ஏற்கனவே பார்த்த பதிவுகளில் உள்ள படங்களில் சாய்பாபா சிக்கியதைப் போல இப்போதும் சிக்குவார் என எதிர்பார்த்து நம்முடைய நண்பர்கள் யாரும் சாகச வேலைகளில் இறங்க முடியாது. பாபா சுதாரித்துக் கொண்டார். வருவோர், போவோர் எல்லாம் கையடக்க கேமரா வைத்துக் கொண்டு கண்ட கண்ட ஆங்கிள்களில் படமெடுத்து தனது 'கையடக்க' சித்து விளையாட்டுக்களை அம்பலப்படுத்த ஆரம்பித்தால் என்னாவது. சினிமாவின் நுணுக்கம் தெரிந்த நமது ஹீரோக்கள் தான் எந்த ஆங்கிளில் தன்னை எடுக்கக் கூடாது என்று முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக , லோ ஆங்கிளில் இருந்து எடுத்தால், தாடையின் கீழ் சதை தொங்குவது துண்டாக தெரியும். அதனால் ஆரம்ப காலங்களில் வில்லனுடன் சண்டையிடும் காட்சிகளிலும், அறிவுரை வசனங்கள் பேசும்போதும் விரும்பிக்கேட்ட லோஆங்கிளை, வயதான பின்னாளில் அவர்களே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். இது நிற்க.... லோ ஆங்கிள் என்பது எடுக்கப்படும் பிம்பத்தை உயர்த்திக்காட்டப் பயன்படும் ஆங்கிளாகும். இதனால் அவ்வளவு பெரிய திரையில் நடிகரின் பிம்பம் தெரியும் போது, அதைப் பார்க்கும் நமக்கு, அவர் மிகப் பெரியவர், பலம் வாய்ந்தவர் என்ற உள்ளுண...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.