முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//

யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா?
இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.

சரி, யாரந்த சோ கால்ட் பெரியவர்?
//திமுகவிலிருந்து அப்படி ஒதுங்கிக் கொண்டவர்களில் ஒருவர் என் சக ஊழியரின் உறவினர் என்பது பேச்சுவாக்கில் தெரியவந்தது. கருணாநிதி அவர்களே நேரில் சென்று கட்சியில் இயங்க அழைத்தும் ’நான் அண்ணாவுக்காகக் கட்சிக்கு வந்தவன், அவர் இல்லாத கட்சியில் என்னால் எப்படி இயங்கமுடியும்’ என்று தவிர்த்திருக்கிறார் நாசூக்காக. ஆனாலும் அடிப்படையில் திமுககாரராகவே வாழ்ந்திருக்கிறார். 

அண்ணாவுடன் அல்லது அண்ணாவிடம் அவர் என்னவிதமான தொடர்பில், நெருக்கத்தில் இருந்தார், அவரது பெயர் என்ன என்பது போன்ற எளிய விபரங்களைக் கூடப் பகிர முடியாதபடி, நண்பரின் நிபந்தனை கட்டிப்போடுகிறது. இது அவரது தனிப்பட்ட குடும்பம் சார்ந்த நிகழ்வு என்பதும். அவர் இப்போது இல்லை எனினும் பொது வாழ்வே வேண்டாம் என ஒதுங்கி இருந்தவர் பெயர் பொதுவில் இழுபடவேண்டாமே என்கிற நண்பரின் வேண்டுகோள் காரணமாகவும் அவரது அடையாளத்தை முழுமையாகத் தவிர்க்கவேண்டி இருக்கிறது.//

இப்படி எங்கெங்கோ சுற்றி யாரோ ஒரு பெரியவராம். சரி, தொலைகிறது. இது எப்போது நடந்தது?
//இது எப்போது நடந்தது ரொம்ப முன்பாகவா என்று நண்பரிடம் கேட்டேன். சேச்சே அவரது மகன் என்னைவிட ஓரிரு வருடங்கள் பெரியவன். இது இப்போதுதான், இரண்டாயிரத்தில் நடந்தது என்றார் நண்பர்.//

இப்போ தான் இரண்டாயிரத்தில் நடந்ததாம். அந்தப் பெரியவர் பத்துவருடத்திற்கு முன்பே மறைந்துவிட்டதாகவும் ஒரு குறிப்பு கொடுத்துள்ளார். (சமீபத்தில் 1967-ல் என்று எழுதும் மறைந்த டோண்டுக்களின் தொடர்ச்சி போலும்)

நாம் முக்கிய விசயத்துக்கு வருவோம். 

இதில் எழவேண்டிய முதல் கேள்வி.
கி.வீரமணி அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயதில் பேத்தி இருந்தாரா? என்பது தான். இல்லை என்பதை விவரம் அறிந்தவர்கள் அறிவார்கள். 14, 15 வயதில் ஆசிரியர் அவர்களின் பேத்திக்கு திருமணப் பேச்சா? புளுகினாலும் பொருத்தமாகப் புளுக வேண்டாமா?

அடுத்தது ராகு காலம் கழித்து வரச் சொன்னார் வீரமணி என்பது. அதாவது வெளியில் பகுத்தறிவு பேசிக் கொண்டு உள்ளுக்குள் மூடநம்பிக்கையுடன் இருக்கிறார் வீரமணி என்பது இவரது குற்றச்சாட்டு. அட முட்டாள்களே, நீங்கள் சொல்லும் எல்லாமே இப்படி ’நம்பினால் நம்புங்கள்’ என்று சொல்லும் அயோக்கியத் தனம் தானா?


