நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை... நீ(யே/யோ) என் பெண்ணுறுப்பிலிருந்து வந்தாய்! I didn't come from your Rib! You came from my vagina! இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்திருந்த இந்தப் படமும் வாசகமும் வெகுவாகக் கவர்ந்தது. பைபிளின் புரட்டுக்கு மறுப்பு சொல்லும் பகுத்தறிவு வாதமாகவும், பெண்ணின் முதன்மையைக் காட்டுவதாகவும் இருந்த இந்த ஆங்கில வாசகத்தை தமிழில் எழுதலாமே என்று தொடங்கினேன். Vagina என்ற சொல்லுக்கு சரியான வார்த்தையைத் தேட விக்சனரி சென்றேன். வசைச் சொற்களாக பயன்படுத்தப்படும் சொற்களும் பட்டியலில் இடப்பட்டிருந்தது. அதற்கு என்ன விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் என்று படிக்க அதையும் சொடுக்கினேன். ஒலிப்பு பகுதியும் இருந்தது. இயக்கினேன். ஹுப்ப்ப்.. பலமுறை வசையாகக் கேட்ட வார்த்தை தான். ஆறாம் வகுப்பில் முதன்முதலாகக் கேட்டது தொடங்கி பலமுறை செவியில் விழுந்த கெட்ட வார்த்தை தான். எப்போதும் யாரையும் திட்டுவதென்றால் முதலில் பெண்ணை இழிவுபடுத்தும் சொற்கள் தானே சமூகத்தில் புழங்குகிறது; பால்வேற்பாடற்ற ஒரு திட்டுச் சொல் வேண்டும் என்று கூட முன்பு நிலைத் தக...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.