முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாரிடமும் நல்ல பெயரெடுக்க அவசியமில்லை

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் நேற்று நடந்து கொண்ட விதம் பற்றி நமக்கு மாற்றுக் கருத்தும், விமர்சனமும் உண்டு. அதை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய கடமை கொண்ட திராவிடர் கழகத் தலைவர் நேற்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.


இது யாருக்கு உவப்பானது, யாருக்கு வெறுப்பானது என்பதையெல்லாம் யோசித்து கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் திராவிடர் கழகத்துக்கு ஒரு போதும் இல்லை.

அதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவோர், மாற்றுக் கருத்து கொண்டோர் தாராளமாக தெரிவிப்பதை யாரும் எதிர்க்க முடியாது. தரம்தாழ்ந்த விமர்சனங்களும் வரும் என்பது நமக்குப் புதிதல்ல.

அரசியல் தளத்தில் இயங்கும் இயங்கங்களுள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பெரிதும் செயல்படுத்தக் கூடிய இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்பதன் காரணமாகத் தான், அது வலுவோடிருக்க வேண்டும் என்றும், ஆட்சியில் அமர்ந்து திராவிட இயக்கக் கொள்கைகளை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் வடித்தெடுக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால் ஆதரிக்கிறோம்.

பா.ஜ.க - தி.மு.க கூட்டணி ஏற்பட்ட 1999, 2001 தேர்தல்களைத் தவிர மிகப் பெரும்பாலான தேர்தல்களில் திமுகவுக்குத் தான் திராவிடர் கழகத்தின் ஆதரவும் இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் ஆதரிக்க நாம் கூட்டணி வைத்துக் கொண்டவர்களோ, தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்களோ அல்ல என்பதாலும், இது இயக்க, கொள்கை ரீதியான உறவின்பாற்பட்டது என்பதாலும் இவ்வுறவு கூட்டணி - ஆதரவு என்ற எல்லைகளைக் கடந்த ஒன்றாகவே இருந்து வந்தது; வருகிறது.

மற்றபடி, கொள்கை ரீதியிலான சறுக்கல்களோ, பிசிறுகளோ திமுகவின் நிலைப்பாடுகளில் இருக்குமாயின் அதை சுட்டிக்காட்ட, தேவைப்பட்டால் கண்டிக்க ஒருபோதும் தயங்கியதேயில்லை.

திமுகவுக்கு எது நல்லது என்று திராவிடர் கழகத்துக்குத் தோன்றுகிறதோ, அதை வெளிப்படுத்த யோசித்ததுமில்லை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்களைச் சார்ந்தது. கட்டுப்பாடு என்பதை ஒவ்வொரு சமயத்திலும் வலியுறுத்த திராவிடர் கழகம் தவறியதேயில்லை. கடமை, கண்ணியம் என்பதை விட அண்ணா சொன்னவற்றில் மூன்றாவதான கட்டுப்பாடு என்பது தான் முக்கியமானது என்று தந்தை பெரியார் பேசியதை மீண்டும் மீண்டும் நினைவூட்டி வந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

அதே வேளை திமுகவின் மீதான அவதூறுகளைத் தன்னுடையதாகக் கருதி, திமுகவே மவுனம் சாதித்த நேரங்களிலும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பதில் அளித்துள்ளார். இன்று திமுகவினர் பாடும் வசைகளை விட மோசமான வசைகளை திமுகவை ஆதரித்து வருவதற்காகவும் பெற்று வருபவர் அவரே!

திமுகவிற்குள்ளேயே கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட மு.க.அழகிரி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காகவும், அக்கருத்து மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதற்காகவும் மிக மோசமாக அழகிரி அவர்களால் அவச்சொல் பிரயோகம் செய்யப்பட்டது. அதையெல்லாம் அவர் கண்டுகொண்டதே இல்லை.

ஏனெனில், பெரும்பான்மை எண்ணம் என்று சொல்லப்படும் கருத்துகளுக்கு மாறாக உண்மை நிலை இருக்கும்போது, மக்களின் கருத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வதோ, செய்வதோ திராவிடர் கழகத்துக்குப் பழக்கமில்லாதது. அதே சமயம், மக்களின் கடும் எதிர்ப்பு கிட்டும் என்று தெரிந்தாலும், சரியெனப் படும் கருத்தைத் தெரிவிக்க அஞ்சியதில்லை. சமூக நலனன்றி வேறெந்த அளவுகோலையோ, மறு பயனையோ கருத வேண்டிய அவசியமில்லாத இயக்கம் என்பதால் இயல்பாக அமைந்த துணிச்சல் அது!

