வேகாத வெய்யிலுல நான் வெறகு வித்துப் படிக்க வச்சேன்..! வெந்துபோன வெறகா உன்னை தூக்கவா அனுப்பி வச்சேன்? வெய்யிலிலே நீ நின்னா கால் வெந்து போகுமுன்னு... வெளியவே வராதேன்னு வீட்டுக்குள்ள நான் வளர்த்தேன். கால் கடுக்க நீ நின்னா என் காலு எரியுமடி - இப்ப கரிக்கட்டையா கிடக்குறியே என் உசுரு வேகுதடி! சுடு சோறு வேணுமின்ன...! புதுச் சட்டி வாங்கச் சொன்ன..! சுடு சோறு திங்கலியே...! சூடு தான் தாங்கலியோ...? வாங்கித் தந்த புதுச்சட்டி வாய்பிளந்து கிடக்குதடி.. -உன்ன தூங்க வச்சுப் பார்த்த தூளி தூக்கிப்போக உதவுதடி! .....தளிர்கள் கருகிய அமாவாசை தினத்தில்...(16.07.2004) --...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.