முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள்.. நடிகைகள்.. தினமலர்.. பொதுப்புத்தி.. கமல்ஹாசன்..

டவுள் வேடமேற்று நடிப்பதற்கு ஒழுக்கமான நடிகைகளைத்தான் அழைத்து வரவேண்டுமாம். நிஜ வாழ்க்கையில் தப்பான முறையில் நடந்து கொண்டிருக்கும் நடிகைகளை சாமி வேஷங்களில் நடிக்க வைக்கக்கூடாது என்று வழக்குப் போடப் போகிறாராம் ஒருவர்.

அவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ, இந்துமதத்தைச் சேர்ந்தவரோ அல்ல, தனது நாட்டின் சகோதர மதமான இந்துமதம் இழிவுபடுவதாக வருத்தப்பட்டு பாரம் சுமந்திருப்பவர் சவுதி அரேபியாவில் தொழில் நடத்திவரும் மஸ்தான் என்ற தமிழ்நாட்டு இஸ்லாமியர் என்று பெருமை பொங்க செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். (நக்கீரன் 17.10.09).


மஸ்தான் தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவரது நண்பர் அந்த தொலைக்காட்சியில் அம்மன் வேடமேற்றிருந்த நடிகையைக் காட்டி இது என்ன வேடம்? என்றாராம். கடவுள் வேடம் என்றதும். அதற்கு நல்ல ஒழுக்க மான பெண்களே கிடையாதா? இந்த நடிகை இநதியாவில் என்னோடு கம்பெனி(?) கொடுத்தவர் என்றாரம் தொழிலதிபரான நண்பர்.


அந்த இழிவைப் பொறுக்க முடியாமல் தான் வழக்குப் போடப் போகிறாராம். இதுதான் சாக்கென்று இந்து முன்னணி வகையராக்களும் பேட்டி கொடுக்கிறதுகள்.

சரி, நடிகைகள் ஒழுக்கமானவர்களா? ஒழுக்கமான பெண்களை நடிக்க வைப்பது என்பதெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும். முதலில் இந்து மதத்தில் ஒழுக்கமான ஒரு கடவுளைக் காட்டுங்களேன் பார்ப்போம். சவால்விட்டே நாம் கேட்கிறோம். குருவின் பத்தினியோடு, அறுபதினாயிரம் கோபிகைகளோடு, அடக்கமுடியாத ஆசையில் இன்னொரு ஆணோடு என்று கடவுள்களின் வரிசை, சோரம் போக- ஒளிந்து நின்றவள், ஒளித்து வைத்தவள், அய்ந்து பத்தாது... ஆறாவதாய் கர்ணன் வேண்டும் என்று கணக்கு சொன்னவள், அடுத்தவள் கணவனை அடைய ஆசைப்பட்டவள் என்று கடவுளச்சிகளின் வரிசை... இதில் எங்காவது ஒழுக்கத்துக்கும் கடவுள்களுக்கும் தொடர்பு உண்டா?

ரோசம் வரும் இந்து முன்னணிக் காரர்களும், சகோதர மதத்தைத் தூக்கி நிறுத்த வந்திருக்கும் மஸ்தானும் முதலில் இதையல்லவா யோசிக்க வேண்டும். முதலில் அப்படி ஒரு ஒழுக்கமான கடவுளைக் காட்டிவிட்டு, அதில் நடிப்தற்கு உங்களின் ஒழுக்க அளவுகோலைத் தூக்கிக்கொண்டு ஊரெல்லாம் அலையுங்கள் நடிகைகளைத் தேடி!


ழுக்கம், சினிமா, நடிகைகள் என்றெல்லாம் பேசும் போது, தவிர்க்க முடியாமல் சில செய்திகள் நம் கவனத்தை பெறுகின்றன. "பாலியல் (விபச்சார) வழக்கில் சிறையிலிருக்கும் நடிகையின் வாக்கு மூலம்; 9 நடிகைகள் பட்டியல்" என்று அவர்களின் கட்டணம் எவ்வளவு என்றெல்லாம் படத்தோடு வெளியிட்டது தினமலர்.

