’சுடிதார் எஸ்கேப்’ புகழ் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது, அவரது பல படங்களையும் ஊடகங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தின. ஏற்கெனவே ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி வந்த ராம்தேவுக்கு இவை பெரிதும் பயன்பட்டன.
அதில், மூச்சை நன்கு உள்ளிழுத்து, வயிற்றைக் குழி விழுந்தது போல் காட்டும் படம் கூட பெரிய அளவு பிரபலமாகவில்லை. காரணம், சிறுவயதில் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக வந்து, 2 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, மேஜிக் ஷோ செய்யும் எளிய வகை நிபுணர்கள் காட்டும் தண்ணீரை நிறையக் குடித்து பம்புசெட்டு போல வெளியே விடுதல், பேப்பர் மேஜிக் போன்ற வித்தைகளில் ஒன்றுதான் வயிற்றை உள்ளிழுத்துக் காட்டி வியப்பூட்டுவதும்!
அடப்பாவிகளா! நம்ம வைகைப் புயல் வடிவேலு, ”சிங்கார வேலன்” படத்திலேயே இந்த வேலையெல்லாம் காண்பிச்சுட்டுட்டாரே! அப்ப அவரையெல்லாம் ராம்தேவுக்கு முன்னோடின்னுல்ல சொல்லணும் என்று யோசித்துக் கொண்டேன்.
நேற்று பாத்த youtube காணொளி ஒன்றில் விழிகள் வியக்க ஒரு மனுசன் பண்ணதைப் பார்த்தா, ”இவர்லாம் இந்தியாவுக்கு வந்து யோக குருவானா... ராம்தேவ் ஒரு தீவைத் தானே விலைக்கு வாங்கினார். இவர் இந்திய தீபகற்பத்தையே விலைக்கு வாங்கிடுவார்’னு நெனச்சுக்கிட்டேன்.
அதில், மூச்சை நன்கு உள்ளிழுத்து, வயிற்றைக் குழி விழுந்தது போல் காட்டும் படம் கூட பெரிய அளவு பிரபலமாகவில்லை. காரணம், சிறுவயதில் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக வந்து, 2 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, மேஜிக் ஷோ செய்யும் எளிய வகை நிபுணர்கள் காட்டும் தண்ணீரை நிறையக் குடித்து பம்புசெட்டு போல வெளியே விடுதல், பேப்பர் மேஜிக் போன்ற வித்தைகளில் ஒன்றுதான் வயிற்றை உள்ளிழுத்துக் காட்டி வியப்பூட்டுவதும்!
ஆனால், பிரபலமான மற்றொரு படம் - இரண்டு கால்களையும் பாம்புபோல் பின்னி நிற்கும் படமாகும். பல பேர் இதைப் பார்த்தே இவர் பெரிய யோகா வித்தகர், உண்மையான சாமியார் என்று பேசிக் கொண்டார்கள்.
நேற்று பாத்த youtube காணொளி ஒன்றில் விழிகள் வியக்க ஒரு மனுசன் பண்ணதைப் பார்த்தா, ”இவர்லாம் இந்தியாவுக்கு வந்து யோக குருவானா... ராம்தேவ் ஒரு தீவைத் தானே விலைக்கு வாங்கினார். இவர் இந்திய தீபகற்பத்தையே விலைக்கு வாங்கிடுவார்’னு நெனச்சுக்கிட்டேன்.
ஆனா, இவர் விவரமில்லாமல், ‘வயித்துக்காக மனுசன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு’ என்பதைப் போல, வயிற்றுக்காக உடலைச் சுருக்கி, டென்னிஸ் மட்டைக்குள் புகுந்து வெளிவருகிறார். இதெல்லாம் செஞ்சா நம்ம ஊரில் இவர்தான் பெரிய தில்லாலங்கடி!
கருத்துகள்