முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரத்தச் சாட்டை எடுத்தால்...

மே நாளையொட்டி பதிவிட வேண்டும் என்று நினைத்து இந்தப் பாடலைத் தேடித் தேடி பின்னர் ஒரு வழியாக cooltoad.com-இல் கண்டெடுத்தேன். பின்னர் பாடல் வரிகளை எழுதி இப்போதுதான் பதிவிட முடிகிறது. "எரிமலை எப்படிப் பொறுக்கும்?" - இந்தப் பாடலை எனக்கு அறிமுகம் செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. அட, பழக்கம் எல்லாம் கிடையாதுங்க... ஒரு முறை தொலைக்காட்சியில்(சன் ஆக இருக்கக்கூடும்) சிறப்பு நிகழ்ச்சி நடக்கும் நாள் ஒன்றில் (எந்த நாளென்று நினைவில்லை) (அப்போதைய) கவியரசு வைரமுத்து பங்கேற்கும் "பாட்டு பட்ட பாடு" என்ற அறிவிப்பு கேட்டுக் காத்திருந்து பார்த்த நிகழ்ச்சி.

சென்சார் துறையின் கத்திரிகளால் வெட்டப்பட்ட அல்லது அதற்காக மாற்றப்பட்ட பாடல்கள் பற்றிய நிகழ்ச்சி அது. அவை குறித்து விரிவான தனிப்பதிவொன்றையும் அப்பாடல்களுடனான எனது அனுபவத்தையும் எழுதலாம். எழுதுவேன். அப்படி வந்த பாடல்களின் வர்சையில் சிவப்பு மல்லி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலையும் பற்றிக் குறிப்பிட்டார் வைரமுத்து. நான் அப்போதுதான் அந்தப் பாடலை முதல் முதலாகக் கேட்கிறேன். நெருப்புத் தெறிக்கும் அந்த வரிகளில் அப்போதே நரம்பு முறுக்கேறியது எனக்கு. அன்று முதல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகிப்போனது இப்பாடல்.

"எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?" -
இந்த வரிகளுக்கு அடுத்து வந்த வரியை சென்சாரின் கத்திரி காவு வாங்கியிருக்கிறது. இதோ கவிப்பேரரசின் கணீர் குரலில் இதைப் படித்துப் பாருங்கள்.
"எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்.. இந்த வரிகளுக்கு அடுத்து 'ரத்தச் சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்' என்று எழுதியிருந்தேன். நான் எழுதியிருந்த வரியில் 'ரத்தச் சாட்டை' என்ற சொல்லில் வன்முறை இருப்பதாக சென்சார் துறை கருதியது. பாடல் பதிவாகி படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில்.. இந்தப் பாடலின் வரிகளை சென்சாருக்காக பின்வருமாறு மாற்றினேன். 'சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்."

முதலில் வந்த இசைத் தட்டுகளில் 'ரத்தச் சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்' என்ற வரி தான் இடம்பெற்றிருந்ததாம். எனக்கு அந்த வரியோடு பாடுவதில் தான் விருப்பம். நான் பாடும்போதெல்லாம் ரத்தச் சாட்டையைத் தான் எடுப்பேன். இருப்பினும் அந்தப் பாடல் கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் பதிவிடுகிறேன். இப்போதைக்கும் 'சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்' என்ற வரியுடன் பாடல் வரிகளைப் பதிவிடுகிறேன். பாடலையும் இணைத்துள்ளேன்.
கேளுங்கள்... உழைப்பாளர் தின சிறப்புப் பாடல்.


(இப்போது esnips இணையதளம் இல்லை; அதனால் sound cloud இணைப்பு. சேர்த்தது: 18-10-2016)


படம்: சிவப்பு மல்லி
இயக்கம்: இராம.நாராயணன்
பாடலாசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து

ஆண் 1:
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண் 2:
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

(பறை இசை)

சரணம் 1: (ஆண்-1)
ரத்தம் இங்கே வேர்வையாக
கொட்டிவிட்டது;
உயிர் வற்றிவிட்டது
காலம் இங்கே ஊமைக் கையைக் கட்டி விட்டது;
கண்ணீர் சுட்டுவிட்டது

ரத்தம் இங்கே வேர்வையாக கொட்டிவிட்டது;
உயிர் வற்றிவிட்டது
காலம் இங்கே ஊமைக் கையைக் கட்டி விட்டது;
கண்ணீர் சுட்டுவிட்டது

ஏரு பிடித்தவர்
இருமி இளைத்தவர்
வேர்வை விதைத்தவர்
வெயிலில் அறுத்தவர்
தட்டிக் கேட்கும் காலம் வந்தால்
தர்மங்கள் தூங்காது.

குழு:
மேதினம் உழைப்பவர் சீதனம்
மேதினம் உழைப்பவர் சீதனம்

ஆண்-1
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
குழு:
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

சரணம் 2: (ஆண்-2)
எழுதியபடி தான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு!
இளமை உன் தோள்களில் இருக்கும்போதே
எது நிசம் என்பதை எட்டிவிடு

எழுதியபடி தான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு!
இளமை உன் தோள்களில் இருக்கும்போதே
எது நிசம் என்பதை எட்டிவிடு

காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்
காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்

குழு:
மேதினம் உழைப்பவர் சீதனம்
மேதினம் உழைப்பவர் சீதனம்

ஆண் 1:
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

(பறை இசை)

சரணம் 3: (ஆண் 1)
ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே முத்துக் குளிக்கும்;
பின்பு செத்துப் பிழைக்கும்
உழவன் வீட்டுத் தேனும் கூட உப்புக் கரிக்கும்
அதில் கண்ணீர் மிதக்கும்

செருப்பென உழைத்தவர்
வரப்பென இளைத்தவர்
சுடச்சுட அழுதவர்
அடிக்கடி இறந்தவர்

வெற்றிச்சங்கம் ஊதும்போது
தர்மங்கள் தூங்காது

ஆண்:
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

குழு:
மேதினம் உழைப்பவர் சீதனம்
மேதினம் உழைப்பவர் சீதனம்

மேதினம் உழைப்பவர் சீதனம்
மேதினம் உழைப்பவர் சீதனம்

(ஆண் 1 - டி.எம்.சவுந்தரராஜன் | ஆண் 2: எஸ்.என்.சுரேந்தர்)


இன்று, ரத்தச்சாட்டையுனேயே நல்ல தரத்தில் இப்பாடலின் காணொளி கிடைக்கிறது. பாருங்கள். (சேர்த்தது: 18-10-2016)இப்பாடல் மற்றும் சிவப்பு மல்லியில் நடித்தது குறித்து நடிகர் சந்திரசேகரின் பகிர்வு இங்கே.

இது குறித்த பதிவை இணையத்தில் இட வேண்டும் என்ற சிந்தனையுடன் நான் தேடியபோது முன்பே இது குறித்து இணையத்தில் சில செய்திகள் இருப்பது தெரிந்தது. அவற்றின் இணைப்புகள் இதோ: 1 | 2

அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்!

கருத்துகள்

அக்னி பார்வை இவ்வாறு கூறியுள்ளார்…
லெட்டாஅனலும் லேட்டஸ்டு அப்பு
chandru / RVC இவ்வாறு கூறியுள்ளார்…
உணர்ச்சி மிகுந்த பாடல் பிரின்சு. இந்தப் பாடலைக் கேட்கும்போது பாரதிதாசனின் "பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறந்தது, சிறுத்தையே வெளியில் வா" பாடலும் ஞாபகம் வரும்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…