செய்திகளைப் பார்த்துக் கொதித்துப்போன திரைத்துறையினர், கண்டனம் தெரிவிக்கக் கூட்டம் நடத்தி கட்டுப்பாடின்றி கொந்தளிக்க, தங்களின் பத்திரிகை சுதந்திரத்திற்கே பங்கம் வந்ததைப் போன்ற வேகத்தோடு, பத்திரிகையாளர்களும் கோதாவில் இறங்க, பத்திரிகையாளர் vs சினிமாத் துறையினர் என்ற ரேஞ்சுக்கு, தமிழகத்தில் வேறு பிரச்சினைகளே இல்லை என்பதைப்போல, எல்லா பத்திரிகைகளும் வியாபரத்தை கச்சிதமாய்க் கவனித்துக் கொண்டனர். தினமலருக்கு எதிராகப் போக வேண்டிய பிரச்சினையை வலிந்து தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர் திரைத்துறையினர். சரி அவர்கள் சண்டை ஒரு புறம் இருக்கட்டும்.


சினிமாக்காரங்களை விட்டால் இந்த பிழைப்புவாதப் பத்திரிகையாளர்களுக்கு வழியில்லை, பத்திரிகையாளர்களை விட்டால் விளம்பரம் பெறுவதற்கு சினிமாக்காரர்களுக்கும் வழியில்லை. ஆனாலும் அடித்துக்கொண்டார்கள்.


வாக்குமூலம் தந்தாரா இல்லையா? என்னதந்தார்? என்றெல்லாம் வெளி வருவதற்கு முன்னரே படத்துடன் தினமலர் செய்தி வெளியிட என்ன அவசரம்-?


அந்தளவு பத்திரிகா தர்மத்தைக் கடைப்பிடிக்கும் பத்திரிகையா தினமலர்-? முக்கால் பக்கத்துக்கு அரை நிர்வாணப் படத்தை வெளியடுபவர்கள் தானே தினமலர் பத்திரிகையாளர்கள். அதுவும் அதே திரைத்துறையிடம் இருந்து வாங்கிய படங்கள்தானே! பிறகெப்படி இருவருக்கும் முட்டிக்கொண்டது.


முக்கால் பக்கத்துப் படத்தை மட்டும் பார்க்காமல் மீதிக் கால்பக்கத்தில் எழுதப் பட்டிருக்கும் செய்தியைப் படித்தாலே உண்மை புலப்படும். தனது ஆடையைக் குறைத்து தங்களின் பக்கத்தை நிரப்பப் பயன்பட்டிருக்கும் நடிகையையோ, திரைத் துறையினரையோ பற்றிய மோசமான விமர் சனங்கள் தான் அதில் இடம்பெற்றிருக்கும். மற்ற பத்திரிகைகள் திரைத்துறைக்கு ஆதரவாகவோ அவர்களைப் பாராட்டியோ 80% எழுதினால் அவர்களையும் அவர்களின் ஒழுக்கத்தையும் குறைசொல்லி மட்டும் தினமலர் 80% எழுதும். அதுதான் மற்ற பத்திரிகைகளுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம். இது என்ன-? விமர்சனம் இருக்குமேயா னால் படத்தை மட்டும் வெளியிடலாமா?


முதலில் ஆபாசப்படங்களை வெளியிடு வதை நிறுத்திவிட்டல்லவா ஒழுக்கம் பேசவேண்டும்? என்றெல்லாம் நியாயம் பேச முடியாது தினமலரிடம்.


பாசபடங்ளையெல்லாம் பார்த்துவிட்டு ஒழுக்கவான் போல நடிகைகளை அசிங்க மாக அர்ச்சிப்பதில்லையா?


சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாமல், லஞ்சம் வாங்கும் போலீஸ்காரரை மட்டும் எப்போதும் குறை சொல்வதில்லையா?


ஜூ.வி, ரிப்போர்டர் படித்து விட்டு அகில இந்திய அரசியலின் அடுத்த கட்டம் பற்றிப் பேசுவதில்லையா?


போலீஸ் என்றால் பொறுக்கிகள்; இராணுவம் மட்டும் மரியாதைக்குரியது;


வந்தே மாதரம் பாடினால்தான் தேசபக்தன்; இந்தி மொழி தெரிந்தால்தான் வேலை கிடைக்கும்;


அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தக் கூடாது; போராடுவோர் எல்லாம் வேலையற்றவர்கள்;


டிராபிக் ராமசாமிதான் உண்மையான பிரஜை; சோ ராமசாமிதான் நடுநிலையாக பேசுபவர்;


சுந்தர ராமசாமிதான் இலக்கியவாதி; சுஜாதாதான் சிறந்த எழுத்தாளர்;


இடஓதுக்கீட்டால் தகுதி, திறமை குறைகிறது; 2020இல் இந்தியா வல்லரசாகும்;


அரசியல் ஒரு சாக்கடை; படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்;


தி ஹிண்டு படித்தவன் அறிவாளி; தினத்தந்தி படிப்பவன் பாமரன்;


காந்தி குல்லாய் போட்டவர்கள் எல்லாம் தியாகிகள்; மணிரத்னம் தான் சுயம்பு;


அந்த காலத்து வாத்தி(அய்)யர்கள் எல்லாம் அறிவாளிகள்... இப்போது எல்லாம் சுயநலமிகள்;


.....
.....
.....

இப்படி கட்டுக்கட்டாக சில விசயங்களை புத்திக்குள் புகுத்தி வைத்திருக்கிறார்களல்லவா, இதற்கெல்லாம் ஒரு பொதுப் பெயர் உண்டு.


அதற்கு பெயர்தான் பொதுப்புத்தி!


அதென்ன பொதுப்புத்தி? General Knowledge என்று சொல்கிறார்களே அதுவா? அல்லது Common Sense என்பார்களே அதுவா? இரண்டும் இல்லை.


எந்த வித ஆராய்ச்சியும் இல்லாமல் குறிப்பிட்ட விசயம் பற்றிய கூரிய பார்வை இல்லாமல், சமூகத்தில் நடப்பில் இருப்பதை குருட்டாம்போக்கில் ஏற்பதும் ஊடகங்கள் உலவிடுகின்ற உடான்சுகளையெல்லாம் உண்மையென்று நம்புவதும், திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றவற்றை தீர்க்கமென்று திரிவதும்தான் பொதுப்புத்தி!


அதற்கு கொஞ்சூண்டு எடுத்துக்காட்டு கள்தான் மேலே நீங்கள் படித்ததெல்லாம். சுருக்கமாய்ச் சொன்னால் தினமலர் உருவாக்குபவை எல்லாம் பொதுப்புத்தி சார்ந்த சிந்தனைகளே! இதை தினமலர் மட்டும்தான் உருவாக்குகிறது
என்றில்லை. ஆனால் தினமலர் உருவாக்குவது எல்லாம் அவ்வகையினதே!

இதனால் யாருக்கு லாபம்...? சும்மா ஏதாவது சொல்லக்கூடாது என்று நம்பிக்கையின்றி யோசிக்கிறீர்களா? இப்படி உங்களை யோசிக்க வைத்ததுதான் லாபம்.


ஆம், எந்தவொரு பிரச்சனை பற்றியும் முழுமையான, ஆழ்ந்த தகவல்கள் தெரியாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க வைப்பது, பிரச்சனை குறித்து ஆய்ந்து பார்க்காமல் தடுப்பதற்கு பயன்படும். அரசும் ஆளும் வர்க்கமும் அது சார்ந்த ஊடகமும் என்ன கட்டமைக்கிறதோ அதுவே உலக உண்மை என நம்ப வைக்கப் பயன்படும்.


