முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடைசி நேரத்தில் செயல்படாத TNPSC பதிவு எண்

இரவு 10:30 மணிக்கு ஒருவர் பெரியார் திடலுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். “சார், டி.என்.பி.எஸ்.சி-க்கு விண்ணப்பம் போடணும். இன்னிக்கு நைட் 11 மணி வரைக்கும் போடலாம்னாங்க... எனக்கு இங்க இண்டர்நெட் -டெல்லாம் கிடையாது சார். என் ஒன் டைம் நெம்பர வைச்சு விண்ணப்பம் போடணும் சார்” என்றார்.

யாருக்காவது போட்டு, இங்கே தப்பாக வந்துவிட்டதோ என்ற எண்ணத்துடன் “சார், நீங்க போட்டிருப்பது பெரியார் திடல் எண்ணுக்கு. இந்த விசயத்தில நான் என்ன பண்ணனும்னு எனக்குப் புரியல... எனக்கு அதைப் பற்றி விவரம் தெரியாது” என்றேன்.

“இல்ல சார்... டி.என்.பி.எஸ்.சி தொடர்பான எல்லா சந்தேகங்களையும் கேளுங்க-ன்னு இந்த நம்பர் பேப்பர்ல முன்னாடி வந்திருந்தது சார். அதை எடுத்து வச்சிருந்தேன் சார். நான் தர்மபுரி மாவட்டத்தில ஒரு கிராமத்தில இருக்கேன். டிஸ் ஏபில்டு சார்” என்றார்.

“சரிங்க... நீங்க சொல்ற பெரியார் பயிலக அலுவலகம் காலை 10 மணிக்கு தான் தொடங்கும். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இருந்தாலும், என்னிடம் இணைய இணைப்பு இருக்கு.. என்ன செய்வதென்று நீங்கள் சொன்னால் நான் செய்து தருகிறேன்.” என்றேன்.

அவர் சொன்ன தகவல்கள் போதாமல் வழக்கறிஞர் சிவஞானம் அவர்களிடமும் அவ்வப்போது விவரங்களைக் கேட்டு எப்படி எதை எதை நிரப்புவது? என்னென்ன தேவைப்படும் என்பதையெல்லாம் குறித்து கேட்டுக் கொண்டேன். மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொண்டு அவரது நிரந்தப் பதிவு எண்ணைக் கேட்டால் அவர் சொல்வது போகவில்லை. பிறகு அவரது மின்னஞ்சல் முகவரியில் தேடிப் பார்த்து வேறொரு எண்ணையும், அதன் கடவுச் சொல்லையும் எடுத்தும் கூட, டி.என்.பி.எஸ்.சி தளத்துக்குள் செல்ல முடியவில்லை.சரி, புதிய விண்ணப்பம் பதிந்து விடலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் ஒரு 20 நிமிடம் செலவழித்து, அத்தனை விவரத்தையும் நிரப்பி, முடியப்போகிறது என்ற நிலையில், விண்ணப்பதாரரின் படத்தையும், கையொப்பத்தையும் கேட்டுவிட்டார்கள்.

அடக் கொடுமையே! அத்தனை முயற்சியும் வீண்! குறுந்தகவல் வாயிலாகவாவது ஏதாவது படம் இருந்தால் அனுப்புங்கள் என்றேன். வழியில்லை. டி.என்.பி.எஸ்.சி கொடுத்த நிரந்தரக் கணக்கு எண்ணும் வேலை செய்யவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

இதோ 11:59 ஆகிவிட்டது. 1:30 மணி நேரம் இதற்கான முயற்சிகள் பயன்பட வில்லை.

இதில் கொஞ்சம் வருத்தம் தான். கடைசி நேரத்தில் இப்படி கேட்டு, உதவ முடியவில்லையே என்ற வருத்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டோரே என்று கூட அவரிடம் கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனாலும், அவர் பெரியார் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு உழைத்த நிம்மதி கிடைத்தது. அடுத்த முறை நேரத்தில் முயலுங்கள் நண்பா!

கருத்துகள்

thenaruvi இவ்வாறு கூறியுள்ளார்…
a friend indeed!nt everyone gets dis lucky at d last moment

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…