பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் நான் கண்ட சுவரெழுத்து ஒன்றின் படம் மூலம் அறிந்தேன்.
இது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலிருக்கும் பூணூலூடுருவிகள் கொந்தளித்து திராவிடர் கழகத்துக்கு எதிராக ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்களாம்.
இந்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது த.பெ.தி.க!
போராட்டத்துக்கான கிரெடிட் அவர்களுக்குப் போவது தான் சரியானது.
திராவிடர் கழகம் அப்படியொரு போராட்டத்தை அறிவித்தால், அதற்கான எதிர்வினையையும் திராவிடர் கழகம் தாராளமாக எதிர்கொள்ளும் என்பது வரலாறு.
ஆனால், என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்றே தெரிந்துகொள்ளாமல் கூறுகெட்டத் தனமாக குதிப்பது பின்புத்திப் பார்ப்பனர்களுக்குப் பழக்கமானது. என்ன செய்ய?
நிற்க,
மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததாக புராணம் வைத்து, தீபாவளி கொண்டாடும் பார்ப்பனர்கள், அந்த வராக அவதாரத்தின் அடையாளமான பன்றிக்கு பூணூல் மாட்டினால் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு வேளை பூணூல் அணிவிப்பதற்கான / உபநயனம் செய்வதற்கான (பூணூல் கல்யாணம் செய்வதற்கான) தகுதியும், அனுபவப் பாத்தியதையும் தங்களுக்குத் தான் உண்டு என்பதாக பார்ப்பனர்கள் உரிமைப் பிரச்சினை எழுப்புகிறார்களோ என்னவோ?
உபநயனம் செய்யும் வேளையில் சொல்ல வேண்டிய மந்திரங்களை முறையாக உச்சாடனம் செய்யாமல், தேவபாஷையின் மேன்மையைக் குலைத்து விடுவார்களோ என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்.
கடவுள் அவதரிக்க தேர்ந்தெடுத்த உயிரான பன்றியை விடவும், தங்கள் அழுக்குப் பூணூல் மேன்மையானது என்று கருதுவதிலேயே, பார்ப்பனர்கள் ”தெய்வாதீனம் ஜகத் சர்வம் மந்த்ராதீனம் தூ தெய்வதம் தன் மந்த்ரம் பிராமணாதீனம் பிராமணா மம தேவதா” என்று கடவுளை விடத் தாங்கள் மேலானவர்கள் என்ற மனோநிலையிலிருந்து மாறியதாகத் தெரியவில்லை.
ஆகவே, அவர்கள் பூணூல் அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிகிறது.
இதில் வாரண்ட்டே இல்லாமல் சில சில்வண்டுகள், பூணூல் அணிவது தமிழரின் பண்பாடு என்று காமெடி கூட்டி, வண்டியில் ஏறுவதையும் காண முடிந்தது. அதுகளை விட்டுத் தள்ளுவோம்.
பூணூல் அணிவதை, அவாளின் பூர்வாங்க உரிமை என்னும் கருத்திலும், மத உணர்வு என்னும் கருத்திலும் தோழர்கள் சிலர் அணுகியதையும் பார்க்க முடிந்தது. பூணூல் என்பது அவர்களின் உரிமை என்றால், ”நம்மை சூத்திரன் என்று சொல்வதும் அவர்களின் பிறப்புரிமை அதை ஒப்புக் கொள்வோம்” என்பதற்கு ஒப்பாகும்.
பார்ப்பனர்கள் பூணூல் அணிவது பார்ப்பனரல்லாதாரை இழிவுபடுத்தவே!
பார்ப்பனரல்லாதாரில் சிலர் பூணூல் அணிவது - ஒருக்காலும் அவர்களை இந்துமதத்தில் பார்ப்பனர் அந்தஸ்திற்கு உயர்த்தாது. ”நீங்கள் அணியும் நூலில் அல்லாமல்
வேறு நூலிலேனும் நாங்களும் அணிந்துகொள்கிறோமே” என்று கெஞ்சிப் பெருமை தேடுவதாக நினைத்துக் கொள்ளும் நிலையேயாகும்.
நிற்க, இந்தப் பிரச்சினையில் சிலர் திராவிடர் கழகத் தலைவருக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவு செய்வதாகக் கருதிக் கொண்டு ஏதோ படம் போட்டார்களாம்.
கருமம், அவர்களுக்கு இந்துமதத்தில் செருப்பின் நிலை என்னவென்பதும் தெரியவில்லை. 14 ஆண்டுகள் செருப்பு தான் ஆட்சி செய்ததாக ராமாயணம் கூறுகிறது. அப்படிப்பட்ட செருப்பு எப்படி இவர்களுக்கு இழிவானது என்று தெரியவில்லை.
அதேசமயம், செருப்பினால் எதிர்ப்பு தெரிவிப்பதென்பதும் பெரியாருக்கோ, பெரியார் தொண்டர்களுக்கோ புதிதில்லை. பெரியார் தொண்டர்கள் மத்தியில் செருப்பை விட்டெறிந்து ராமனுக்கு செருப்படி வாங்கிக் கொடுத்த நிகழ்வும் நடந்ததுண்டு.
தன் மீது செருப்பை வீசி எறிந்தவர்கள் மத்தியில் மீண்டும் சென்று, மற்றொரு செருப்பையும் ஏற்றுக் கொண்டு ஒரு ஜோடிச் செருப்பைச் சம்பாதித்த நிகழ்வும் நடந்ததுண்டு. அப்படி செருப்பு வீசிய இடத்தில்
அதே பெரியாருக்கு சிலையொன்று முளைத்த வரலாற்றுப் பெருமையும் பெரியாருக்குக் கிடைத்ததுண்டு.
உங்கள் பூணூலைக் காட்டிலும், நாம் காலில் அணியும் செருப்பு சமூகத்திற்கும், எங்கள் - அடுத்தவர் நலனுக்கும் நன்மையானது; பயனுடையது.
எந்தச் செருப்பாலும் இங்கு பூணூல் பருப்பு வேகாது. எனவே, அது குறித்தும் கவலையில்லை.
குறிப்பு:
சுருக்கமாக எழுத வேண்டுமென்று நினைத்தாலும் நீண்டுவிட்டது. மன்னிக்க!
#பன்றிக்குப்_பூணூல்

கருத்துகள்