“ஈழத்தமிழர்கள் செத்து மடிந்த வேளையில் செம்மொழி மாநாடா?” ”உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கிறோம்” சொன்னார்கள். ஒப்புக் கொள்ள முடியவில்லை; புரிந்துகொள்கிறோம். அவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான். ”சொரணையற்றவர்கள் தான் செம்மறி மாநாட்டுக்குப் போவார்கள்” என்றார்கள். செம்மொழியாம் எம்மொழியை செம்மறி என்று சொல்ல தமிழின் பேராலேயே அவர்களுக்குத் துணிவிருப்பதையும், அவலை நினைத்து உரலை இடிப்பதுபோலும், குளத்தோடு கோபித்துக் கொண்டு.. கழுவாமல் போவதைப் போலும் திரிவதைப் பெருமையென எண்ணும் மூடத்தனத்தையும் எண்ணி நகைக்கவில்லை.. வருந்தினோம். தமிழன்னைக்கு எடுக்கும் விழாவில் கலந்துகொண்டால் அந்த’ம்மா’வின் கோபத்திற்காளாக வேண்டியிருக்குமே என்று கலந்துகொள்வதைத் தவிர்த்து வீராவேச அறிக்கை விட்டவர்களின் கூட்டணிப் பயத்தை உறுதிப்படுத்திக் கொண்டோம். எழுச்சியான தமிழர் கூட்டத்தை நெறியாக அரசியல்படுத்தாமல், உணர்ச்சியை தூண்டினால் போதும் என்று அரசியல் 'கட்சி'யாக்கி, ஏறி வந்த ஏணியை உதைப்பார் போலும், ஓட்டை ஓடத்தில் பயணம் போவார் போலும், அடிமரத்தை வெட்டும் நுனிமரம் ஏறி...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.