முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?

"இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?"~ என்று கேட்கும் அயோக்கியர்களுக்கும், மடையர்களுக்கும் இது சுத்தமாகத் தெரியாது. நீங்களாவது தெரிந்துகொள்ளுங்கள்.

ந்திய சுதந்திரத்திற்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல்முறையாக (1993) இடஒதுக்கீடு கிடைத்தது.
அதற்கு வி.பி.சிங் என்னும் பெருமகன் தன் பிரதமர் பதவியை பலி கொடுக்க வேண்டியிருந்தது.

அதுவும் வேலைவாய்ப்பில் மட்டும் தான்! அதற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தான், அதாவது 2006-இல் தான் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. அதையும் பிச்சுப் பிச்சுத் தான் போடுவோம் என்று சொல்லியும் இன்னும் முழுமையாகக் கிடைத்தபாடில்லை.

* கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாமல், வேலையில் முதலில் இட ஒதுக்கீடு தருதல் என்பதே கேள்விக்குரியது. முதல் படிக்கே வழி விடாமல், மூன்றாவது படியில் ஏறு என்பதைப் போல. அதையும் கடந்து தான் சிலர் ஏறினார்கள். ஆனால் அங்கேயும் உயர்ஜாதிக் கும்பல் இடத்தை விட்டுவைக்கவில்லை.

* முதல்முறையாக இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும்போதே, காலங்காலமாக பசியில் கிடந்து பந்தியில் அமர்ந்தவரின் பசியேப்பத்தை, ’நீ புளியேப்பக்காரன் உனக்கு இடம் கிடையாது’ என்று சொல்வதைப் போலத் தான் இருந்தது உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை. உணவுடனே உள்சென்று உயிரைக் குடிக்கும் கிருமியைப் போல, கிரீமி லேயர் என்று அரசியல் சட்டத்திலும் சமூக நீதியிலும் இல்லாத ஒன்றைப் புதிதாகத் திணித்து தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு அனுமதி தந்தது உச்சநீதிமன்றம்.

இதையெல்லாம் தாண்டி தான் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

*******************************

பார்ப்பனரல்லாத இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் கமிஷன் அறிக்கையை 1990-ல் பிரதமர் விபி.சிங் அமல்படுத்தியதன் காரணமாகத் தான் அவருடைய ஆட்சிக்குத் தந்த ஆதரவை விலக்கி ஆட்சியைக் கவிழ்த்தது பாரதிய ஜனதா கட்சி.

1990களில் நடந்த இந்திய அளவிலான மிகப்பெரிய சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கியது தான் மிக முக்கியக் காரணியாகும். பாபர் மசூதி - ராமர் கோவில் பிரச்சினையைப் பெரிய அளவில் பா.ஜ.க கையில் எடுத்ததும், அத்வானி ரத்த யாத்திரை சென்றதும் மண்டலை ஒழிப்பதற்காகத் தான்.

பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுத்துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்புதான் அரசு நிறுவனங்களை வேகவேகமாக தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அதாவது தனியார் மயமாக்குவதன் மூலம் இடஒதுக்கீடு வழங்காமல், பார்ப்பன ராஜ்ஜியத்தைத் தக்க வைக்கும் முயற்சிதான் இந்தியாவின் மூலதனத்தையே வெளிநாட்டவருக்கு விற்கும் முடிவுக்குக் காரணம். 

எப்படியாவது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும்.. அதற்கு இந்த நாட்டையே காட்டிக் கொடுத்தாலும், காவு கொடுத்தாலும் பரவாயில்லை என்பது தான் எப்போதும் பார்ப்பனியத்தின் பண்பு. அதைத் தான் இன்றுவரை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் தான் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை உதயமானது.
*******************************

இப்படி பல்வேறு சிக்கல்களைத் தாண்டியும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27%இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்ட கடந்த 22 ஆண்டுகளில்,
மத்திய அரசின் குரூப் ஏ பணியிடங்களில் 11.11% தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இடம்.
பொதுத்துறை வங்கிகளின் உயர்பதவிகளில் 1.15% தான் பிற்படுத்தப்படோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் இன்னும் இட ஒதுக்கீடா என்று கேட்கிறார்கள் அயோக்கியர்களும், மடையர்களும்!

