முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டே... உங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? - இந்து முன்னணி புரட்டுகளுக்கு பதில் -

ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கு ஏழை எளிய இஸ்லாமியருக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது என்ற இந்துமுன்னணியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது பற்றி அனைவரும் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், இந்த வெட்கங்கெட்ட இந்து முன்னணி கும்பல், உயர்நீதிமன்றத் தீர்ப்பு நகலை இணைத்து, வாட்ஸ் அப்பில் என்ன பரப்பி வருகிறது பாருங்கள்.

//ரம்ஜான் அரிசி இந்துமுன்னணி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தவறான தகவல்

இந்துமுன்னணி அமைப்பு வழக்காக ஏற்காமல்
அதன் மாநில செயலாளர் குற்றாலநாதன் தொடுத்த தனிநபர் பொது நல வழக்காக ஏற்று
தமிழக அரசு விளக்கமளிக்க உத்திரவிட்டு மே 7 ம் தேதி மீண்டும் விசாரணை

இதோ உயர்நீதிமன்றம் உத்திரவு நகல்.
நீங்களே படித்து கொள்ளுங்கள்.
உத்திரவை நீதித்துறை மீது திணிக்கிறதா சில ஊடகங்கள் ?
தமிழகத்தில் சில ஊடகங்களே நீதிபதியாவது வேடிக்கை//

நமது பதில்:

ஆம், இந்து முன்னணியின் கெட்ட நோக்கம் கொண்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கேடுகெட்ட மனப்பான்மையுடனும், கொடுங் குணத்துடனும் இந்து முன்னணி மதவெறி கும்பல் தொடுத்த வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடியைத் தாங்க முடியாமல், வெட்கங்கெட்டுப் போய் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொய்யாக அழிச்சாட்டியம் செய்கிறார்கள் இந்து முன்னணி நச்சுக் கிருமிகள்.இந்து முன்னணியின் நோக்கம், ஏழை மக்களுக்கு அரிசி பெற்றுத் தருவதாக இருந்தால், அனைவருக்கும் அரிசி தாருங்கள் என்று தான் கேட்டிருக்க வேண்டும். ஆனால், ஏழை, எளிய இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்குவதைத் தடுப்பது தான் அதனுடைய முதன்மையான நோக்கம். அந்த இழி நோக்கத்துக்குச் சப்பைக் கட்டு கட்டுவது போலவும், வழக்கைத் தக்க வைக்கவும், வழக்கு ஏதோ இந்துக்கள் மீதான நல்ல நோக்கத்தில் தொடுக்கப்பட்டுள்ளது போலவும் பாவலா காட்டுவதற்காக, அனைவருக்கும் அரிசி வழங்குங்கள் என்ற கோரிக்கை (prayer)யையும் தங்கள் வழக்கில் சேர்த்துள்ளார்கள். இது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று.

மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த கெடு நோக்கத்தைப் புரிந்து கொண்டு, தங்கள் தீர்ப்பில் ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்கக் கூடாது என்னும் கோரிக்கையை முற்றாக நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளனர்.

காண்க... பாரா 7:

7.It appears that the petitioner’s organizations is proceeding on religious lines and in the light of the above cited decision of the Hon’ble Supreme Court and the facts and circumstances of the case, the first portion of the prayer sought for by the petitioner, is liable to be rejected and accordingly, rejected.

தமிழில் சொல்ல வேண்டுமானால், மனுதாரரின் அமைப்பு, மதவாதப் பார்வையோடிருப்பது தெரிகிறது என்று இவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டதையும் தெளிவாகத் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒளியில் மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படவேண்டியது, எனவே தள்ளுபடி செய்வதாகவும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படி தெளிவாக தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இணைத்துவிட்டு, பாருங்கள் அப்படியெல்லாம் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வில்லை என்று அப்பட்டமாக புரட்டல் வாதம் செய்கிறார்கள் என்றால், இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் எல்லாம் ஆங்கிலம் தெரியாதவர்கள் என்றோ, முட்டாள்கள் என்றோ, சட்டம் தெரியாதவர்கள் என்றோ அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே பொருள். அல்லது ஆதாரம் என்று எதையாவது அனுப்பினால், அதை படித்துப் பார்க்காமல் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று தானே மமதை கொண்டிருக்கிறார்கள். இத்தனைக் காலமும் அதைத் தானே செய்துகொண்டிருந்தார்கள்.

போலி ஃபார்டேர்டு மெசேஜுகளாலும், மிஸ்டு கால்களாலும் தங்கள் ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும், கேடுகெட்ட இந்துத்துவ வைரஸ்கள் இந்நாட்டின் மதச் சார்பின்மையை, மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் கெடு நோக்கத்தைத் தீவிரமாகப் பரப்பி வருகிறார்கள்.

மனிதநேயச் சிந்தனையுடையோர், பெரியாரின் கருப்புச் சட்டைக்காரர்களும், நியாயமும், நீதியும், சட்டமும் தெரிந்த கருப்பு அங்கியினரும் இருக்கும் வரை இந்துத்துவ சங்கிகளின் பாச்சா பலிக்காது.

இந்து முன்னணி தொடுத்த வழக்கு எண்: W.P.No.7500 of 2020. அதையும் இந்து முன்னணி என்பதெல்லாம் ஒரு கணக்கே இல்லை என்கிற கருத்தில் தனி நபர் வழக்காகத் தான் நீதிமன்றம் கருதியது. அந்த வழக்கின் கோரிக்கையின் முதல் பகுதியையும் தள்ளுபடி செய்துவிட்டது.

நீதிமன்றம் மே 7-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்திருப்பது - அனைவருக்கும் அரிசி வழங்க வேண்டும் என்ற கோரி சதீஷ்குமார் என்பவர் தொடுத்துள்ள இன்னொரு வழக்கையும், இந்து முன்னணியின் குற்றாலநாதன் தொடுத்துள்ள மேற்சொன்ன வழக்கின் கோரிக்கையின் இரண்டாவது பகுதியையும்!

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு ஏழை, எளியோருக்கு ரேஷன் மூலம் அரிசி வழங்கிவருகிறது என்பதாலும், அதிலிருக்கும் சட்டப்படியான சிக்கல்களாலும் அந்த வழக்கின் போக்கு எப்படி அமையும் என்பதையும் நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அதைப் பிறகு பேசுவோம்.

சுருக்கமாகச் சொன்னால், இந்து முன்னணி சங்கிகளின் குடுமி எதற்கு ஆடும் என்பது நமக்குத் தெரியாதா? அவர்களின் நோக்கம் ரம்ஜானுக்கான அரிசி வழங்கலைத் தடுப்பது! அதை நீதிமன்றம் ஒரே அடியாக அடித்து அவர்களின் கெடு நோக்கத்தைக் காலி செய்திருக்கிறது. அவ்வளவு தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam