப் பெரியது. இனப்படுகொலைக்குத் துணைபோன சோனியாவின் காங்கிரசை முட்டுக் கொடுத்துக் காப்பாற்றினார். அவர் நினைத்திருந்தால் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யத் தவறி விட்டார். அதனால் தான் எமது ஆதரவு கொலைஞர் சோனியா (திமுக காங்கிரஸ்) கூட்டணிக்கு இல்லை.
Hector's Blog இவ்வாறு கூறியுள்ளார்…
தோழரே, நாம் என்றும் ஜெயலலிதாவை ஆதரித்தது கிடையாது. தமிழீழத்தில் இனப்படுகொலை நடந்த போது அவர் போட்ட நாடகமும் எமக்குப் புரியும். அதே நேரம் பதவியில் இருந்த கொலைஞர் போட்ட நாடகமும் துரோகமும் அதை விடப் பெரியது. இனப்படுகொலைக்குத் துணைபோன சோனியாவின் காங்கிரசை முட்டுக் கொடுத்துக் காப்பாற்றினார். அவர் நினைத்திருந்தால் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யத் தவறி விட்டார். அதனால் தான் எமது ஆதரவு கொலைஞர் சோனியா (திமுக காங்கிரஸ்) கூட்டணிக்கு இல்லை.
suvanappiriyan இவ்வாறு கூறியுள்ளார்…
சிந்திக்க வேண்டிய பதிவு. கட்டுரையின் கருத்தோடு ஒத்து போகிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கலைஞர் மாவீரன் பிரபாகரனை காப்பாற்றவில்லையாம்!! கலைஞர் காப்பாற்றினால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருந்த பிரபாகரன் எல்லாம் மாவீரனா?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hey - I am definitely delighted to find this. cool job!
TAMIL SAHA இவ்வாறு கூறியுள்ளார்…
tamil eezham piranthirunthal enge prabhakaran thamil inathin thalaivar pattam peruvaro enra payamthan korunanithiyai thamil ina padukolaikaluku karanamaka irukkumo

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam