முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினமலரின் நிர்வாணக் குதியாட்டம்!

(இந்த இடுகையை முழுதாகப் படிக்கவும், இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணவும் மேலே உள்ள தலைப்பை ஒரு முறை சொடுக்கவும்.)

"மூடநம்பிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்."
"மத நம்பிக்கைகள் என்பது வேறு; மூட நம்பிக்கைகள் என்பது வேறு"
கடவுள், மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் போது இப்படியெல்லாம் பலர் உதார் விடுவதைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், மூடநம்பிக்கைகளும் மத நம்பிக்கைகளும் வேறுவேறானவை அல்ல.. மூடநம்பிக்கைகள் தான் மதத்திற்கான வருவாய், கூட்டம் சேர்க்கும் காரணிகள் என்பது நாம் அறிந்ததே!

அதற்கான இன்னொரு சாட்சி - தினமலரின் இந்த வீடியோ செய்திக் காட்சி!

சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அரசு நிறுவனமான "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" * குழந்தைகளுக்கான மூன்று நாள் அறிவியல் முகாம் ஒன்றை நடத்தியிருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளின் ஊடாக 'இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பான FIRA' -வின் செயலாளரும், நாடறிந்த மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும், 'மந்திரமா? தந்திரமா?' செயல் விளக்க வித்தகரும், பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியருமான நரேந்திர நாயக் அவர்களின் அறிவியல் விளக்க நிகழ்ச்சியும், பயிற்சியும் நடைபெற்றுள்ளது.

ஒரு நாள் அவர் எடுத்த வகுப்பிலேயே, பகுத்தறிவை - கேள்வி கேட்கும் ஆர்வத்தை குழந்தைகள் மத்தியில் அறிமுகப்படுத்தியதுமே அவர்களின் சிந்தனைப் போக்கில் மாற்றம் தென்படுகிறது. தான் கொண்ட மூடக் கருத்துகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் வயதானவர்களை விட, புதிதாக எதையும் கற்கும் குழந்தைகளிடம் பகுத்தறியும் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தினாலே போதும் எது சரியென்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதற்கு சரியான உதாரணமாகத் தான் இந்நிகழ்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், இப்படியெல்ல்லாம் அறிவு வந்துவிட்டால் ஆகுமோ பார்ப்பனக் கூட்டத்துக்கு... ? பாருங்கள்.. சிண்டைப் பிடித்துக் கொண்டு தினமலர் நிர்வாணக் குதியாட்டம் போடுவதை!
'பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கிறார்களாம்',
'பிஞ்சுகள் பேசிய விதம் சர்ச்சையைக் கிளப்பிய'தாம்,
'இந்து மதத்தையே விமர்சிக்கும் அளவிற்கு' பிஞ்சுகள் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்..
பொறுக்க முடியவில்லை பூணூல் கூட்டத்துக்கு!

அந்தக் குழந்தைகள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சி! தினமலர்க் கூட்டத்துக்கோ அது அதிர்ச்சி! அடிப்பீடத்துக்கே ஆப்பு என்றால் அலறித்தானே துடிக்கும் ஆரியக் கூட்டம். பெற்றோர்கள் எதிர்ப்பென்று பசப்புகிறது. பாவம் ஒரு குழந்தையின் பெற்றோரிடம் கூட எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியவில்லை போலும்! தினமலரின் குரல் மட்டுமே அவலமாய் ஒலிக்கிறது! நமக்கு சிரிப்புத் தான் வருகிறது.

நீங்களும் கேளுங்கள் அந்தப் புலம்பலை! இனியாவது தினமலருக்கு சப்பைக்கட்டு கட்டும் கூட்டத்தார் புரிந்துகொள்வார்களா? இந்தக் கூட்டம் தான் குழந்தைகளுக்கென "சிறுவர் மலர்" போடுகிறதாம். இவர்கள் வளர்க்கும் சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவொன்றே எடுத்துக்காட்டு அல்லவா? தினமலரின் வயிற்றெரிச்சல் காட்சியைப் பார்த்துச் சிரியுங்கள்!


*குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் கீழ் சென்னை கோட்டுர்புரத்தில் இயங்கும் நிறுவனத்தின் பெயர் "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" என்பதாகும். (திருச்சியில் அண்ணா பெயரில் இதே போன்ற மையம் உள்ளது.) அதில் உள்ள ஒரு பகுதியே பிர்லா கோளரங்கம் எனப்படும் வான்காட்சியகம். தினமலர் காட்டும் காணொளியில் கூட "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" என்ற பெயர்ப்பலகைதான் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் பெரியார் பெயரைச் சொல்லத்தான் ஆரிய நாக்குக் கூசுமே! ஈ.வெ.ரா என்றுதான் அந்து போன மணிக் கூட்டம் எழுதும். அதனால் தான் இந்த இருட்டடிப்பு! பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமாம்!
இது தினமலர் தான் என்றில்லை தோழர்களே! சன் டிவி கும்பலும் இப்படித் தான் சொல்லி வந்தது. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பெயரை போடும் போதும் பிர்லா கோளரங்கம் என்றுதான் போட்டு வந்தது; திரு. அய்யம் பெருமாள்- பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநரே அன்றி பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் அல்ல. நமது எதிர்ப்பைப் பதிவு செய்ததும் இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. ஆனால் தினமலர் திருந்துமோ?
நன்றி: தினமலரில் வந்த இச்செய்தியை எமக்கு அறியத்தந்த தம்பி சிறீதருக்கு! அதன் பின்னர் தான் இதுபற்றி பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களுக்கும், பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் தகவல் அளித்தோம்.
ஆனால் அதன் முன்னரே தகவல் அறிந்திருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி அதற்கான பணிகளை முடுக்கியிருந்தார். இது தொடர்பான தமிழர் தலைவரின் அறிக்கை இன்றைய விடுதலையில்!

கருத்துகள்

அக்னி பார்வை இவ்வாறு கூறியுள்ளார்…
அவாள் எல்லாம் தெளிவாக தான் இருக்காங்கா
ஆட்டையாம்பட்டி அம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
///"மூடநம்பிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்."
"மத நம்பிக்கைகள் என்பது வேறு; மூட நம்பிக்கைகள் என்பது வேறு"
கடவுள், மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் போது இப்படியெல்லாம் பலர் உதார் விடுவதைப் பார்த்திருப்பீர்கள்.///


அவாள் கூறும் பொய்யை நம்பும் நமது சத்சூத்திர கண்மணிகளுக்கு புரியும்படி மேலும் விளக்கமாகவும் சொல்லுங்கள். நன்றாக கவனித்தால் இந்த மாதிரி மடத்தனத்தை எந்த ஒரு பாப்பானும் பாப்பாதியும் செய்வதில்லை. அப்புறம் ஏன் இந்த தினமலம பத்திரிக்கைக்கு கோபம.

வருண்சிரமத்தின் ஆணிவேரே மத நம்பிக்கைகள் என்ற போர்வையுள் உள்ள மூட நம்பிக்கைகள் தானே? ஆடு நனைகிறதே என்று தினமலம் ஓநாய் அழுகிறது....மண்ணிக்கவும் ஊளை இடுகிறது. அதுக்கு வழக்கம் போல நமது சத்சூத்திர கண்மணிகள சொம்பு தூக்குகிறார்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
kudumi oolam
அ.முத்து பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பு தோழர் பிரின்சு ...

தங்களின் பதிவு தினமலர் கோஷ்டியின் பூணூல் திமிரை மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது ...
நன்றி கூறுகிறேன் ....

பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது ....

ஆசிரியர் அவர்களின் அறிக்கை அவருக்கு நிம்மதியை அளித்திருக்கும் ...

தங்களுக்கும் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களுக்கும் மீண்டும் நன்றிகள் ....
Athisha இவ்வாறு கூறியுள்ளார்…
தோழர் பிரின்சு .. சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது..

அருமையான பதிவு.. அதைவிட நல்ல நகைச்சுவையான வீடியோ! தினமலர் இதுபோல அடிக்கடி நிறைய வீடியோக்கள் போட்டால் சிரிப்பொலி , ஆதித்யா சேனல்களுக்கே வேலையில்லாமல் போய்விடும்..

பகிர்வுக்கு நன்றி
ஜோ/Joe இவ்வாறு கூறியுள்ளார்…
முன்பே இந்த தினமலர் செய்தியை பார்த்தேன் ..சிரித்தேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam