கணிதத்தின் அடிப்படையைப் புரிய வைக்க முயலாமல் கணக்கு போடுவதற்கு எளிய முறை என்று பல வழிமுறைகளை பயிற்றுவிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? எங்கள் சிறு வயதில்... பள்ளிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் வருவார்கள். அவரவர் முயற்சியில் பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட அறிமுகங்கள் ஆர்வத்தை விதைத்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேஜிக் செய்பவர், அறிவியல் விளக்கங்கள் சொல்பவர், எளியமுறை கணிதம் என்று கணித விளக்கம் சொல்பவர், தாளை நறுக்கி அதில் பல்வேறு வேலைப்பாடுகள் செய்பவர், ஓவியத்தில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தருபவர், குட்டிக் குட்டித் தையல்கள், பந்து-கூடைகள் நெய்யக் கற்றுத் தருபவர், விதவிதமான பேனா பென்சிகள் விற்பவர், பெட்ரோலைச் சேமிக்கும் புதிய வகை கார்ப்பரேட்டர் விற்பவர் என்று ஏராளமாக வருவார்கள். அவர்களில் சிலர் தங்கள் திறமைக்கு டிக்கெட் பணம் போல இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். சிலர் 8 பக்கத்திலோ, 16 பக்கத்திலோ ஏறத்தாழ சாம்பலைத் தாண்டி கருப்புக்கு நெருக்கமான நிறத்திலான சாணித் தாளிலும், அதே தரத்தில் மிக மெல்லிய காகிதக் கொடி தடிமனிலான வண்ண மேல்தாளிலு...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.