முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்களில் கருப்பு பிலிம் அகற்றுதல் தேவையா?


கார்களில் கருப்பு பிலிம்களை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். எனக்கு இந்த உத்தரவில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. 


தீவிரவாதிகள், கொலை, கொள்ளையர்களைப் பிடிக்க வாகன சோதனைகள் இருக்கின்றன. கருப்பு பிலிம்களை அகற்றுவதன் ஊடாக எதைப் பார்த்து கண்டுபிடித்துவிட முடியும் - உள்ளிருப்போரின் தனிமையைக் கெடுப்பதைத் தவிர? மற்ற வாகனங்கள் அனைத்தையும் விட உயரம் குறைவானவை மகிழுந்துகள். அவை மகிழுந்துகளாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதில் உள்ள privacy என்பது என் கருத்து. அதுவும் குடும்பத்தோடு செல்லும்போது, சிரிப்பு, மகிழ்ச்சி, கிண்டல் என செல்லும் தருணங்களை ரசித்தவர்களுக்கு அத்தனை பேரும் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தால் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வரும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாது. 

போக்குவரத்து சிக்னல்கள், நெருக்கடிகள் உள்ள இடங்களில், வண்டி ஓட்டுபவரைத் தவிர மற்ற அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் தருணங்களுக்கு இந்த நடவடிக்கை கடுப்பைத் தரக்கூடியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு குடும்பத்துடன் மகிழுந்தில் செல்லவில்லை என்றாலும், சாலையில் செல்லும் போது கார்களில் செல்லும் பிறரைப் பார்க்கக் கூச்சமாக இருக்கிறது - அவர்களின் தனிமையைத் திருடுவதைப் போல! சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் நடிகர், நடிகைகள், கொண்டாடப்படுவோர் (Celebrity) போன்றோர் வெகு இயல்பாக வெளியில் சென்றுவர உதவும் ஒரே வாகனம் அது தான்! இனி அதுவும் பாதிக்கப்படும்!

அது மட்டுமல்ல... கண்ணாடியையும் தாண்டி வெயில் சுடும்போது தடுப்பதற்கு அவை தான் உதவும். ஜன்னலோரம் அமர்ந்து வரும் வேளையில் ஏ.சி.யெல்லாம் ஒன்றும் பலனளிக்காது; சூடு உடலில் பட்டு நீர்கடுப்பு வேறு வந்து தொலைக்கும். கடந்த முறை பெங்களூர் செல்லும்போது நான் அமர்ந்த பக்கம் வெய்யில் அடிக்க, மடியில் துணியைப் போட்டுக் கொண்டே பயணித்தேன். காரணம் இந்த கருப்பு பிலிம்கள் இல்லாமை தான்! 

இப்படி உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உயர் பாதுகாப்பு என்ற பெயரில் இவையெல்லாம் பொருந்தாது. 

* சாலையோரங்களில் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் வாழ்கிற நகரத்தில், நாட்டில்.. நீ ஏண்டா காரில் போகிறவனின் பிரைவசியைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நீ என்ன பூர்ஷ்வாவா?

* பொது இடத்தில் போகும்போது என்ன பிரைவசி வேண்டிக் கிடக்கிறது? 
என்பன போன்ற கேள்விகள் பலருக்கும் எழலாம். சிலர் திட்டலாம்.. அதெல்லாம் தெரிந்துதான் கேட்கிறேன். 

* அதிலும் எத்தனை சதவிகிதம் கருப்பு இருக்கலாம் என்று சிலர் கேட்டதில் குழப்பம். பின்னர் சதவிகிதமெல்லாம் கிடையாது. மொத்தமாக எடுத்துவிடவேண்டும். உள்ளே ஸ்கிரீன் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம் என்ற சிலரின் வியாக்கியானம்.


ஒரு வேளை இது நல்ல விசயமாக இருந்து, நான் அதை ஏதோ ஒரு காரணத்துக்காக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கக்கூடாது அல்லவா? எனவே நீதிமன்ற நடவடிக்கை சரி என்று தோன்றுபவர்கள் அதற்கான காரணத்தை அடுக்கி, என்னை/ என் போன்று நினைப்போரை சமாதானப்படுத்த முயலவும்/ புரியவைக்க முயலவும்!

