Wednesday, June 18, 2014

தேங்காய் உரிக்கும் இயந்திரம்

எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள். இரண்டுமே நான் நட்டவை! ஒன்று எதிர்வீட்டு பாண்டியுடனும், மற்றொன்று பக்கத்துவீட்டு திலக்குடனும் கூட்டணி வைத்து நட்டது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் எங்கள் வீட்டில் தென்னைக்கு எப்படியும் 18 வயதுக்குக் குறையாமல் இருக்கும். குறைந்த உயரத்திலேயே சுவையான இளநீரையும், தேவைப்படும்போது தேங்காய்களையும் தந்து கொண்டிருந்தன இரண்டு மரங்களும்! தொடக்கத்தில் அரிவாள் மூலம் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த எங்கள் அய்யா, பின்னர் தேங்காய் உரிப்பதற்கென்றே உள்ள கருவியை வாங்கி வந்தார். தொடக்கத்தில் ஆர்வத்துடன் அதில் தேங்காய்கள் உரிப்பதற்குத் தாவுவேன். எப்போதும் அய்யா தான் உரிப்பார். ஆனால், நாளடைவில் அதில் எனக்கு ஒருவித பயம் தோன்றத் தொடங்கியது. கையை வைத்து குத்தி, அழுத்தி, கம்பியை நிமிர்த்தினால், மட்டை பிய்ந்து வரும்.

கம்பியில் குத்தி அழுத்துவதில் கொஞ்சம் பிசகினாலும், ஸ்லிப்பாகி கருவியின் கூர்முனைப்பகுதி வயிற்றில் குத்திவிடும் ஆபத்து உண்டு. எனவே நீங்கள் தேங்காயே உரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த கருவியில் கைவைக்காதீர்கள் என்று எங்கள் அய்யாவிடம் சொல்லிக்கொண்டேயிருப்பேன். ஆனால், வழக்கம் போல் தன்மேல் உள்ள நம்பிக்கையில் அவர் கேட்க மாட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்போதோ செய்வோருக்கே இப்படி பயம் என்றால், இதே தொழிலாய் இருப்போரை நினைத்தால்....

இதற்கு வேறு வழி இருக்க வேண்டுமே என்று தேடியிருக்கிறேன் முன்பு! இன்று கண்ட இந்த காணொளி மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. எங்கள் வீட்டிற்கு இது தேவைப்படாது என்றாலும், எத்தனையோ பேருக்கு பாதுகாப்பாக இருக்கும் அல்லவா! இத்தகைய கண்டுபிடிப்புகள் அல்லவா நாட்டிற்கு அவசியம்! உருவாக்கியவர்களை அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். இரவாகிவிட்டதனால், காலையில் பாராட்டிக் கொள்ளலாம். இப்போதைக்குப் பரப்புவோம்.. என்று உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். 

Tuesday, May 20, 2014

புரட்டர்களின் வெற்றி! அல்லது பத்ரிகா தர்மம்

புரட்டுகளின் மீது தான் முரட்டுத் தன வெற்றி என்பதால், இன்னமும் அந்த பொய்களை மெயிண்டெய்ன் செய்து கொண்டே இருக்கிறார்கள். ”மோடியின் 10” என்று 18-ஆம் தேதி தினமலர் பட்டியல் போட்டிருக்கிறது. இரண்டாவது இரும்பு மனிதர் என்று கட்டுரை வெளியிட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப குஜராத்-தை முதன்மை மாநிலமாக்கினார் என்று வாய் கூசாமல் பொய் சொல்லவும், கை கூசாமல் எழுதவுமாக இருக்கிறார்கள்.

கையில் விளக்குமாறுடன் ஏதோ ஒரு உழைப்பாளியின் படத்தில் தலையை வெட்டி மோடியின் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட படத்தைப் பற்றி பலறை எழுதப்பட்டும் கூட இன்னமும் உண்மையான படம் போல அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


பொறியாளர் பெண்ணிடம் கடலை போடுவதற்காக தனியாக உளவுத் துறையில் ஒரு பிரிவே வைத்திருந்த மோடிதான் சுத்தமான அரசு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று அடித்துச் சத்தியம் செய்கிறது தினமலம். அரசுப் பணியில் அய்.ஏ.எஸ்-ஆக இருப்பவர்கள் அரசு சம்பளத்தில், அதிகாரத்தில் இருந்துகொண்டே மோடியின் அரசியல் பணிக்கு எப்படி பயன்பட்டார்கள் என்பதையும் கூச்சநாச்சமின்றி படம்போட்டு பெருமை கொள்கிறார்கள்.

குஜராத் வளர்ந்த மாநிலம் என்று பீலா விட்டு ஏமாற்றியது போல, இந்தியாவையும் வளர்ந்த நாடு என்று நம்பவைக்க அந்த கும்பல் டெல்லியில் டேரா போடுகிறதாம். அக்கறைப் பச்சை என்று ஏமாந்து இப்போது ஓட்டுப் போட்டது போல, வயிற்றில் மோடி பிராண்ட் ஈரத் துணியைக் கட்டிக் கொள்ளக் கூட வக்கிலாமல் காய்ந்து போய்க் கிடக்கும் போதும் மோடி ஆட்சியில் வளர்ச்சி என்பதை நம்பவைக்கும் பித்தலாட்டப் பிரச்சாரத்திற்கு தலையாட்டியபடி மடிவான் ஹிண்டுட்வைஸ்டு இந்தியன்! அப்போது மோடியின் வெற்றிகரமான மக்கள்தொகைக் குறைப்பு நடவடிக்கை குறித்து இதே தினமலம் படம் போட்டு விளக்கம் தரும். வாழ்க ஜனநாயகம்! வாழ்க பத்ரிகா தர்மம்!!

Saturday, May 03, 2014

தகுதி - திறமை கூப்பாடு ஏன்?

இவய்ங்க தகுதி, திறமையின் லட்சணம் இதுதான். இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களே, இட ஒதுக்கீடு என்பதொன்று இருந்தும், நமக்கு அதைக் கேட்பதற்கு உரிமையும், அவர்களுக்கு அதை இட்டு நிரப்ப வேண்டிய கடமையும், சரியில்லையென்றால் முறையீடு செய்யும் வாய்ப்பும் இருக்கும் போதே எத்தனை தில்லு முல்லுகள், முடிச்சவிக்கித் தனங்கள் நடக்கின்றன, என்று பாருங்கள்!


பி.ஹெச்.டி முடித்தாலும் நமக்கு தகுதி, திறமை வராது என்பான். முடிக்காதவனுக்கெல்லாம் வேலை போட்டுக் கொடுப்பான். இது தான் பார்ப்பனப் பண்ணையம். இதை விட மோசமான நிலையிலிருந்து இவ்வளவு தூரம் மீண்டிருக்கிறோம்.. நம் உரிமையைக் கேட்க துணிந்திருக்கிறோம் என்றால், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் நினைப்போம்.

நம் உரிமைகளை வென்றெடுக்கும் வரை இந்த மொள்ள மாரித் தனங்களுக்கெதிராகப் போராடுவோம்..

அய்.அய்.டி. பணி நியமனத்தின் அவலட்சணத்திற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு இதோ,,,, பாருங்கள்....Related Posts with Thumbnails