”எல்லா நாளும் நல்ல நாளே! 24 மணி நேரமும் நல்ல நேரமே” என்பதை வாசகமாக்கி- பரப்பி, திராவிடர் கழகம் வெளியிடும் பெரியார் நாள்காட்டியில் ”நல்ல நேரம்: 24 மணி நேரமும்” என்பதை வெளியிடச் செய்தவர் தலைவர் வீரமணி அவர்கள். அவர் குளிர்காலம் பார்ப்பார்; வெய்யில் காலம் பார்ப்பார். ஆனால், ராகுகாலம் பார்த்தார் என்று புளுகுவதை ஏற்பாரா எவரும்?


தமிழகத்தின் எண்ணற்ற ஊர்களில் ராகுகாலத்திலும், எமகண்டத்திலும் திருமணங்களை நடத்தி வைத்தவர் அவர். என் அண்ணன் பெரியார் சாக்ரடீசு - இங்கர்சால் திருமணம் (25.5.1996) சனிக்கிழமை ராகுகாலத்தில் ஆசிரியர் வீரமணி தலைமையில் தான் நடைபெற்றது.  அன்னை மணியம்மையார் தலைமையில் எம கண்டத்தில் திருமணம் செய்து கொண்ட பண்பொளி - கண்ணப்பன் இணையர் இன்றும் நல் வாழ்வு தான் வாழ்கின்றனர். நேரம் காலமெல்லாம் நம் வசதிக்குத் தான் என்று மாலை நேரத் திருமணங்களாக நடந்தவை ஏராளம். எங்கள் வீட்டிலேயே இரண்டு திருமணங்கள். சனிக்கிழமை நடந்தவை உண்டு. அனைவரும் நல்வாழ்வு வாழ்கின்றனர். விடியற்காலையில் கக்கா கூட போகாத நேரத்தில் முகூர்த்தம் என்று கூறி எல்லோரையும் எழுப்பும் மூடர்கள் எங்களைப் பார்த்து விரல் நீட்டுவதா?

எங்கள் வீடே ஆடி மாதத்தில் தான் திறக்கப்பட்டது (25.7.1994). அதைத் திறந்து வைத்தவரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தான். (ஆடி மாதம் என்று வாடகை வீட்டுக்குக் கூட குடி போகாது மூடத் தனம் நிறைந்த நாடு இது)

இவ்வளவு ஏன்?, தொண்டர்களே இப்படி என்றால் தலைவர் எப்படி இருப்பார்?

தமிழர் தலைவர் கி.வீரமணி - சி.மோகனா அவர்களை, தந்தை பெரியார் தலைமையில் 7.12.1958 ஞாயிறு மாலை 4.30 - 6.00 மணிக்கு ராகுகாலம் என்று சொல்லப்படும் நேரத்தில்தான், அம்மூடத்தனத்தை உடைத்தெறியும் விதத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர் படித்த காலத்தில் தன் எல்லாத் தேர்வுகளுக்குமான நுழைவுச்சீட்டை ராகுகாலத்திலேயே சென்று வாங்கி, தங்கப் பதக்கம் பெற்றவராயிற்றே!

அப்படிப்பட்டவர் மீது சேறு வாரி இறைக்க, அவதூற பரப்ப எத்தனை துணிச்சல் வேண்டும்? கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, அதைப் பரப்புவோரை, கருத்து ரீதியாக எதிர்கொள்ளமுடியாமல், குறுக்குவழியில் அவதூறு பரப்புவதை எப்படி பொறுக்க முடியும்? தந்தை பெரியார் மீதும் இத்தகைய சேற்றை வாரி இறைத்த கும்பல் தான் இந்தப் பார்ப்பனக் கும்பல்? இவர்களின் பொய் மூட்டைகளெல்லாம் குத்திக் கிழிக்கப்பட்டு அம்பலத்தில் தொங்கவிடப்படுகின்றனவே, அப்போதும் வெட்கமில்லாமல் அதையே வேறு வேறு தளங்களில் இன்றைக்கும் கழிந்துகொண்டிருக்கிற கும்பல் தானே இந்தப் பார்ப்பனக் கும்பல், அதன் அடிவருடிக் கும்பல்!