இதனை நான் முகநூலில் பதிந்தபோது வந்த சில கமெண்டுகள் முக்கியமானவை:
 • 28 people like this.
  • Nelson Venkatesan Commercial vehicles can get in to this rule . Personal vehicles shud be exempted .
  • Sendhil Kumar ‎""சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் நடிகர், நடிகைகள், கொண்டாடப்படுவோர் (Celebrity) போன்றோர் வெகு இயல்பாக வெளியில் சென்றுவர உதவும் ஒரே வாகனம் அது தான்! இனி அதுவும் பாதிக்கப்படும்!""

   ஐயோ பிரின்ஸ் நூற்றுக்கு நூறு இது உண்மை.சமீபத்துல இயக்குனர் மணிவண்ணன் சார் கூட வெளிய போகும் சூழல் ஏற்பட்டது.அப்பா ஒவ்வொரு சிக்னல்லையும் .......................சரிவிடுங்க..........அப்புறம் என்னையும் புர்ஷ்வானு சொல்லிட போறாங்க !!!!
   --
  • Ramachandran Radha இல்லை தோழர். இதிலும் சட்டம் தெளிவாக பின்பற்றப்படவில்லை. முன்பக்கம் 70% தெளிவு, பக்கவாட்டில் 30% தெளிவு இருந்தால் போதும் என்றும் சொல்கிறார்கள். எனவே கருப்பு பிலிம்களை பொத்தாம் பொதுவாக அகற்ற முடியாது. (தோழர்கள் இன்னும் இதை தெளிவு படுத்தலாம்) வழக்கம் போல நம் காவல்துறைக்கு சட்டத்தின் தெளிவுகள் புரியவில்லை,,..போக்குவரத்தை சரிசெய்ய திறனற்று போனால் எதையுமே யோசிக்காமல் ஒரு வழி பாதை ஆக்கிவிடுகிறாகளெ அப்படி....

