
தமிழர் தாயகத்துக்கான வீரஞ்செறிந்த போராட்டத்தின் இன்னொரு வடிவம் தான் திலீபன்! ஆயுதம் தூக்காத வீரம்! அஹிம்சை, அஹிம்சை என்று வாய் கிழியக் கத்தும் இந்திய அரசுக்கெதிரான அறவழிப்போராட்டம்...!
காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் வென்றது! திலீபனது போராட்டம் அவன் உயிரைக் குடித்தது!!
காரணம் காந்தி போராடியது ஆங்கிலேயர்களை எதிர்த்து...! திலீபனின் போராட்டமோ பாழும் இந்தியத்தை எதிர்த்து! நியாயமான எதிரியுடன் தான் நியாயமாகப் போராட வேண்டும்! அதைக் கற்றுக் கொடுத்தது திலீபனின் வீரச் சாவு!
தியாகத் திருவுரு திலீபனின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட ஆவனப்படம் காணக்கிடைத்தது. (நன்றி: வளரி.)

அதில் திலீபன் ஆற்றும் உரை 22 ஆண்டுகள் கழித்தும், நமது இன்றைய சூழலுக்கு அவா ஆற்றிய உரை என்று கூறத்தக்க அளவில் பொருந்திப் போகிறது.
"இனியும் ஆயுதம் எடுப்போம்... அந்நிலை வரும். எம் தேச விடுதலைக்காக எந்த தியாகத்தையும் செய்வோம்" என்றொலிக்கும் அந்தக் குரல் மீண்டும் மீண்டும் நாம் கேட்டு மனதில், புத்தியில், உணர்வில் பதிய வைக்க வேண்டிய குரலாகும்.
நீங்களும் கேளுங்கள்!
திலீபனின் தியாகம் வரலாற்றில் சாகாது!
திலீபனின் தியாகத்திற்குப் பலனின்றிப் போகாது!!
கருத்துகள்