முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சார் பெட்ரோல் எங்க போடுறாங்க தெரியுமா?

”மணி ஏழரை ஆயிடுச்சு! எட்டு மணிக்குள்ள பில் கட்டியாகணும். இல்லைன்னா எனக்கு கால் பண்றது கஷ்டமாயிடும்” என்று அக்கா புலம்பிய காரணத்தால், கலையை இழுத்துப் போட்டுக் கொண்டு மாண்டியத் சாலையில் இருக்கும் ஒரு தனியார் செல் நிறுவன பணம் உறிஞ்சியகத்திற்கு சென்றேன்.

அதென்ன பணம் உறிஞ்சியகமா? சொல்கிறேன். மாத செல் கட்டணம் கட்ட சென்ற இடத்தில், ’கார்டா? கேஷா?’ என்றார்கள். வழக்கமாக ’கார்டு’ என்றால், அங்கே போய் தேய்த்துக் கொள்ளுங்கள். பணம் என்றால் இங்கே கட்டுங்கள் என்பார்கள். ஆனால் கேஷ்ன்னா அங்க தனியா ஒரு மெஷின் இருக்கும் அதில போய் கட்டிடுங்க என்றார். உண்மையில் முதல் முறையாக இப்போது அந்த இயந்திரத்தைப் பார்த்தேன். ஏ.டி.எம்-இல் பணம் எடுப்பதைப் போல ஒவ்வொரு நோட்டாக வாயில் வைத்தால் மாட்டுக்கு தீனி கொடுப்பதைப் போல சரேலென உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு 500 நூபாய் நோட்டை வைத்தேன். உறிஞ்சிக் கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான சிட்டையை நீட்டியது. கிழித்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் போதெல்லாம், ’இதே போல பணம் கட்டுவதற்கு இடம் இல்லையல்லவா? இருந்தால் நன்றாக இருக்குமே.. அவரவர் வங்கியில் காத்திருப்பதும் குறையுமே’ என்று தோன்றும். இன்று அதே போன்றதொரு இயந்திரத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி! பணத்தை தின்னக் கொடுத்துவிட்டு, கீழிறங்கி வந்தபோது, ஓர் இரு சக்கர வாகனத்தோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் கேட்டார்.

“சார் பெட்ரோல் எங்க போடுறாங்க தெரியுமா?”

ஒரு கணம் விழித்தேன். இந்தக் கேள்வி எனக்குப் புதிதாயிருந்தது. ‘பெட்ரோல் பங்கில தான் போடுவாங்க’ என்று பதில் சொல்ல வாயெடுக்கும் முன், ’தண்ணியடிச்சிருக்காய்ங்களோ?’ என்று தோன்றியது. பின்னர் தான் நினைவுக்கு வந்தது - ’பெட்ரோல் கிடைப்பது சிரமமாக இருக்கிறது’ என்று தம்பி சொன்னது.

பின்னர் ஊதி ஊதி ஒரு வழியாக வண்டியை ஸ்டார்ட் செய்தவர்களுக்கு, ஆல்பர்ட் எதிரில் போடுவதாக கையைக் காண்பித்து அனுப்பினேன்.

விலையேற்றத்திற்கு முன்புவரை தட்டுப்பாடின்றி கிடைத்தது பெட்ரோல். விலையேறுவது தெரிந்ததும் வழக்கம் போல 2, 3 மணிநேரங்களை அவஸ்தையோடும் மன உளைச்சலோடும் தொலைத்து 3 லிட்டர் பெட்ரோல் போட்டு ரூ.22.50-அய் சேமித்து வந்தார்கள் நமது மத்தியதர வர்க்கத்தினர். அன்றைக்கும் அடுத்த நாளும் பற்றாக்குறை என்றால் கூட, சரி எல்லோரும் போய் போட்டதனால் என்று சொல்லலாம். இன்றும் அதே நிலைமை என்றால் என்ன அர்த்தம்?

அங்கே தான் இருக்கிறது சாமர்த்தியம். ’பெட்ரோல் விலையேறிவிட்டது விலையேறிவிட்டது’ என்ற புலம்பலைத் தடுத்து, அது பெரும் பிரச்சினையாக மக்கள் மத்தியில் எழுவதற்குள், ‘பெட்ரோல் கிடைக்கவில்லை’ என்ற நிலையை உருவாக்கினால், 100 ரூபாய் கூட தந்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொள்ளும் மனநிலை தானாக உருவாகிவிடும். இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் செயற்கைத் தட்டுப்பாட்டிற்கு அதுதான் காரணம்.

பெட்ரோல் விலையுயர்விற்கு, இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி பெரும் காரணமாக அமைந்தது என்பதை இன்னும் மக்கள் பலர் உணர்ந்தபாடில்லை. தடாரென இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றி நாம் இன்னும் உணர்ந்தபாடில்லை. ஒரு வேளை அய்.பி.எல் முடிந்துவிட்ட காரணத்தால் நேற்றிலிருந்து யோசிக்கத் தொடங்கியிருக்கலாம்.

ஞாயிறன்று கோழி வாங்கச் சென்ற தம்பி ஒரு கிலோ ரூ.180 என்று சொன்னபோது பகீரென்றது. ஏனென்றால் சென்னை வந்த பிறகு கோழியை வறுவலாகவும், மசாலாவாகவும் தட்டில் வாங்கியே பழக்கமாகிவிட்டது. கடைசியாக எனக்கு நினைவிலிருப்பது ’உரித்த கோழி’ கிலோ ரூ.54 என்ற அளவில் வாங்கியது. எப்படியும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம். 8 ஆண்டுகளுக்குள் 3 மடங்கு விலையேற்றம்! எனக்கு உறைக்கும் விலையேற்றமெல்லாம் சென்னையில் 3 ரூபாயாக இருந்த புரோட்டா இன்று அதே கடையில் 7 அல்லது 8 ரூபாயை நெருங்கியிருப்பதுதான்.

விலையேற்றமும், பொருளாதார வீழ்ச்சியும் அடுத்தடுத்த குழப்பங்களுக்கு இட்டுச் செல்லலாம். இத்தகைய நெருக்கடியைத் தான் தனது இறுதிக் காலத்தில் சோவியத் சந்தித்தது என்கிறார்கள். ஏற்கெனவே ’லைட்’டா எட்டிப் பார்க்கும் தொப்பை விழுவதற்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்ததில், மீண்டும் சைக்கிளுக்குத் தாவும் மனநிலைக்கு வந்திருக்கிறேன். அதை பெட்ரோல் விலையுயர்வு அமுலுக்குக் கொண்டுவரும் என்று கருதுகிறேன்.
நேற்று நண்பர் ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். “பெட்ரோல் போடாமல், ஒரு வாரம் வண்டிகளை வீட்டில் வைத்துவிட்டு, பேருந்து, மின்சார ரயில் என்று ஏறுங்கள். பிறகு தானாக வந்து, சார் பெட்ரோல் போடலையா? என்று கூவிக் கூவி விற்பார்கள்” என்று! உண்மைதான்.


மிதிவண்டியைத் தட்டிக் கொட்டி, தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…