ஹார்டு டிஸ்குகளில் கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் காணாமல் போகும் கோப்புகளைப் பற்றி அறிந்ததும், ஏற்படுகிற மனநிலை - அணுகுண்டு வீச்சில் அழிந்துபோன நகரங்களில் உறவுகளைத் தேடுகிற மனநிலை! சுவடே இல்லாமல் அழிந்துபோய்விடும் அவற்றைப் பதிவு செய்யவோ, காக்கவோ நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நொடியில் சிலிக்கான் பொதிகளுக்குள் கரைந்துபோய்விடுகின்றன. ஹெட் கடித்தாலும் மிச்சமிருக்கும் ஒலி/ஒளிப்பேழையின் (கேசட்) மேக்னடிக் டேப்பை செலோ டேப் கொண்டு ஒட்டி பத்திரப்படுத்தும் அளவிற்குக் கூட பாதுகாப்பில்லை. சிடிகள் நொறுங்கினால் 700 எம்பி, டிவிடி தெறித்தால் 4.7 ஜிபி, ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனாலோ ஒன்றிரண்டு டிபி என நம் வரலாற்றை, படைப்பை காணாதடித்து நம் பிபியை வெகுவாக எகிற வைத்துவிடுகின்றன. கடந்த தலைமுறை பிலிமாகவும், புத்தகமாகவும், படங்களாகவும் காத்து வைத்தவைகளை முழுமையான செலவுவைக்கும் தீர்வுகளுக்குப் போகமுடியாத நம் எளிய (சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்குகள் போன்ற) டிஜிட்டல் முயற்சிகள் ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுகின்றன. கிழிந்த தாள்களை ஒட்டியோ, சிதைந்த படத்தின் மீது வரைந்தோ அவற்றை மீட்டமைக்க...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.