நேற்றுபிறந்தநாள் கண்ட பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வண்ணமாக அவரது நெல்லை தி.மு.க. இளைஞரணி மாநாட்டு உரையை இங்கு வெளியிடுகிறோம். இளைஞர்களே, இளைஞர்களே! பகுத்தறிவுதான் நம் மூலக் கொள்கை! வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம்தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படியுங்கள்! நெல்லை மாநாட்டில் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் வழிகாட்டும் உரை திருநெல்வேலி, டிச. 18- நமது இளைஞர்கள் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படிக்கவேண்டும் என்றார் தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்.திருநெல்வேலியில் நடைபெற்ற தி.மு.க., இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டதாவது: இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று எழுச்சிமிக்க உரைகளை இளைஞர்கள் பலபேர் இங்கே நிகழ்த்துவதை நான் கேட்டு உள்ளபடியே மிகுந்த பூரிப்பு அடைகிறேன். காலையில் இருந்து இந்த நேரம் வரையில் தொடர்ந்து இளைஞர்கள் முழங்கினார்கள். அந்த முழக்கம் இளைஞர்களுக்கு இயல்பான ஒரு முழக்கமாக அது அமைந்திருக்கிறது. நெல்லை மாநகரம், முழுவதும் கொடிக்...