முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்


”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.


------------------------------------------------------------
Spectrum Raja's House ....in Tamil Nadu

.  .  .  Hold YOUR breath. 

 
 Forward it to as many as a true Indian Citizen.

 Indians are poor but INDIA is not a poor country". Says one of the swiss bank directors.

He says that "280 Lacs crore" of Indian money is deposited in swiss banks which can be used for 'taxless' budget for 30 yrs. Can give 60 0000000 jobs to all Indians. From any village to Delhi 4 lane roads. Forever free power supply to more than 500 social projects. Every citizen can get monthly Rs. 2000/- for 60 yrs. No need of World Bank & IMF loan. Think how rich politicians block our money. We have full right against corrupt politicians.

Forward to everybody so that every Indian can read this.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆ... அடேயப்பா... எவ்வளவு பெரிய சொகுசு பங்களா...? இது ஆ.ராசாவினுடையதா...? ஊடகங்கள் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று ஒரு கணம் எண்ணத் தோன்றுகிறதா?

இப்படி அளந்துவிட்டிருக்கும் இந்த மின்னஞ்சல் உண்மையானதா? என்பதையெல்லாம் கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல், நம் பங்குக்கு நாமும் பரப்புவோம் என்று பகுத்தறிவற்றவர்களாக forward மேனியா பிடித்தலைகிறார்கள் நம் தமிழர்கள்.

அதிலும் சும்மா இல்லை... ”நீ ஒரு சுத்தமான ஆம்பிளையா இருந்தா..?” அப்படிங்கற ரீதியில் ”உண்மையான இந்தியனா இருந்தா கேள்வி கேட்காம மடத்தனமா இதை forward பண்ணுன்னு” ஒரு சீண்டல் வேறு.

இதில் தரப்பட்டிருக்கும் தகவல் உண்மையானது தானா? இப்படி ஒரு வீடு தமிழ்நாட்டில் இருக்கிறதா? அந்த வீடு முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களுக்குச் சொந்தமானதா? இந்தப் புகைப்படத்தை வெளியிட்டவர்கள் யார்? உள்ளே நுழைந்து ரசித்து, புகைப்படம் எடுத்தவர்கள் யார்? அவ்வளவு பெரிய அப்பாடக்கர் பத்திரிகைக்காரர் யார்? யாராவது ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியுமா?

முடியாது. காரணம்... இப்படியொரு வீடு, ராசா அவர்களுக்கு இல்லை.. இன்னும் சொல்லப்போனால் சென்னையில் அவருக்கு குடியிருக்க சொந்த வீடே கிடையாது. 

பிறகென்ன இந்தப் படம் என்று யோசிக்கிறீர்களா?
பின்வரும் இணைப்பையும் இந்தப் படங்களையும் பாருங்கள். உண்மை புரியும்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா கடற்கரைப் பகுதியில் கட்டப்பட்டு இணையத்தில் விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்ட The Glass Pavilion என்ற வீட்டின் புகைப்படத்தை எடுத்துப்போட்டு, “இது ராசாவின் வீடு... ஊழல் பணம்இதில் இருக்கும் கழிவுத் தொட்டிக்குள் தான் புதைக்கப்பட்டிருக்கிறது” என்கிற ரீதியில் புரளி கிளப்பி அதனூடாக, தமிழகம் குறித்தும், ராசா அவர்களைக் குறித்தும், தமிழகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்ட இனத்தவர், சமூக சீர்திருத்த சிந்தனை பெற்றவர் என்ற காழ்ப்புணர்வு காரணமாக வட நாட்டவரும், பார்ப்பனர்களும், முதலாளித்துவவாதிகளும் பரப்பும் இந்த மோசடி மின்னஞ்சலை அரை வேக்காட்டுத்தனமாகவோ, அறியாமையாலோ பரப்பிடும் பணியை நாம் செய்யலாமா?

இப்படி மோசடியான குற்றச்சாட்டை முன்வைத்து, படம் போட்டு “ராசாவின் சென்னை வீடு” என்பது போல் படம் போட்டு பரப்பும் அறிவுஜீவிகளே! கோயபல்ஸ் இல்லாத குறையைப் போக்க ஏன் இந்த ஈனப்பிழைப்பு! 

இந்த மோசடி மின்னஞ்சலை திட்டமிட்டு தான் உருவாக்கியிருக்கிறார்கள். இதைப் போலவே தான் காற்று ஊதப்பட்ட பலூனாக இருக்கும் 1,76,000 கோடி என்ற போலியான கற்பனைத் தொகையை வைத்து பரப்பப்பட்ட பிரச்சாரமும்!  அந்த வழக்கு நடைபெற்று முடிவு வரட்டும். உண்மை புரியும்.