கடந்த ஆண்டும் இதே போல வீரமணியின் மனைவி, வீரமணியின் தம்பி ஆகியோர் என்னை வந்து சந்தித்தார்கள் என்று சங்கராச்சாரி கூறியதாக செய்தி வெளியிட்ட தினமலருக்கும் சங்கராச்சாரிக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. வீரமணிக்குத் தம்பியே இல்லை. அவர் தான் வீட்டின் இளைய பிள்ளை. அவரது மனைவி வந்து சந்தித்தார் என்பதும் பொய். ஆனால், நோட்டீசுக்கு பதிலோ,  உரிய ஆதாரமோ அல்லது மறுப்போ இது வரை இல்லை. எனவே வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. (கடந்த ஆண்டு இதே நாளில்.. 16.8.2012) [இணைப்பு - (1) (2)]

’கூவம் காண்டிராக்ட் பேர ஊழல்’ என்றும், வீரமணிக்கு அதில் தொடர்பு என்றும் எழுதிய 'மக்கள் குரல்' பத்திரிகை மீது வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றத்திலேயே வந்து அந்தப் பத்திரிகை ஆசிரியரை மன்னிப்புக் கேட்கவைத்த நேர்மைத் திறமும், கொள்கை உரமும் வாய்த்த தலைவர் வீரமணி என்பதை இந்த விமலாதித்தன்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு தலைவரைப் பற்றி செய்தி எழுதும் போது, நேர்மையாக எழுதுவது தான் முறையாக இருக்க முடியும். ஆதாரமில்லாமல் எழுதுவோர் தான் அப்படி ஒருவர் சொன்னார்; இப்படி ஒருவர் இருந்தார் என்றெல்லாம் அரைவேக்காட்டுத்தனமாக பத்திரிகைகளில் ஊகத்தின் அடிப்படையில் கிசுகிசு எழுதுவது போல் எழுதுவார்கள்.

ஆதாரமில்லாத குற்றச்சாற்றுகளைக் கூறி, அவதூறு பரப்பும் கும்பலை இனியும் விட்டுவைப்பதும், வேடிக்கை பார்ப்பதும் சரியல்ல. இவை விளையாட்டுத் தனமாகவோ, தெரியாமலோ செய்யப்படுபவை அல்ல; திட்டமிட்ட அவதூறுகள். எனவே, விமலாதித்த மாமல்லன் என்ற புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் திரு.நரசிம்மன் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். துணிவிருந்தால் அதற்குப் பதில் சொல்லத் தயாராகுங்கள்.

கருத்துகள்

தமிழ் ஓவியா இவ்வாறு கூறியுள்ளார்…
சுரா பானம் குடித்த முட்டாளை தேளும் சேர்ந்து கொட்டினால் எப்படி உளறு வானே அப்படிப்பட்ட உளரல் தான் ராகுகாலம் பார்த்தார் வீரமணி? என்பதும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Notice should be sent first. And let's see who is right.
சோ சுப்புராஜ் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆனால் இதுவரைக்கும் விமலாதித்த மாமல்லன் மீது வீரமணியோ அவரைச் சார்ந்தவர்களோ வழக்கு எதுவும் தொடுத்திருப்பதாகத் தெரியவில்லையே! வெறுமனே இப்படி எழுதினால் பயந்து விடக்கூடிய நபர் எல்லாம் இல்லை விமலாதித்த மாமல்லன் என்கிற எழுத்தாளர் என்பதை அறிவீர்களா? அவர் கூற்றின் உண்மைத் தன்மையை அறிய இணையத்தில் அதை வாசித்தவர்கள் எல்லோருமே ஆவலாக இருப்பார்கள்.
மானமுள்ள தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
வி.மா.வைப்போட்டுப் பார்க்க இவ்வளவு ஆசையா? எங்கள் கேள்விக்கே அவரது பதில் வரவில்லையே! அவதூறைத் தொடர்ந்தால் அவசியம் வழக்கு போடுவோம். அரைவேக்காடுகள் புகழ்பெற நாம் கூடுதலாக அவசரப்படவேண்டியதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.