முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடைசி நேரத்தில் செயல்படாத TNPSC பதிவு எண்

இரவு 10:30 மணிக்கு ஒருவர் பெரியார் திடலுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். “சார், டி.என்.பி.எஸ்.சி-க்கு விண்ணப்பம் போடணும். இன்னிக்கு நைட் 11 மணி வரைக்கும் போடலாம்னாங்க... எனக்கு இங்க இண்டர்நெட் -டெல்லாம் கிடையாது சார். என் ஒன் டைம் நெம்பர வைச்சு விண்ணப்பம் போடணும் சார்” என்றார்.

யாருக்காவது போட்டு, இங்கே தப்பாக வந்துவிட்டதோ என்ற எண்ணத்துடன் “சார், நீங்க போட்டிருப்பது பெரியார் திடல் எண்ணுக்கு. இந்த விசயத்தில நான் என்ன பண்ணனும்னு எனக்குப் புரியல... எனக்கு அதைப் பற்றி விவரம் தெரியாது” என்றேன்.

“இல்ல சார்... டி.என்.பி.எஸ்.சி தொடர்பான எல்லா சந்தேகங்களையும் கேளுங்க-ன்னு இந்த நம்பர் பேப்பர்ல முன்னாடி வந்திருந்தது சார். அதை எடுத்து வச்சிருந்தேன் சார். நான் தர்மபுரி மாவட்டத்தில ஒரு கிராமத்தில இருக்கேன். டிஸ் ஏபில்டு சார்” என்றார்.

“சரிங்க... நீங்க சொல்ற பெரியார் பயிலக அலுவலகம் காலை 10 மணிக்கு தான் தொடங்கும். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இருந்தாலும், என்னிடம் இணைய இணைப்பு இருக்கு.. என்ன செய்வதென்று நீங்கள் சொன்னால் நான் செய்து தருகிறேன்.” என்றேன்.

அவர் சொன்ன தகவல்கள் போதாமல் வழக்கறிஞர் சிவஞானம் அவர்களிடமும் அவ்வப்போது விவரங்களைக் கேட்டு எப்படி எதை எதை நிரப்புவது? என்னென்ன தேவைப்படும் என்பதையெல்லாம் குறித்து கேட்டுக் கொண்டேன். மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொண்டு அவரது நிரந்தப் பதிவு எண்ணைக் கேட்டால் அவர் சொல்வது போகவில்லை. பிறகு அவரது மின்னஞ்சல் முகவரியில் தேடிப் பார்த்து வேறொரு எண்ணையும், அதன் கடவுச் சொல்லையும் எடுத்தும் கூட, டி.என்.பி.எஸ்.சி தளத்துக்குள் செல்ல முடியவில்லை.



சரி, புதிய விண்ணப்பம் பதிந்து விடலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் ஒரு 20 நிமிடம் செலவழித்து, அத்தனை விவரத்தையும் நிரப்பி, முடியப்போகிறது என்ற நிலையில், விண்ணப்பதாரரின் படத்தையும், கையொப்பத்தையும் கேட்டுவிட்டார்கள்.

அடக் கொடுமையே! அத்தனை முயற்சியும் வீண்! குறுந்தகவல் வாயிலாகவாவது ஏதாவது படம் இருந்தால் அனுப்புங்கள் என்றேன். வழியில்லை. டி.என்.பி.எஸ்.சி கொடுத்த நிரந்தரக் கணக்கு எண்ணும் வேலை செய்யவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

இதோ 11:59 ஆகிவிட்டது. 1:30 மணி நேரம் இதற்கான முயற்சிகள் பயன்பட வில்லை.

இதில் கொஞ்சம் வருத்தம் தான். கடைசி நேரத்தில் இப்படி கேட்டு, உதவ முடியவில்லையே என்ற வருத்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டோரே என்று கூட அவரிடம் கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனாலும், அவர் பெரியார் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு உழைத்த நிம்மதி கிடைத்தது. அடுத்த முறை நேரத்தில் முயலுங்கள் நண்பா!

கருத்துகள்

Dr.Thenaruvi Marimuthu இவ்வாறு கூறியுள்ளார்…
a friend indeed!nt everyone gets dis lucky at d last moment

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்க...