ஆனால், வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு, வேறு எந்த வழக்குக்கும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தை இந்த வழக்குக்கு ஊடகங்களும், பார்ப்பனர்களும் வழங்கி, நம்மை ஏதோ ஒரு மாயையில் ஏன் மூழ்க வைத்திருக்கிறார்கள்? ஏன் அதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்? என்பதை யோசித்துப் பார்த்தால் இந்த மாய்மாலங்களுக்கு காரணம் புரியும். அண்டப் புளுகு... ஆகாசப் புளுகு.. என்பார்கள்... அதையெல்லாம் விஞ்சும் ஸ்பெக்ட்ரம் புளுகுகள் தான் இன்றைய பார்ப்பன ஊடகங்கள் உங்களுக்குத் தருபவை... 

இந்த போலி மின்னஞ்சல் ஆதாரமில்லாமல் உடைந்து நொறுங்கியது போல, இந்தப் போலிக் குற்றச்சாட்டுகளும் உடைந்து நொறுங்கும்.
-----------------------------------------------------------------------

இதைப் போன்ற இன்னும் பிற போலி மின்னஞ்சல்கள் குறித்து பதிவு எழுத எண்ணிக் கொண்டிருந்தேன் வெகு நாட்களாக... ! கடந்த மார்ச்சில் இது குறித்து டெல்லியிலிருந்த தோழர் க.எழிலரசன் விவரம் கேட்ட போது தேடிப் பார்க்கையில் இந்தத் தகவல் கிடைத்தது, வடநாட்டிலும், தமிழ்நாட்டிலும் ஒட்டி ஓய்ந்திருந்த அந்த மின்னஞ்சலுக்கு மட்டும் பதில் அனுப்பிவிட்டு பிறகு விரிவாக எழுதலாம் என்றிருந்தேன். ஆயினும் இன்னும் உலாவிக் கொண்டிருக்கும் இந்த டுபாக்கூர் மெயிலுக்கு சரியான தகவல்களுடன் பதில் சொல்ல நிரந்தமாகப் பதிய வேண்டியது நம் கடமையல்லவா..? அதனால் தான் இந்தப் பதிவு...

அடுத்த பதிவு விரிவாக...:
ஹோக்ஸ் மெயில்களும் கோயபல்ஸ் பிரச்சாரமும்!

கருத்துகள்

குடந்தை அன்புமணி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த மெயில் எனக்கும் வந்தது. ஆனால் நம்புவது மாதிரியில்லை என்பதால் அதை வெளிப்படுத்தவில்லை.தங்களின் பகிர்வுக்கு நன்றி நண்பரே.
Niroo இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை
Niroo இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை
சார்வாகன் இவ்வாறு கூறியுள்ளார்…
salute
vijayan இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ்நாடு அரசியலில் நெடுங்காலமாக கருணாநிதியை தான் கோயபல்ஸ் என்று அழைப்பது வழக்கம்.
குறை ஒன்றும் இல்லை !!! இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பரே !!! இது ராசா கட்டவிருந்த கனவு இல்லம்.. இது போன்ற புகைப்படங்கள் அவரது லாப்டாப்பில் கிடைத்ததாக சவுக்கு கூறியுள்ளது ... அவர் வீடு என்பது தவறு ஆனால் இதே போல ஒரு வீட்டை அவர் கட்ட நினைத்தது உண்மையாக இருக்க வாய்ப்புண்டே :))
Saravanan இவ்வாறு கூறியுள்ளார்…
This mail is a false one, that does not mean Raja is not accused. Dhayanidhi started 2G scam and Raja followed him to mint crores of money
Parthy இவ்வாறு கூறியுள்ளார்…
இதே மின் அஞ்சல் எனக்கும் வந்தது... இந்த மாதிரி வீடு சென்னையில் இல்லவே இல்லை என்று அதை அனுப்பியவருக்கு தெளிவாக புரிய வைத்தேன்.. மேலும், அதே மின் அஞ்சலில் ராஜாவின் பேரை எடுத்துவிட்டு நமக்கு பிடிக்காத எந்த அரசியல் வாதியின் பெயரை போட்டு அனுப்பினால் கூட இந்த Forward-மேனியா நோய் பிடித்தவர்கள் சற்றும் சலனம் இன்றி அதை Forward-செய்வார்கள் என்றும் எடுத்து கூறினேன்...
Parthy இவ்வாறு கூறியுள்ளார்…
இதே மின் அஞ்சல் எனக்கும் வந்தது... இந்த மாதிரி வீடு சென்னையில் இல்லவே இல்லை என்று அதை அனுப்பியவருக்கு தெளிவாக புரிய வைத்தேன்.. மேலும், அதே மின் அஞ்சலில் ராஜாவின் பேரை எடுத்துவிட்டு நமக்கு பிடிக்காத எந்த அரசியல் வாதியின் பெயரை போட்டு அனுப்பினால் கூட இந்த Forward-மேனியா நோய் பிடித்தவர்கள் சற்றும் சலனம் இன்றி அதை Forward-செய்வார்கள் என்றும் எடுத்து கூறினேன்...
Karikal@ன் - கரிகாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் சொல்லிக்கிறேனுங்க!
Karikal@ன் - கரிகாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பின் தொடர
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ராசா ஊழல் செய்யவில்லை,தயாநிதி மாறன் உலக மகா உத்தமர்,கலைஞர் குடும்பம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை போன்ற புளுகுகளுக்கு மக்கள் பதிலடி கொடுத்து விரட்டியப்பின்னும் சிலதுகள் ஊழல் பேர்வழிகளுக்கு ஜால்ரா போடுவது ஏன்.
இன்று தயாநிதி விலகல், நாளை சிறையில், அடுத்து யார் என்பதுதான் கேள்வி.வீரமணி ஒப்பாரி வைத்தாலும்,
என்னதான் எழுதினாலும் சட்டத்தின் முன் எடுபடாது.திமுகவின் வீழ்ச்சி துவங்கிற்று, தி.கவும் விரைவில் சிதறும்.அறக்கட்டளை சொத்துக்கள் அரசு வசமாகும் நாளும் தொலைவில்
இல்லை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
You should expose such fake emails. During the past election in TN, there was such an email claiming that the state of Gujarat had paid off all its loans and has a deposit of 1 lakh crores in WB or IMF. Whoever I talked to believed that and praised Modi. Is there any proof for that?
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
ராசா நினைச்சாரு என்றால் அவரு வீட்டு வேலைக்காரனுக்குக் கூட இதைவிட பொலிவா கட்டித் தருவார், பண்ணாடைப் பசங்க இது அவரத் வீடுன்ன் உளறுகிறானுங்க பாஸ்.
பித்தனின் வாக்கு இவ்வாறு கூறியுள்ளார்…
one thing has cleared by your blog. you have decease of parpanamonia.
Kindly see a good mental doctor.
YESRAMESH இவ்வாறு கூறியுள்ளார்…
பாவம்பா அவரு என்ன அவ்வளவு பணக்காரரா... ஏழை யா அவரு விட்டுடுங்க
Maathi Yosi இவ்வாறு கூறியுள்ளார்…
http://savukku.net/home1/222-2010-12-08-18-22-10.html


