செப்டம்பர் 11: இந்த நாள் பலருக்கு பயங்கரவாதிகளால் அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நாளாக நினைவிருக்கும். இன்னும் சிலருக்கு அமெரிக்கப் பயங்கரவாதத்தால் சிலி அதிபர் அலண்டே படுகொலை செய்யப்பட்டது நினைவு வரும். ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் நடந்த ஒரு படுகொலையும், அதனைத் தொடர்ந்த கலவரமும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்று சொல்லமுடியவி ல்லை. தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக ஒருவர் கொல்லப் படக் கூடுமா? கூடும் என்கிறது தமிழக வரலாறு... 1957 பொதுத் தேர்தாலையும், இடைத்தேர்தலையும் ஒட்டி, முதுகுளத்தூர் பகுதிகளில் எழுந்த கொந்தளிப்புகளை அடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய அமைதிக்கூட்டத்தில் தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக கொல்லப்பட்டவர்தான்... தியாகி இம்மானுவேல் சேகரன் ஊர் ஊராகச் சென்று தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு தன் 34-ஆவது வயதிலேயே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகவே தியாக மரணத்தைச் சந்தித்த பெருமை இ...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.