முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வி.பி.பி-யில் வாங்கிய முதல் புத்தகம்

Dear Sir,
Kindly send me a copy of xxxx xxxxx xxxxxxx by V.P.P. at an early date and oblige.

Yours Sincerely,
xxx xxx xxx x

இந்தக் கடிதம் பலருக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கும்.

பள்ளியில் VPP Letter writing என்பது ஏறத்தாழ 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை வெவ்வேறு வடிவங்களில் தொடரக் கூடிய ஒன்று. இருப்பதிலேயே எளிமையானவை என்றால் அதில் முதலிடம் இந்த VPP Letter க்கு உண்டு. சொளையாக 10 மதிப்பெண்... கொஞ்சம் பிசகினாலும் 5 அல்லது 6 நிச்சயம். அதனால் அதற்கு மவுசு உண்டு. மதிப்பும் உண்டு. Value Payable by Post என்று முழுமையாக எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை என்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று ;)

ஆனால், அந்தக் காலகட்டத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி. விபிபி-யில் என்னால் புத்தகம் வாங்க முடிந்ததே இல்லை. வி.பி.பி.-யில் அனுப்ப இயலாது என்றே பதிப்பகங்களில் விளம்பரங்களில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன.

பின்னாளில் அமேசான், பிளிப்கார்ட் வகையறாக்களில் வாங்கத் தொடங்கியபோது, அவர்கள் வழங்கிய Cash on Delivery வாய்ப்பு ஏறத்தாழ விபிபி மாதிரி தான்.

கடந்த வாரம் Cellars of the Inferno புத்தகத்தை வாங்க nastik nation தளத்துக்குச் சென்றேன். அங்கே விபிபி வாய்ப்பு இருந்தது. விடுவேனா?

வாங்கினேன். என் வாழ்க்கையின் முதல் விபிபி புத்தகம்!


(என்ன ஒரு சோகம்... முழுமையாக pack செய்யாமல் காக்கி பேப்பர் சுற்றி அனுப்பியதால் மழைக்காலத்தின் சுவட்டோடு வந்து சேர்ந்தது. சுடச் சுட புத்தகம் வேண்டுமென்பதால் பக்கம் பக்கமாய் இஸ்திரி போட்டு எடுத்து வைத்திருக்கிறேன்.)

#Nostalgia
#VPP
#மழை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam