

விழாத் துளிகள்:

* சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கல் உடல் நலக் கோளாறு காரணமாக வர இயலாமல் வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்கள்.
* ராம் விலாஸ் பாஸ்வான் கூறும்போது, "முதல் முறை திரு.வீரமணி அவர்களுடன் சென்றுதான் நான் கலைஞரைப் பார்த்தேன்" என்று பழைய நிகழ்வை நினனவு கூர்ந்தார்.


* விழாவில், தயாநிதிமாறன் கலந்துகொள்லவில்லை என்பது பழைய செய்தி. அதேநேரம் மு.க.அழகிரி, அரங்கத்துக்குள் நுழைந்து வி.வி.அய்.பி. இடத்தில் அமர்ந்தபோது அத்தனை பத்திரிகைக் கண்களும் அதைநோக்கித் திரும்பி சிமிட்டின.
*விழாவையொட்டி சென்னையெங்கும் தோரணங்களும், கொடிகளும், பேச்சு, பாடல் ஒளிபரப்புகளும் என்று கொண்டாடிவிட்டார்கள். அதேசமயம் தமிழகமெங்கும் இருந்து திரண்டிருந்த தொண்டர்களில் தீவுத்திடலில் இருந்ததைப் போல மூன்றூ பங்குப்பேர் வெளியில் திரண்டிருந்தார்கள். இன்னும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாமலும்கூட பல ஊரிலிருந்து வந்த தொண்டர்கல் திண்டாடினார்கள்.
"எனக்குப் பரிசு வேண்டும்" - கலைஞர்
"நான் மறுத்தும் கூட எனக்கு விழா ஏற்பாடு செய்தார்கள். என்னை வாழ்த்துவதற்கு பல்வேறு பணிகளுக்கிடையிலும், உ.பி. தோல்விக்கிடையிலும் கூட வந்திருக்கிறீர்கள்! (சோனியாவும், மன்மோகன் சிங்-கும்)
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, எனக்காக நான் கேட்கும் பரிசுகள் சில உண்டு" என்று பட்டியலிட்டார்.

1. காவிரிப் பிரச்சினை
2. மகளிர் இட ஒதுக்கீடு
3. சிறுபான்மையோர் இடஒதுக்கீடு
4. 27% இடஒதுக்கீடு
கலைஞருக்கு அந்தப் பரிசுகள் கிடைக்க வாழ்த்தும் நெஞ்சங்களோடு நாமும் இணைகிறோம்.
வாழ்க கலைஞர்!
வாழ்க கலைஞர்!!
தொடர்க அவர் பணி!!!
(வலைப்பூக்களை நுகர்ந்து நாட்களாகிப் போனது. பெரியார் படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகளில் நானும் பங்கேற்ற காரணத்தால் கடந்த 10 தினக்களுக்கும் மேலாக வேறு பணிகளில் ஈடுபடமுடியாத அளவுக்கு என் சூழல் இருந்தது. விட்டுப்போன பதிவுகள் தொடர்ந்து வரும். )
கருத்துகள்