பொதுப்புத்தி சார்ந்து எழும் சமூகம் சிந்தனையற்ற சமூகமாக உருவாகும். சயன்ஸ் பிச்சன் படங்களில் வரும் வில்லன் தனக்கு சாதகமானவற்றை மட்டுமே மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக எண்ண அலைகளை உருவாக்குவதைப் போல எந்த வித எந்திரங்களும் இல்லாமல் எண்ண அலைகளைப் பரவவிடுவது ஆளும் வர்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். (ஆளும் வர்க்கம் என்பதும் ஆளுங்கட்சி என்பதும் வேறுவேறானவை. இந்தியாவில் பி.ஜே.பி ஆண்டாலும், காங்கிரஸ் ஆண்டாலும், கம்யூனிஸ்டுகளே ஆண்டாலும் பார்ப்பனியம்தான் ஆளும் வர்க்கம் என்பதைப் புரிந்து கொண்டாலே போதும்) அப்படிப்பட்ட பொதுப்புத்தி வளர்க்கும் பணியைத் தம் தோள்மேல் போட்டுக் கொண்டு செய்வதில் தினமலருக்கு பெரும் பங்குண்டு.


அப்பணிக்கிடையில் இது போன்று நடிகைகள், சினிமாத்துறை குறித்த பொதுப்புத்தி உருவாக்குவதெல்லாம் சும்மா கவர்ச்சிக்கு குத்தாட்டம் போடுவது போல்தான். இப்படி உருவாக்கப்படும் பொதுபுத்திகள் எந்த அளவிற்குசெல்லும்?


ல்லா முஸ்லீமும் தீவரவாதி அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதியும் முஸ்லீம்களே! என்ற எண்ண வைப்பது வரை செல்லும்.


"அப்படியெல்லாம் எனக்கு எண்ணம் இல்லை, அவ்வெண்ணத்தை உருவாக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் சிந்தனை யிலும் எப்போதும் எனக்கு உடன்பாடு இல்லை" என்று கமல்ஹாசன் மறுத்தாலும், என்னைப் போல்.... நம்மைப்போல்... உன்னைப்போல் ஒருவன் என்று அவர் அடையாளம் காட்டும் காமன் மேன் கூட பொதுப்புத்தி சார்ந்து உருவாக்கப் பட்டவனே!


'வெட்னஸ்டே' என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் மறு உருவாக்கமாக வெளிவந்திருக்கும் உன்னைபோல் ஒருவன் வால்மீகி ராமாயணத்தை, தனக்கேற்ப மாற்றிக்கொண்ட கம்பனைப் போல பல இடங்களில் கூட்டி குறைத்துக் கொண்டிருக்கிறது... Taking-லும், Making-லும், கூட்டிக் கொண்டிருக்கிறது... Backing-ல் குறைத்துக் கொண்டிருக்கிறது...!


இந்து மதவெறி பற்றிப் பேசும் போது கூட 1998இல் நடந்த கோவை குண்டுவெடிப்புக்கு, 2002இல் நடந்த குஜராத் வன்முறையைக் காரணம் காட்டியிருப்பது வேக்காட்டின் குறைவைத்தான் காட்டுகிறது. அதனால் தான் குண்டு வைத்தேன் என்று காலத்தால் பிந்தைய நிகழ்ச்சியைக் காரணம் காட்டுவது - அறியாமல் நடந்ததா? அல்லது இப்படித்தான் கதை ஏதாவதொன்றைச் சொல்லி காரணம் காட்டுவார்கள் என்று சொல்வதற்காக நுழைக்கப்பட்டதா?


செத்தது மூன்றாவது மனைவிதானே மிச்சம் இரண்டு பேர் இருக்காங்கள்ல, போதாதா? என்று கேட்கும் கரம்சந்த் லாலாவால், குறைந்தபட்ச நியாயம் காட்டும் வாய்ப்பு கூட நக்கலோடு நிராகரிப்படுவது மோசமாக்கப்படவில்லையா?


