எல்லைகளைக் கடக்கலாம்
எங்கள் எழுத்து!
ஆனால்... எங்களின்
ஆனா... ஆவன்னாவில்
நிறைந்திருக்கிறாய் நீ!
எங்கள் வெற்றிப் படிகளைத்
திரும்பிப் பார்க்கையில்
ஒவ்வொரு புகைப்படத்திலும்
உன் புன்னகை!
என் அக்கா தொடங்கி
அண்ணன் மகன் வரைக்கும்
எங்களுக்கு ஆரம்பக் கல்வி தந்த
ஆசான் நீ...
![]() |
முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர், அன்றைய சிவகங்கை மாவட்ட ASP ராஜேந்திரன் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் சாமி சமதர்மம், பின்னால் SVTC செல்வம் |
’எழுமின்! விழிமின்!’ என்ற
மதத்தைத் தாண்டிய
விவேகானந்தரின் வரிகளை
நீ இளம் நெஞ்சங்களில்
விதைத்தாய்!
ஒட்டுமொத்த பள்ளியையும்
உட்கார வைத்துக் கொண்டு
சிரிக்கச் சிரிக்க நீ எடுக்கும்
வகுப்பு மறக்காது எமக்கு!
இந்தி கற்க மாட்டேன் என்று
ஒரு பொடிப் பயல் சொல்கிறானே
என்றில்லாமல்
என் உறுதிக்காகவே
பள்ளியிலிருந்து
இந்தியை நீக்கி வைத்து
எனக்கு முதல்
கொள்கை வெற்றியைத்
தந்தவன் நீ!
![]() |
1980களில் SVTC-ன் ஆண்டு விழா நிறைவில் எடுக்கப்பட்ட குழுப்படம் |
எங்கள் வளர்ச்சி கண்டு
பூரித்த பெருமகன்!
மாறாத பாசத்துடன்
எங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடிய
எம் தந்தையின் தோழன்!
![]() |
1990களில் SVNS ஆண்டு விழா ஒன்றில் பேசிக் கொண்டிருப்பவர் சாமி சமதர்மம், பின்னால் அமர்ந்திருப்பவர் SVTC செல்வம் |
பாலர் பள்ளி மட்டுமா?
’அய்ந்து விளக்கு சமீபம்
காரைக்குடி’ என்ற
விளம்பரம்
SVTC ன் அடையாளம்!
ஆனால் உண்மையில்
காரைக்குடியின்
அடையாளங்களில்
உங்களின் SVTC ஒன்று!
பத்து, பன்னிரண்டில்
தோற்றுத் தவித்தோர் பலரை
தோற்றோரியல் கல்லூரி மூலம்
தேற்றி ஏற்றிவிட்ட ஓடம்...
அப்படிப் பலரின்
வாழ்க்கைக்கு
நீ வாழ்வு தந்தவன்!
நீ வளர்த்த செல்வங்கள் இருக்கும் வரை
நீர் வாழ்வீர் செல்வம்!
- சுவாமி விவேகானந்தா பாலர் பள்ளி (Swami Vivekananda Nursery School) மாணவர்கள் சார்பாக...
கருத்துகள்
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/