அவரது முன் கணிப்புகளையும், எதன்மீதும் தீவிரமான நுணுக்கமான ஆழமான புரிதலையும் மற்றவர்கள் ஏற்பதென்பது அவ்வளவு எளிதில் முடியாது. அந்தப் புரிதல் ஏற்படுவதற்கு சில காலமாகும். அது நமக்கும் தெரியும். அதனால் தான் நாமும் அத்தகைய எதிர்ப்புகளுக்கோ, சலிப்புகளுக்கோ விளக்கம் தந்து நேரத்தை வீணடிக்காமல், பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவோம். அனுபவப்பட்ட பின், தான் முன்பு சொன்னதை இப்போது தான் உணர்ந்திருக்கிறார்கள் என்பதையும் கூட தனக்கான பெருமையாகக் கருதாதவர் அவர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து எழுந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியையே ஆட்டிப்படைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் எடுத்த முயற்சிகளை முதலிலேயே அடையாளம் கண்டு சொன்னவரும் அவரே! அதற்கெதிராக குரல் கொடுத்தவரும் அவரே! எப்படி திமுகவின் கட்டுப்பாட்டுக்காக கருத்து கூறினாரோ, அவ்வாறே அ.இ.அதிமுகவிற்குள்ளும் கட்டுப்பாட்டைக் காக்கச் சொன்னார். அரசியல் ரீதியில் அதன் செயல்பாடுகளை தொடர்ந்து எதிர்த்து வந்தபோதிலும், தமிழக, இந்தியாவின் இன்றைய சூழலைக் கருத்திக் கொண்டு, அக்கட்சியை அழிக்க நினைக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதில் திராவிடர் கழகம் உறுதியாக இருக்கிறது.

தேர்தலில் எதிர்கொண்டு வீழ்த்துவது என்பது வேறு; பக்கத்து வீடு எரியும் போது பார்த்துச் சிரிப்பதென்பது வேறு.
உண்மையில் அந்தக் குறி, ஜெ. உடல் நிலை காரணமாக வீசிய காற்றில், (சூழலைப் பயன்படுத்தும் நோக்கில்) திசைதிரும்பிய ஒன்றே தவிர, அதன் முதல் இலக்கு திமுக தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எனில், இன்று அதிமுக காக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுவது, திமுகவைப் பொறுத்துவரை வருமுன் காப்பாகும். இதை திமுக ஏற்கலாம்; அல்லது மறுக்கலாம். ஒருவேளை சில அரசியல் அறிவாளிகள் கூறுவதுபோல ’ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி’ காட்டுகிறது திராவிடர் கழகம் என்றும் கருதலாம். அது அவரவர் புரிதலின் பாற்பட்டது.
அதிமுக உடையக் கூடாது, தமிழக சட்டமன்றம் ’இப்போது’ கலைக்கப்படக் கூடாது என்பவை வேறு. கொள்கை அடிப்படையில் திமுக ஆட்சி வரவேண்டும் என விரும்புவது வேறு.

அதனை சசிகலா ஆதரவு என்றும், அ.இ.அதிமுகவிற்குள் ஆர்.எஸ்.எஸ். ஆடிய ஆட்டத்தை எதிர்க்கும் வகையில், ஓபிஎஸ் அணியினரை எதிர்ப்பது திமுகவுக்கு எதிரான நடவடிக்கை என்பதாகவும் சிலரால் புரிந்துகொள்ளப்படுகிறது. இதற்கு எந்த விதத்திலும் திராவிடர் கழகம் பொறுப்பாகாது.

இன்று நீட் சட்டத்தை குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற முயற்சிக்க வேண்டும் என்றும், அது குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதத்தை மேற்கோள் காட்டியும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை எழுதியுள்ள திராவிடர் கழகத் தலைவர், கடந்த அய்ந்தரை ஆண்டுகளைப் போலவே நாளையும் அதிமுக ஆட்சியின் அவலங்களை எதிர்க்கத் தான் போகிறார். அவர்கள் நல்லது செய்தால் அவற்றை பாராட்டத் தான் போகிறார்.

சமூகநீதிக் களத்திலும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகவும் திமுகவின் செயல்களைப் பாராட்டத் தான் போகிறார். இக்களங்களில் பங்கேற்க வலியுறுத்தத்தான் போகிறார். நாம் ஆதரிப்பதும், எதிர்ப்பதும் சமூக நலன் கருதியே தவிர, யாருடைய நன் மதிப்பையும் பெற அல்ல.

நல்ல பெயரெடுக்க விரும்புபவன் சமூகப் பணிக்கு லாயக்கற்றவன் என்ற தந்தை பெரியாரின் ஆழமான அறிவின் சாறு எங்கள் மூளையில் இருக்கும்வரை எந்தச் சலம்பலாலும், எங்களைச் சிலுப்பக்கூட முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…