மும்பையில் தாக்குதல்னா நமக்கென்ன? நம்ப வேற நாடு.... வேற பாஷை பேசுறவங்க.... நமக்கு அது ஒரு தலைப்புச் செய்தி அவ்வளவுதான் என்று கவலைப்படும் காமன் மேனிடம் மும்பை தாக்குதலுக்கு தமிழர்கள் பதறியதை நாடறியும். ஆனால் தமிழக மீனவன் சிங்கள இராணுவத்தால் சுடப்பட்டால் 4 வரிச் செய்தித் துணுக்கு கூட இந்தி(ய) செய்திதாள்களில் வருவதில்லையே? அப்படி வந்தாலும் 'Tamil fisher man shot dead' என்றுதானே வருகிறது, அப்போதெல்லாம் நாங்கள் இந்தியன் இல்லை, மும்பை தாக்குதலின்போது மட்டும் நாங்கள் இந்தியர்களா? என்று கேட்காமல் இருக்கமுடியவில்லையே!


இப்படி ஒன்றல்ல....... இரண்டல்ல.... ஒராயிரம் கேள்விகள் கேட்கப்பட வேண்டியிருக்கிறதே! தனது திரைப்படத்தின் ஒவ்வொரு ஷாட்டு குறித்தும் கவனம் கொள்ளும் கமல்ஹாசன் இதைக் கவனிக்காமல் விட்டிருப்பார் என்பதை ஏற்க முடியவில்லையே! பிரிவினைக் கலவரத்தின் வேர்வரை நாடிச்சென்று ஹேராம் எடுத்த கமல்ஹாசனை பொதுப்புத்தி சார்ந்து இயங்கும் காமன்மேனாகப் பார்க்க முடியவில்லையே! கமல்ஹாசனாகப் பார்க்காமல் கதை மாந்தனாகப் பாருங்கள் என்றும் கூட சொல்லமுடியாது. கதாபாத்திரத்தையும் தாண்டி தன் இயல்பான சமூகக் கோபத்தோடு நிற்கும் கமல்ஹாசனே முட்டிக்கொண்டு வெளித்தெரியும் போது பார்வையாளன் என்ன செய்யமுடியும்-?காமன்மேனுக்கு இந்தக் கோபங்கள் கூடாதென்று நாம் சொல்லவில்லை. ஆனால் common person ஆக இல்லாமல் போவதைத்தான் ஏற்கமுடியவில்லை. தனது பொன்விழாக் கொண்டாட்டங் களின் போதும் தன்னை பகுத்தறிவாதி என்று பெருமைபொங்க அடையாளப் படுத்திக் கொண்ட கமல்ஹாசன், முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்லவுமில்லை, முஸ்லிம்களை காப்பாற்றவேண்டிய அவசியமும் எனக்கில்லை என்று சொன்னதிலும் நமக்கு சம்மதமே! பயங்கரவாதத்தைக் கைக்கொண்டோர் எம் மதமாயினும், எக்கொள்கையிராயினும் நமக்கும் உடன்பாடில்லை தான்!


ஆனால் பொத்தாம் பொதுவாக எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள். அப்பாவியாய்(!) வெடிகுண்டு விற்றவன் இந்து என்பதாக வரும் கதாப்பாத்திரங்கள் சொல்லும் அரசியல் என்ன?


இவ்வேளையில் கலைஞர் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பில் கமல்ஹாசனோடு பேசிய நடிகர் சிவகுமார் சொன்ன கருத்தினையே தீவரவாதம் குறித்து நினைவுப்படுத்த விரும்புகிறோம்.


வெறுமனே தீவிரவாதிகள் என்று எல்லோரையும் சொல்லிவிடமுடியாது, வெளிநாட்டின் காசுபெற்று வன்முறை விதைக்கும் பயங்கரவாதி வேறு, உள்நாட்டில் தனது உரிமைகளுக்காக ஆயுதம் எந்திப் போராடுபவன் வேறு. இவன் போராடுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை நிறைவுசெய்தால்தான் தீர்வுகிடைக்கும்.