அரசியல் சட்ட ரீதியாகவே தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அடிமட்டப் பணிகளில் தான் அவர்கள் நிரப்பப்படுகிறார்கள் என்பதும், உயர்பதவிகளை ஒட்டுமொத்தமாக பார்ப்பன உயர்ஜாதிக் கும்பல் தான் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது என்பதும் இன்னும் போராட்டத்திற்குரியவையாக இருக்கின்றன. பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்டோருக்குத் தான் இட ஒதுக்கீடு என்பதைப் போல கருதிக் கொண்டு, கோட்டாவில் வந்தவர்கள் என்று அவர்களைக் கேலி பேசும் மூடர் கூட்டமாக இல்லாமல், தங்கள் உரிமை நசுக்கப்படுகிறது என்ற சுரணையற்று, தங்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமை உள்ளது என்ற உணர்வும் அற்று, ஜாதி போதை தரும் மந்த புத்தியால் ஜாதிச் சேற்றில் உழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு விழிப்பு வர வேண்டிய காலம் இது.

தங்கள் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பார்ப்பன, உயர்ஜாதிக் கும்பல் தான் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பற்காகவே, இட ஒதுக்கீட்டையே கேலி பேசும் மனநிலைக்கு அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன பார்ப்பன ஆளும் வர்க்கமும், ஊடகங்களும்!


இதையெல்லாம் விட்டுவிட்டுத் தான், பிற்படுத்தப்பட்ட மக்களின் இயல்பான இந்து ஜாதி மனநிலைக்குத் தூபம்போட்டு அதை ஜாதி வெறியாக மாற்றும், ஜாதிவெறியூட்டும் வேலையை மட்டும் செய்வதற்காகவே தன் அடியாள் படையை அந்தந்த ஜாதிகளின் பெயரில் இறக்கிவிட்டிருக்கிறது இந்துத்வா.

இட ஒதுக்கீடு அமலாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் மறுக்கப்படும் உரிமையை மீட்டெடுக்கவும், மறைக்கப்படும் இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளைப் பெறவும் கடுமையான போராட்டத்தைச் செய்ய வேண்டிய அவசியம் பிற்படுத்தப்படோருக்கு இருக்கிறது. இந்திய அளவிலான களத்திற்குத் தொடக்கமாக தமிழகத்தை தயாரிக்கிறது திராவிடர் கழகம்.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்திலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சமூகநீதிக் களத்தில் ஜாதியில்லை; மதமில்லை; கட்சியில்லை; பேதமில்லை... ஒன்றுபடுவோம்... வென்றுவருவோம்!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//மத்திய அரசின் குரூப் ஏ பணியிடங்களில் 11.11% தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இடம்.//
எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.மீதி இருப்போர் அத்தனை பேரும் முற்பட்ட இனத்தை சேர்ந்தவர்களா? அதற்கான சாத்தியமே இல்லையே .பெரும்பாலான சலுகைகளை வசதி படைத்த பிற்பட்ட இனத்தவர்தான் அனுபவித்து வருகிறார்கள்.அரசு பணிகளில் முற்பட்ட இனத்தை பார்ப்பதே அரிது.தரப்பட்டியலில் முன்னிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் பொதுப்போட்டியிலும் பின்னிலையில் உள்ளவர்கள் இடஓதுக்கீட்டிலும் சலுகை பெறுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள் முற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்தவர்களே. தமிழகத்ததில் உயர் அலுவலர்களின் எனக்குத் தெரிந்து முற்படுத்தப் பட்டவர் ஒருவரைக் கூட நான் பார்த்ததில்லை
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அது எப்படி உங்கள் கண்களுக்கு மத்திய அரசுப் பணிகளை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன, உயர்ஜாதியினர் தெரியாமல் போகிறார்கள் எனத்தெரியவில்லை. இருக்கட்டும். நான் இங்கே பதிவு செய்துள்ள கணக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கிய தகவல்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent article.

Christo

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…