மாநாட்டுச் சிந்தனைகள் - மின்சாரம் எல்லோருக்குமே தெரியும் தந்தை பெரியார் நூல்களை வெளியிடுவதிலோ, பகுத்தறிவு வெளியீடுகளைக் கொண்டு வருவதிலோ திராவிடர் கழகத்தோடு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தோடு போட்டி போட முடியாது என்று அந்தக் குழுவுக்கு மட்டுமா - எல்லோருக்குமே தெரியும். மிக நன்றாகவே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளை பகுத்தறிவுச் சிந்தனைகளை யார் எடுத்துச் சொன்னாலும் மானமிகு வீரமணி என்ன சொல்லுகிறார் என்பதுதான் எடுபடும் என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். உலகுக்கே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளுக்குக் சட்டம் வடிவம் கொடுக்க தேவையான அழுத்தத்தைத் தந்து, சாதிக்கக் கூடிய ஆற்றல் ஆசிரியர் வீரமணிக்குத்தான் உண்டு என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல. அகில உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிக மிக நன்றாகவே தெரியும். யாருக்குத்தான் தெரியாது? தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை எல்லைக் கோடுகளைத் தாண்டி, உலகின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் திறனும், திட்பமும் - அதற்கான அமைப்புகளை உருவாக்கித் தொடர்ந்து செயல்படச் செய்விக்கும் செயல் திறன் சிறு வயது முதலே இயக்கத...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.