முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நாள்காட்டி: ஒரே சொடுக்கில்... உங்கள் தளத்தில்...

”நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு”
என்றார் புரட்சிக் கவிஞர்.

அறிவுக்குப் பொருந்தாத, ஆபாசக் கதைகளைச் சொல்லி உங்கள் ஆண்டுக் கணக்கு இது தான் என்று, அறுபது ஆண்டுகளை நம் தலையில் கட்டிவிட்டது ஆரியம். இந்த பண்பாட்டுப் படையெடுப்பைக் கண்ட தமிழறிஞர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடி விவாதித்தனர்.


திருவள்ளுவர் பிறப்பு கி.மு.31 எனக் கொண்டு தமிழ் ஆண்டைக் கணக்கிடவும், தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தனர். கி.பி 1971-ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டு என்பதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டாலும், தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை 1-ஆகவே கருதப்பட்டு வந்தது.

தமிழ் உணர்வுள்ளவன் என்பதால் ஒவ்வோராண்டும் எனது நண்பர்கள் சித்திரை 1-க்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்வார்கள். அவர்களை மறுத்து விளக்கம் சொல்லி, தமிழ்புத்தாண்டு என்பது தை முதல் நாள் தான்; இது ஆரியர் திணித்த ஆபாசம் என்று விடைதர வேண்டியிருக்கும். இது என்னடா, இவனுக்கு பிடிக்கும் சொன்னால் அதையும் மறுக்கிறானே என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். இது எனக்கு மட்டுமல்ல, தமிழுணர்வாளர்கள் பலருடைய அனுபவமாகவும் இருந்திருக்கும்.

”நான் தான் கோபாலகிருஷ்ணன்’னு சொல்லிக்கிட்டு திரியுறேன்; எவன் அப்படி கூப்பிடுறான்?” என்று கமல் அலுத்துக் கொள்வதைப் போல, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சுவரெழுத்து, சுவரொட்டி, வாழ்த்தட்டை போன்றவற்றின் மூலமாக தொடர்ந்து பரப்புரை செய்து வந்தாலும், நாள்காட்டிகளும், ஊடகங்களும் ஏப்ரல்-14-அய் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று போட்டிருக்கும். இதனால் மக்கள் மனதிலும் அதுவே பதிந்திருந்தது. அதை மாற்ற அரும்பாடுபடவேண்டியிருந்தது.

தமிழ்ப் புத்தாண்டை முறையாக அரசு அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகமும், தமிழ் உணர்வாளர்களும், எண்ணற்ற தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து குரல் எழுப்பியதன் பயனாக, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 9.4.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 70-ன் மூலம் ’பிரபவ’ முதல் ’அட்சய’ வரையிலான மூடநம்பிக்கை, முட்டாள் கணக்கு ஆண்டை பயன்படுத்தக் கூடாது என அறிவித்தது.

தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாகவும் பொங்கலை, எழுச்சியான தமிழர் திருநாளாகவும் கொண்டாட பல முயற்சிகளை வெகு எளிதாக மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் கலைஞர். நகரங்களில் மங்கியிருந்த பொங்கலை அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக இளைஞர்களும், குழந்தைகளும் எதிர்பார்க்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள், வண்ண விளக்குகள், ஊரெங்கும் போட்டிகள், சமத்துவப் பொங்கல், சென்னை சங்கமம் என்று மாற்றிக் காட்டியிருப்பதை அனைத்துத் தரப்பினரும் ஒப்புக் கொள்வர்.

இந்தப் பண்பாட்டுப் புரட்சியின் வெற்றியை கடந்த இரண்டு ஆண்டுகளாக “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று அத்தனை தமிழர்கள் வாயிலிருந்தும் கேட்கும்போது அடடா அந்த மகிழ்ச்சியில் கண்ணீர் நம்மை நனைத்துவிடுகிறது. ஒரு சில பேர்களாக இருந்து தை முதல் நாளுக்குக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த நிலை மாறி, இன்று அனைவரும், பொங்கலோ பொங்கல் என்ற வாழ்த்தொலியோடு, தமிழ்ப் புத்தாண்டு குறித்தும் பேசும் போது அந்த நெகிழ்ச்சியை, மகிழ்ச்சியை, புரட்சியை சாத்தியமாக்கிய கலைஞரை தமிழினம் என்றைக்கும் மறக்காது .