இல்லையென்றால் பக்கத்து வீட்டு நாய்க்கு பல் உடைந்ததற்கும் பாகிஸ்தான் உளவுத்துறை காரணம் என்று அறிக்கைவிடும் அத்வானி போல, தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள் என்று காட்டும் இந்துத்வாப் பிரச்சாரத்தை வேறுவடிவில் செய்யும் படமாகவே உன்னைப்போல் ஒருவன் அமைந்துவிடும். இந்த Common man உண்மையின் அடிப்படையை உணர விரும்பாத Confused man.

கருத்துகள்

PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
விஷயங்கள் கொஞ்சம் பழையது தான் என்றாலும், கேள்விகள் எப்போதும் கேட்கலாமே!
இருந்தாலும், தாமதத்திற்கு வருந்துகிறேன்!
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
கோவில்களிலிருந்து உருவானது ஊழல்.

கடவுள், கடவுளச்சிகளிடமிருந்து உருவானது காமம்.கோவில்களில் உள்ள கடவுளச்சி சிலைகளைப் பாருங்கள்.

எந்தக் கடவுள் இந்தியன் பீனல் கோடிலிருந்து தப்ப முடியும்?
இதையெல்லாம் நன்கறிந்த காஞ்சி
சுப்புணி, தேவநாதன் போன்றோர் கடவுளின் ஏஜண்ட்டுக்கள்.
இப்போது நடமாடும் கடவுள்களாக விளங்கிய என் டி ஆர், எம் ஜி ஆர்,
விளங்குகின்ற நடிக நடிகையர்
எல்லோருக்கும்,அப்போதிருந்ததாகச் சொல்லப்படும் கடவுள்களுக்கும் வாழ்க்கை முறை ஒன்றாகத் தானே தெரிகிறது.

யார் கண்டார்கள் ? பக்த கோடிகளுக்கு மட்டும் அனுமதியிருந்தால் இவர்களுக்கெல்லாம் கோவில்கள் கட்டிக் கடவுள்கள் ஆக்கி தேங்காய்,சூடம் எல்லாம் நடந்துவிடும்.
அப்புறம் என்ன குறை சொல்ல வேண்டியுள்ளது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இப்படி இத்துப்போன கடவுள்களை வைத்துக் கொண்டுதான் இழுத்துக் கொண்டு திரிகிறார்கள் இந்து முன்னணியினர்...
நன்றாய்ச் சொன்னீர்கள் தமிழன் அய்யா... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
Panboli இவ்வாறு கூறியுள்ளார்…
சொல்ல வேண்டிய செய்தி.சொல்ல வேண்டிய நேரம்.கமல்ஹாசனை தோல் உரித்தது பாராட்டப்பட வேண்டிய செய்தி. வாழ்த்துக்கள்.
Panboli இவ்வாறு கூறியுள்ளார்…
செர்ல்ல வேண்டிய செய்தி, சொல்ல வேண்டிய நேரம். கமல்ஹாசனை தோலுரித்தது பாரட்டப்பட வேண்டிய செய்தி. வாழ்த்துக்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//கோவில்களிலிருந்து உருவானது ஊழல்.

கடவுள், கடவுளச்சிகளிடமிருந்து உருவானது காமம்.கோவில்களில் உள்ள கடவுளச்சி சிலைகளைப் பாருங்கள்.

எந்தக் கடவுள் இந்தியன் பீனல் கோடிலிருந்து தப்ப முடியும்?
இதையெல்லாம் நன்கறிந்த காஞ்சி
சுப்புணி, தேவநாதன் போன்றோர் கடவுளின் ஏஜண்ட்டுக்கள்.
இப்போது நடமாடும் கடவுள்களாக விளங்கிய என் டி ஆர், எம் ஜி ஆர்,
விளங்குகின்ற நடிக நடிகையர்
எல்லோருக்கும்,அப்போதிருந்ததாகச் சொல்லப்படும் கடவுள்களுக்கும் வாழ்க்கை முறை ஒன்றாகத் தானே தெரிகிறது.

//
This is what is generalization and that is what the post is talking about..

--Anvarsha

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…