பெங்களூரில் இருக்கிறேன். இதை பெங்களூரு என்று சொன்னால் பெங்களூர் வாசிகள் ஏற்க மாட்டார்கள். அதன் புறநகர்ப் பகுதி - ஒயிட்ஃபீல்ட் அருகில்! வரிசையாக பெரும் பெரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக இருக்கும் பகுதியில் வசிக்கும் தங்கை வீட்டிலிருந்து பார்த்தால், பக்கத்தில் இருக்கும் நீளமான ஓரிடம் மட்டும் பச்சைப் பசேல் என்று இருக்கும். முழுக்கவே விவசாயம் இருந்த பகுதியில் பிளாட் போடப்பட்டது போக அந்த வால் போன்ற நிலத்தில் தான் விவசாயம் நடைபெற்றுவந்ததாம். அதுவும் காரட் செடிகள். 4-ஆவது மாடியிலிருந்து பார்க்க குட்டி குட்டியாக மிக அழகாக இருக்கும். அந்த இடத்தை பலரும் விலைக்குக் கேட்டுவருவதாகவும், அதன் உரிமையாளர் மறுத்துவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பொங்கலுக்காக இந்த முறை வந்து பார்க்கும்போது அதிர்ச்சி! அண்மையில் அதற்கு எதிர்ப் பகுதியில் கட்டப்பட்டுவரும் மற்றொரு அ.மா.கு-க்காக, அதன் பணியாளர்கள் தங்கும் பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது அந்த நிலம். தகரத் தகடுகள் வேயப்பட்ட குடிசைத் தொகுப்பாக இருக்கிறது அந்தப் பகுதி! வடநாட்டுப் பணியாளர்களும், பள்ளி என்றால் என்னவென்றே அறியாத அவர்களது குழந்தைக...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.