முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இணையத் தமிழை சமஸ்கிருத மயமாக்க முயற்சி! - ஆரிய நரிகள் மீண்டும் வாலாட்டம்

கணினித்துறை, இணையம் இவற்றில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் வளர்ச்சி கண்டு வருவது தமிழ்தான். அதிலும் ஒருங்குறி எனப்படும் யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துகள் வந்தபிறகு எண்ணற்ற இணையதளங்கள் பழந்தமிழ் இலக்கியங்களையும், புதிய படைப்புகளையும் கொண்டும் அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் தந்து வருகின்றன. இதை எவ்விதத் தடங்கலுமின்றி, உலகின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துரு (Font) தடையின்றி படிக்கலாம்; எழுதலாம். கூகிள், விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் யூனிகோட் தமிழை அங்கீகரித்து தங்களது மென்பொருள்களிலும் இவற்றை பயன்படுத்திவருகின்றனர்.

ஏற்கெனவே தமிழுக்கென உலக அளவிலான யூனிகோட் ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதை அதிகப்படுத்தி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் இடம் கிடைத்தால் தான் எளிமையாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெறும் . இதற்காக யூனிகோட் சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கணினித் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகளுடன், வழக்கத்தில் இருக்கும் கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளுக்கேற்ப தமிழக அரசும் யூனிகோடு முறையை அங்கிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழ் எழுத்துகளுடன் புதிதாக சில கிரந்த எழுத்துகளையும் சேர்க்கும் முயற்சியை தமிழ் அறிஞர்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமல் பார்ப்பனக் கும்பல் மேற்கொண்டுள்ளது. இவர்கள் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளை இதுவரை நாம் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. தமிழுக்கு சற்றும் தொடர்பில்லாத, தமிழ் எழுத்துகளுக்கும், தமிழ் எழுத்து முறைக்கும், இலக்கணத்திற்கும் எந்தத் தொடர்புமில்லாத சமஸ்கிருத (கிரந்த) எழுத்துகளைத் தமிழில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருப்பவர் யார் தெரியுமா? ஸ்ரீ ரமண சர்மா என்ற பச்சைப் பார்ப்பனர்.

அதற்கு அவர் எடுத்துக்காட்டியிருக்கும் ஆதாரம் எது தெரியுமா? காமகோடி கோஷாஸ்தனத்திலிருந்து சில வரிகள் மற்றும் டி.எஸ். நாராயண சாஸ்திரியின் போஜ சரிதம்'. இப்போது புரிந்திருக்குமே இந்தச் சூழ்ச்சி வலையின் சூத்திரதாரிகள் யாரென்று! சந்தேகமேயில்லாமல் சங்கரமடத்தின் கைகள் தான் இதன் பின்னால் ஒளிந்திருக்கின்றன. காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஆயுர்வேதக் கல்லூரியும், சமஸ்கிருதக் கல்லூரியும் ஸ்ரீரமண சர்மாவின் பின்னணியில் இருந்து கிரந்த எழுத்துகளை தமிழ் என்று இணைக்க முயற்சிக்கின்றன.

தமிழ் மொழிக்குடும்பம் வேறு! ஆரிய சமஸ்கிருத மொழிக்குடும்பம் வேறு! இரண்டின் எழுத்துகளும், அதற்கான முறைகளும், ஒலிப்புகளும் வேறானவை. ஆனால் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி வரும் காலத்தில் தமிழுடன் இந்த 26 கிரந்த எழுத்துகளும் இணைந்தே இருக்கும். வளர்ந்துவரும் இணையத் தமிழ் தான் அடுத்துவரும் அத்தனை தலைமுறைக்கும் தமிழின் அடிப்படையாக இருக்கப்போகிறது.

