அது ஒரு மழைநாள்! பள்ளி விரைவாக மூடப்பட்டுவிட்டது. நான் ஆறாம் வகுப்பில் எஸ்.எம்.எஸ். பள்ளியில் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகியிருக்கும். பள்ளி விரைவாக விட்டாலே எழும் குதூகலம் - மழையைத் தாண்டி எங்களை மகிழ்ச்சியில் நனைத்திருக்கிறது. எப்போதும் பள்ளிவிடும் நேரத்திற்கு வந்து அழைத்துச் செல்ல வரும் அய்யாவுக்கு (அப்பாவுக்கு Samy Samatharmam ) சீக்கிரம் பள்ளி மூடப்பட்ட தகவல் தெரியாதே என்று எனக்கொரு சந்தேகம். அப்போது நாங்கள் இருந்த திருவள்ளுவர் திருநகர், சர்ச் 5-ஆம் தெருவிலேயே ’நரம்பி’ என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் நாராயணன் என் வகுப்பிலேயே என்பவனும் படித்துவந்தான். இன்னொரு வகுப்புத் தோழன் வேலுச்சாமியுன் உடன் சேர மழைவிட்டு தூறிக் கொண்டிருந்த சாலையில் நடக்கத் தொடங்கிவிட்டோம். நடக்கத் தொடங்கியதற்கு இவ்வளவு பில்ட் அப்பா? என்று கேட்கத் தோன்றலாம். காரணம் உண்டு. பள்ளிக்கோ எங்குமோ நடந்து சென்று பழக்கமில்லாத ஆள் நான். எத்தனைப் பணி இருந்தாலும், சரியான நேரத்திற்கு எங்களை அய்யா வந்து அழைத்துச் செல்லாத நாளே இல்லை. எங்கள் அய்யாவின் வண்டிச் சத்தம் கேட்டாலே என்னுடன் படிக்கும் மாணவர்கள் கூட பள்ளி ம...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.