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
யோசிக்க வைக்கும் பதிவு...
மணிமகன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த சட்டத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.மகிழுந்து என்பது ஒருவரின் தனிப்பட அறை போன்றது.அதை அவர் தனது வசதிக்கேற்ப பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.அவரது வசதியைக் குறைப்பதோ,தனிமையைத் தடை செய்வதோ ஏற்கத்தக்கது அல்ல;பாதுகாப்பு என்று காரணம் சொல்லி இப்படிச் செய்வது காவல்துறையின் போதாமையே.திருடர்களை,கொள்ளையர்களை,பயங்கரவாதிகளைப் பிடிக்க நுண் புலனாய்வில் கோட்டைவிட்டுவிட்டு இப்படி மக்களின் தனிமையைத் தடுப்பது மிகவும் தவறானது.முன்பு இப்படித்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாருதி ஆம்னியில் வந்து குண்டு வைக்கிறார்கள்,சுட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்று ஒரு சப்பைக் காரணம் கூறி டெல்லியில் மாருதி ஆம்னி மகிழுந்துக்குத் தடயே விதித்தார்கள்.யாரோ சில நூறு பேர் பயங்கரவாதிகளாக,கொள்ளையர்களாக இருந்து மகிழுந்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.அந்த சில நூறு பேர்களுக்காக நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களும் இப்படித் தங்களின் தனிமையை இழக்கவேண்டுமா?கொடுமை...கொடுமை..இந்த நாடு வெளங்கவே வெளங்காது...
மணிமகன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த சட்டத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.மகிழுந்து என்பது ஒருவரின் தனிப்பட அறை போன்றது.அதை அவர் தனது வசதிக்கேற்ப பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.அவரது வசதியைக் குறைப்பதோ,தனிமையைத் தடை செய்வதோ ஏற்கத்தக்கது அல்ல;பாதுகாப்பு என்று காரணம் சொல்லி இப்படிச் செய்வது காவல்துறையின் போதாமையே.திருடர்களை,கொள்ளையர்களை,பயங்கரவாதிகளைப் பிடிக்க நுண் புலனாய்வில் கோட்டைவிட்டுவிட்டு இப்படி மக்களின் தனிமையைத் தடுப்பது மிகவும் தவறானது.முன்பு இப்படித்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாருதி ஆம்னியில் வந்து குண்டு வைக்கிறார்கள்,சுட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்று ஒரு சப்பைக் காரணம் கூறி டெல்லியில் மாருதி ஆம்னி மகிழுந்துக்குத் தடையே விதித்தார்கள்.யாரோ சில நூறு பேர் பயங்கரவாதிகளாக,கொள்ளையர்களாக இருந்து மகிழுந்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.அந்த சில நூறு பேர்களுக்காக நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களும் இப்படித் தங்களின் தனிமையை இழக்கவேண்டுமா?கொடுமை...கொடுமை..இந்த நாடு வெளங்கவே வெளங்காது...
மணிமகன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த சட்டத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.மகிழுந்து என்பது ஒருவரின் தனிப்பட அறை போன்றது.அதை அவர் தனது வசதிக்கேற்ப பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.அவரது வசதியைக் குறைப்பதோ,தனிமையைத் தடை செய்வதோ ஏற்கத்தக்கது அல்ல;பாதுகாப்பு என்று காரணம் சொல்லி இப்படிச் செய்வது காவல்துறையின் போதாமையே.திருடர்களை,கொள்ளையர்களை,பயங்கரவாதிகளைப் பிடிக்க நுண் புலனாய்வில் கோட்டைவிட்டுவிட்டு இப்படி மக்களின் தனிமையைத் தடுப்பது மிகவும் தவறானது.முன்பு இப்படித்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாருதி ஆம்னியில் வந்து குண்டு வைக்கிறார்கள்,சுட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்று ஒரு சப்பைக் காரணம் கூறி டெல்லியில் மாருதி ஆம்னி மகிழுந்துக்குத் தடயே விதித்தார்கள்.யாரோ சில நூறு பேர் பயங்கரவாதிகளாக,கொள்ளையர்களாக இருந்து மகிழுந்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.அந்த சில நூறு பேர்களுக்காக நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களும் இப்படித் தங்களின் தனிமையை இழக்கவேண்டுமா?கொடுமை...கொடுமை..இந்த நாடு வெளங்கவே வெளங்காது...
வடுவூர் குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
தவறு செய்பவர்களுக்கு இது உதவி செய்கிறது அவ்வளவு தான் இதை தடுக்காவிட்டால் நம் சட்டமே அவர்களுக்கு உதவுவது போல் இருக்கும் அல்லவா?
தவறை தடுக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதை செய்கிறது அரசாங்கம் அது சிலருக்கு உபத்திரமாக் இருக்கு. சன் பிலிம் கண்டுபிடிப்பதற்கு முன்பு எப்படி இருந்தோம்? அதையும் யோசிக்கவேண்டும்.
வடபழனி சிக்னலில் இருக்கும் போக்குவரத்து போலிஸ் கையை ஆட்டி தான் போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார்கள் ஏனென்றால் நம் நிலமை இப்படித்தான் இருக்கு என்ன செய்வது?
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
தனிமையோ கினிமையோ அது அப்பால கிடக்கட்டும், வெயில் தான் முக்கிய காரணம் முன்னர் ஐ.எஸ்.ஐ பெற்ற , வாகனசட்டத்திற்குட்பட்ட சன் கன்ட்ரோல் பில்ம் ஒட்ட சொன்னார்கள் ,அது ரொம்ப குறைவாக தான் மறைக்கும்,ஆனாலும் அதை ஒட்டி ஓரளவு வெயிலை சமாளிச்சோம், இப்போ ஒரேயடியாக எடுக்க சொன்னால் எப்படி?

உச்சநீதி மன்றத்திலேயே மேல் முறையீடு செய்யனும்.

இந்தியா போன்ற ஆண்டுக்கு 10 மாசம் கடும் வெயில் அடிக்கும் தேசத்தில் இப்படியான சட்டங்கள் மக்களுக்கு சோதனையே.

எப்படியும் இந்த விதியை மாத்திடுவாங்கன்னு இன்னும் ஃபில்ம் எடுக்கவில்லை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ரெம்ப தேவை இப்ப இந்த பதிவு. வேற ஒண்ணும் இல்ல. காசு இருக்கிற தெனாவெட்டு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…