அப்படி, தமிழ்ப் புத்தாண்டினை நினைவூட்டவும், மீளமைக்கவும், பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் தொடர்ந்து பாடுபட்டவர்கள் பலர். அதில் எனக்குத் தெரிந்து தொடர்ந்து தமிழ் நாள்காட்டிகளை உருவாக்கி, தான் காண்பவர்களுக்கெல்லாம் அதை இலவசமாகத் தந்து பரப்பிவருபவர் கல்பாக்கம் வேம்பையன் என்ற ஐவர் வழி வேம்பையன் அவர்கள். தமிழகம் முழுக்க இருக்கும் தமிழ்ப் பற்றாளர்கள் கைகளில் எப்படியாவது சென்று சேர்ந்திருக்கும். ஆண்டு பாதி முடிந்திருக்கலாம். ஆனால் இவர் கையில் எப்போதும், அந்த கையடக்க நாள்காட்டி இருக்கும். அவரிடம் பெற்று பலருக்கும் வழங்குவதை நான் வாடிக்கையாகக் கொண்டவன்.

உலக நாத்திகர் மாநாட்டுக்கு சென்றிருந்த போது, செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மானமிகு. துரை.முத்து அவர்கள் நாள்காட்டிகளை வழங்கினார். ‘வேம்பையன் அய்யாதானே வழங்குவார்?’ என்றேன். அவர் தான் தயாரித்தார். இவ்வாண்டு அதற்கான தொகையை நான் ஏற்றுக் கொண்டேன் என்றார். பணி தொடர்வதில் பெரு மகிழ்வடைந்தேன். நானும் பெற்றுக் கொண்டேன்.

இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபின் தமிழ் நாள்காட்டிகளைப் பலமுறை தேடியிருக்கிறேன். எளிமையாய் பயன்படுத்தும் விதத்தில் கிடைக்கவில்லை. இவ்வாண்டு எப்படியும் அதை தயார் செய்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று அதை ஓரளவு முடித்ததில் பெருமகிழ்வு.

எனக்குத் தெரிந்த அளவில் பிக்காஸா மூலம் slide show ஆக உருவாக்கியிருக்கிறேன். அதற்கான embed code-அய் பயன்படுத்தி பிற பதிவர்களும் தங்கள் தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


உங்கள் தளத்தில் இணைத்துக் கொள்ள:

தானாய் சுழல்வது(Auto Play)
<embed type="application/x-shockwave-flash" src="http://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" width="208" height="192" flashvars="host=picasaweb.google.com&hl=en_US&feat=flashalbum&RGB=0x000000&feed=http%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Fprincenrsama%2Falbumid%2F5567961215529848561%3Falt%3Drss%26kind%3Dphoto%26hl%3Den_US" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"></embed>

தானாய் சுழலாதது (with out auto play)
<embed type="application/x-shockwave-flash" src="http://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" width="208" height="192" flashvars="host=picasaweb.google.com&noautoplay=1&hl=en_US&feat=flashalbum&RGB=0x000000&feed=http%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Fprincenrsama%2Falbumid%2F5567961215529848561%3Falt%3Drss%26kind%3Dphoto%26hl%3Den_US" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"></embed>

இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் தேவைக்கேற்ப இணையதளத்திலும், வலைப்பூக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்கும் அளவை மாற்றிக் கொள்வதன் மூலம் பெரிதாகவோ, சிறிதாகவோ அமைத்துக் கொள்ளலாம்.

இன்னும் எளிமையாய் வலைப்பூக்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக கீழ்க்காணும் வடிவத்தில் “இணைத்துக்கொள்” சுட்டி வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நாள்காட்டி 2042
தமிழ் நாள்காட்டி 2042

இதனைச் சொடுக்குவதன் மூலம் விட்ஜெட்டாக உங்கள் வலைப்பூவில் இணைத்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பு இனி எப்போதும் எம் தளத்தில் பார்வையில் படும்படி வலது பட்டை மேற்புறத்தில் இருக்கும். ஒவ்வொரு மாதமும் அந்த மாதம் முதலில் வரும்படி இவ்விணைப்பு செயல்படும்.தமிழ் வலைப்பதிவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இதனை மேம்படுத்தி, தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் பயன்படும் வண்ணம் நிரலியை உருவாக்கித் தர நமது மென்பொருள் வல்லுநர்கள் முன்வரவேண்டும். ஏற்கெனவே எவரும் செய்திருந்தாலும் அதனையும் நாம் பரப்ப வேண்டும். இதற்கென tamilnaalkaatti.blogspot.com என்ற தனி வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளது. பண்பாட்டை மீட்கும் பணியில் நாமும் இணைவோம்.

கருத்துகள்

தோழன் சிங்கமுகன் இவ்வாறு கூறியுள்ளார்…
நீர் வாழ்க நின் குலம்வாழ்க....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…