"இது நீண்டகாலச் சதி. இந்த யூனிகோட் சேர்த்தியம் என்பது பன்னாட்டு நிறுவனம். அதன் சட்ட திட்டங்கள் ஓட்டை உடைசல்களைக் கொண்டன. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் இன்னின்ன மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லி எழுதிக் கொடுக்கலாம். அதற்கு உள்ளேயும் தொடர்பிலேயும் சற்று வேண்டியவர்கள் இருந்தால் ஒரு மொழிக்கு என்ன கேடுகளை வேண்டுமானாலும் செய்யலாம். இதைப் பயனடுத்தி ஆரிய நரிகள் சமஸ்கிருத எழுத்துகளை உள்நுழைக்கப் பார்க்கின்றனர். இதற்கு தமிழ்ப்பற்றாளர்களும், மிக முக்கியமாக தமிழக அரசும் கடுமையான கண்டனத்தையும், மறுப்பையும் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 25-ஆம் தேதி யூனிகோடு சேர்த்தியம் சர்மாவின் முன்வைப்பைப் பரிசீலனைக்கு எடுக்கிறது, கடந்த இரண்டுநாட்களில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இது குறித்து யூனிகோடு நிறுவனத்திற்கு தொடர்ந்து எழுதி முடிவு எடுப்பதை சில நாட்கள் தள்ளிப் போடும்படி செய்துள்ளனர். அதற்குள்ளாக போர்க்கால வேகத்தோடு இதனைக் கவனத்தில் எடுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்" என்கிறார் தமிழ் கணினி வல்லுநரும், இப்பிரச்சினையை உலகறியத் தந்துள்ளவருமான நாக.இளங்கோவன்.

இது குறித்து உத்தமம் (INFITT) அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இப்பிரச்சினை குறித்து அறிந்து செயல்பட்டுவருபவருமான நா.கணேசன் அவர்களின் தொடர்பு கொண்டபோது, "இச்சிக்கலை உத்தமம் சார்பில் எடுத்துவைத்து எங்களது பரிந்துரையையும் அனுப்பியுள்ளோம்" என்றார். தமிழ்க் கணினித்துறையில் முக்கியமானவரும், கணித்தமிழ் சங்கத்தில் பங்காற்றுபவருமான மா.ஆண்டோபீட்டர் அவர்களிடம் கேட்டபோது, "இது கண்டிப்பாக கண்டனத்திற்குரியது" என்று கருத்து தெரிவித்தார். மேலும், சங்கரமடத்தின் இந்தச் சதிக்கு எதிராக தமிழ்க்கணினித் துறை இளைஞர்களும், தமிழார்வலர்களும் கடும் போராட்டங்களில் ஈடுபட எண்ணியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.

இப்படி தமிழ் அறிஞர்களின் கடும் எதிர்ப்புக்கிடையில் காஞ்சி காம'கேடி'களும், பார்ப்பனர்களும் தமிழைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பது கவனத்திற்குரியதாகும். இது குறித்து எச்சரிக்கையுடன் இருந்து தமிழைக் காக்க வேண்டியது மிக அவசரமாகும். தமிழை அழிப்பதில் ஆரியம் எவ்வளவு  முனைப்பு காட்டுகிறது என்பதை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் கவனத்துடன் நோக்கி வருகிறது. வடமொழித் திணிப்பிற்கெதிரான மொழிப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக அது அமையலாம்.
- ஜூனியர் சர்ச்லைட் 
(நன்றி: உண்மை - நவம்பர் 1-15, 2010)


கருத்துகள்

மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
இணைய தமிழை சமஸ்கிருத மயமாக்க முயற்சிக்கும் ஆரிய நாய்களுக்கும் நரிகளுக்கு எனது கண்டனத்தை இங்கு பதிக்கிறேன்.

போராட்டத்திற்கு தயார்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
porada thevai illai ...
kalaignar kitta sonna
avar thyaga thiruvilaku kitte solli sari pannuvaar
ankithavarma இவ்வாறு கூறியுள்ளார்…
நாம தூங்கின எலிகளுக்கு கொண்டாட்டம் தான், ஏற்கனவே தமிழ் பேப்பர் என்னும் தளத்தில் ஆரியர்கள் தங்கள் நரித்தனத்தை ஆரம்பித்து விஷம் கக்கி வருகிறார்கள், அதற்குள் இந்த வேலை வேறா, ஏற்கனவே கலைஞ்சர் குடும்பத்தில் ஆரியம் நுழைந்துவிட்டது எடிட்டர் ராமின் சொந்தங்கள் ஊடாக, அதற்கு சாட்சி சண் டிவியில் வரும் இராமாயண தொடர்களும், சாமி நிகழ்ச்சிகள் .. தான்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…