முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..


”விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..”
”விட்டால் விளையாட்டிலும்
இட ஒதுக்கீடெல்லாம் கேட்பீங்க போல...”
என்றெல்லாம் பேசும் அரைகுறைகளுக்கு,
அதாவது ‘ஹிந்தியர்’களுக்கு
இப்படம் சமர்ப்பணம்!

“விளையாட்டில் ஜாதி பார்க்காதே”
என்று ஜாதி பார்ப்பவனிடம் போய்ச் சொல்!
ஜாதிப் பாகுபாடு இருக்கிறது என்று
எடுத்துச் சொல்பவனிடம் வாய்ஜம்பம் காட்டாதே!

திறமை உள்ளவன் எல்லாம்
தெருவில் கிடக்கையில்
தகுதி திறமை எல்லாம்
பூணூல் கயிற்றில் ஆடுகிறது என்று சொல்லும்
கூட்டத்தில் போய்ச் சொல்...
“ஜாதி பார்க்காதே” என்று!


ஏர் பிடிக்காத எம்.எஸ்.சுவாமிநாதனை
வேளாண் விஞ்ஞானி என்று சொல்லி
நிலத்தைப் பாழ்படுத்திய
பார்ப்பனக் கூட்டத்திடம் போய்ச் சொல்...
“ஜாதி பார்க்காதே” என்று!

கிரிக்கெட்டில் இத்தனை சதவிகிதம்
எஸ்.சி/ எஸ்.டி...
இத்தனை சதவிகிதம்
ஓ.பி.சி...
இத்தனை சதவிகிதம்
சிறுபான்மையினர்
என்று
இல்லாத இடஒதுக்கீட்டை
இருப்பதாய்க் காட்டி
கிண்டல் செய்யும்
வட இந்திய மின்னஞ்சலைப்
நண்பர்களுக்குப் பரப்பும் முன்
நிரம்பி இருக்கும்
பார்ப்பன கிரிக்கெட்டர்களைக்
கணக்கெடுத்துவிட்டுச் சொல்
“ஜாதி பார்க்காதே” என்று!

(மணிவர்மாவின் கீழ்க்காணும் புகைப்படக் கவிதையை ஒட்டி... https://www.facebook.com/photo.php?fbid=4625257835769&set=a.1176580180983.27774.1422469350&type=3&theater)

கருத்துகள்

வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஹி...ஹி இப்படி சொல்றது எல்லாம் ஏன் தெரியுமா, அவாளே எல்லாம் புடிச்சுக்கிட்டான்னு அடுத்தவங்க சொல்வதற்கு முன் அவங்களே கிளப்பிவிட்டுக்க தான்.

இந்திய கிரிக்கெட் அணியில் 11 பேர் ஆடினால் அதில் 8-9 பேர் அவாள் தான்.

ஜூனியர் டீம்க்கு ஆள் எடுக்கும் போது தோள்ப்பட்டையை தடவிப்பார்ப்பாங்களாம் உள்ள கயிறு இருக்கான்னு பார்க்க.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சாட்டையடி வரிகள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…