ராசாவின் வேஷம்..!
Please read this article.


http://savukku.net/home1/222-2010-12-08-18-22-10.html
பாலாவின் பக்கங்கள்! இவ்வாறு கூறியுள்ளார்…
ஊழலில் புளுத்த விஷப்புழு ஜெயலலிதா சிம்மாசனத்தில்! கற்பனை ஊழல் சேறு அள்ளி வீசப்பட்ட ராசா சிறக் கொட்டடியில்! இதுதான் இந்த கேடுகெட்ட பார்ப்பனப் பன்றிகளால் ஆட்டுவிக்கப்படும் இந்தியா!
91-ல் ராஜீவ்காந்தியைக் கொன்றுவிட்டது தி.மு.க என்று ஊஊஊஊஊதிவிடப்பட்டது! நமது கூறுகெட்ட குப்பைகளும் அதை நம்பி ஜெயலலிதாவை சிம்மாசனத்தில் உட்காரவைத்து, பிறகு குத்துதே குடையுதே என்று அலறின!
சந்திராசாமி என்னும் பார்ப்பன சாமியார் நாய் விநாயகர் பால் குடிக்கிறார் என்று புரளியை கிளப்பிவிட்டது! அப்போதும் நம்ம குப்பைகள் அப்படியே நம்பி பிள்ளையார் சிலைகளின் வாயில் பால் ஸ்பூனை வைத்து தினித்தன!
இப்போது மீண்டும் அதே பார்ப்பனப் பன்றிகள் 'ஜெ'வை கீழேயும், மச்சான் நரேந்திரமோடி குமபலை மேலேயும் உட்கார வைக்க 1760000000000000000000000000000000000000000000000 என்று எண்ணிக்கை தெரியாத பூஜ்யங்களைப் போட்டு நம்ம படிச்ச கூமுட்டைகளை முட்டாளாக்கி, வாக்குகளை ஏமாற்றிப் பறித்துவிட்டது. எங்க கூமுட்டைகள் இப்போ அய்யய்யோ தப்பு பண்ணிட்டமே என்று புலம்ப ஆரம்பிச்சுவிட்டதுகள்!
நேத்து விழுந்த அதே பள்ளத்தில் இன்றும் விழுவதே தமிழனின் குருட்டுத்தனமாகிப்போனது! இந்தத் தமிழனை ஏமாற்றுவது பார்ப்பனப் பன்றிகளுக்கு ஒன்றும் சிரமமில்லாமல் போவிட்டது!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…