நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.
கருத்துகள்
இந்தியா இந்தியான்னு ஒரு நாட்டுல அடிக்கடி பாகிஸ்தான் திவிரவாதிகள் வந்து தொல்லை பண்றாங்க. அதுக்கு இந்தியாவில் இருக்கிற அரசியல் வியாதிகள் (அப்படித்தான் சொல்லனுமோ!!) ஒரு கண்டன அறிக்கை விட்டுட்டு வேலைய (??) பார்க்க போயிடறாங்க. எதவாது செஞ்சா வோட்டு போயிடோமுன்னு கவலை.
சரின்னு படறதை சும்மா மத்த நாடுகள் எல்லாம் என்ன சொல்லுமோன்னு கவலைப்படாமல் செய்ய ஒரு ஆள் வேணும் நமக்கு.
புஷ் பத்தி தப்பா பேசறவங்க எல்லோருக்கும் ஒரு கேள்வி. ஈராக்-ல நிறைய ஆயுதம் கிடச்சு இருந்தா இன்னிக்கு நாம எல்லோரும் புஷ்ஷை ஒரு ஹீரோ மாதிரி கொண்டாடி இருப்போம் இல்லியா? அவர் அதை தான் நம்பினார். அதனால செஞ்சாரு. அந்த மாதிரி பாகிஸ்தான் தான் காரணம்னு நாம நம்பறோம். போய் தைர்யமா நடவடிக்கை எடுக்க ஒரு ஆள் இருக்காங்கள நம்ம ஊர்ல?
புஷ் பண்ணினது தப்பா இருக்கலாம். ஆனால் அது புஷ் என்ற ஒரு தனி மனிதனின் முடிவு என்று எடுக்காமல் அமெரிக்காவின் முடிவு. அதை புஷ் என்ற ஒரு தலைவன் தைர்யமாக செய்தார் என்று பாருங்கள்.
நன்றி,
நடராஜ் கிருஷ்ணன்