முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெலுங்கு மொழி பெரியார் திரைப்படம் பெயர் சூட்டல்- ஒரு விளக்கம்


பெரியார் திரைப்படம் தெலுங்கில் மொழியாக்கம் பெற்று ஆந்திர மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ள நிலையில் தெலுங்கு படத்திற்கு "பெரியார்-ராமசாமி நாயக்கர்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெரியாருக்கு தமிழ் நாட்டில் முளைக்காத நாயக்கர் பட்டம் ஆந்திராவில் மட்டும் முளைத்தது எப்படி? எனும் விமர்சனப் போக்கு நிலவுகிறது. விமர்சனங்களை படிப்பவர்களுக்கு நியாயம்போலக்கூட அது தோன்றலாம்.

தமிழில் பெரியார் திரைப்படத்தினை லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரித்தனர். தெலுங்கு மொழியாக்க படத்தினை 'நாக் எண்டர்பிரைசஸ்' எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் தெலுங்கு மொழியாக்க படத்தினை ஏற்கெனவே ஆந்திரத்தில் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் இது. மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து சற்று வேறுபட்டு லாபநோக்கினை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ல இது.

பெரியார் தெலுங்கு பட முன்னோட்ட நிகழ்ச்சி அய்தராபாத் நகரில் நடைபெற்ற பொழுது தெலுங்கு படத்தின் பெயர் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் ஞான.ராஜசேரன் அய்.ஏ.எஸ் உடன் இருந்தார். வெளிமாநிலங்களில் ஜாதிப் பெயரைப் போடாமல் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுவது மரியாதை குறைவாகவே கருதப்படும் நிலை இன்றும் நீடித்து வருகிறது. தந்தை பெரியாரைப் பற்றி பிற மாநிலங்களில் "ஈ.வெ.ராமசாமி நாயக்கர்" என்று குறிப்பிடும் வழக்கம் இன்றும் நீடித்து வருவது எதார்த்தமான நிலையாகும். பொதுமக்களுக்கு யாரைப் பற்றிய படம் என்பது எளிதில் விளங்க வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் "பெரியார் இராமசாமி நாயக்கர்" எனும் பெயரில் படத்தினை உருவாக்கியுள்ளதாக கூறினார். நாயக்கர் என குறிப்பிட்டது மரியாதை நிமித்தம் என்றார்.

பெரியார் திரைப்படத்திலேயே செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெறும் காட்சியில், அதில் பெரியார் உட்பட பல தலைவர்கள் தங்களது பெயருடன் ஜாதிப் பட்டத்தை போட்டுக்கொள்ளும் பழக்கத்தினை விட்டுவிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. பெரியார் ஜாதியினை எதிர்த்துப் போராடியவர் என்ற செய்தியெல்லாம் படத்தில் வருகிறது. தெலுங்கு படம் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் "பெரியார் ராமசாமி நாயக்கர்" எனும் பெயரினை தயாரிப்பாளர் சூட்டி இருந்தாலும், நாயக்கர் எனும் பெயரினை நீக்கி வெளியிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

நடைபெற்றது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி மட்டுமே. படம் இன்னும் வெளியிடப் படவில்லை. தெலுங்கு படம் ஆந்திரா முழுவதும் வெளியிடப் படும்பொழுது நாயக்கர் எனும் ஜாதிப் பெயரினை பெரியார் விட்டுவிட்டார் எனும் செய்தியினைத் தெரிவிக்கும் முகமாக "பெரியார் ராமசாமி நாயக்கர்"   எனும் பெயரிலேயே படம் வெளியிடப் படும். பெரியார் ராமசாமி எனப் பெயரிடுவதை விட "பெரியார் ராமசாமி நாயக்கர்"   என வெளியிடுவது பெரியாருடைய கொள்கையினை அழுத்தமாக வெளியிடும் அணுகுமுறை என்பது ஊடகப் பார்வையில் உள்ளவர்களுக்கு உண்மையிலே புரியும்.


ஒரு திரைப்பட பெயரிலேயே திரிபு நிலைகள் தோன்றி அது மாற்றப்படும் நிலை உருவாகும் சூழலில், திரைப்படம் பெயர் பற்றி விமர்சனம் கொடுப்பவர்கள், பெரியாரது எழுத்துகளின் பதிப்பு தாராளமயமாக்கப்பட்டால் ஏற்படும் கொள்கை திரிபு நிலைகளை அறிவார்களா? அடுத்து நிச்சயம் அறிவார்கள்!  பெரியாரது எழுத்துப் பதிப்பின் தாராளமயம் பற்றி அவர்கள் கூற வேண்டிய அவசியம் என்ன? அவர்களது நோக்கம் பெரியாரது எழுத்துகளைப் பரப்புவது என்பதல்ல. காலப்போக்கில் அதை சிதைப்பது என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? நடுநிலையாளர்கள், நல்லெண்ணம் கொண்ட மக்கள் சிந்திப்பார்களாக!
நன்றி: விடுதலை 

கருத்துகள்

நியோ இவ்வாறு கூறியுள்ளார்…
பொருளாதார தாராளமயமாக்கத்தின் விளைவுகளை இந்தியா தற்போது காலங் கடந்து உணர்ந்து வருகின்றது ... பொருளாதார வல்லுனர்கள் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கின்றனர் ... லகான் அவர்கள் கையில் இப்போது இல்லை ...

பதிப்புரிமையின் தாராளமயமாக்கத்தின் கோர முகம் பின்னர் தெரியக்கூடும் ....அவர்கள் விரும்புவதும் அது தானோ என்னவோ ... இல்லைஎன்றால் பார்ப்பானியம் பேசும் பத்திரிக்கைகள் எழுத்தாளர்கள் பதிவர்கள் குடுமி சும்மாவா ஆடியது ... வரப் போகும் திரிபுகளை சமாளிக்கப் போவது ஆசிரியருக்கும் இயக்கத்திற்கும் பெரும் சவாலாகவும் தேவையற்ற கால விரையமாகவும் இருக்கும்.. என்ன தான் செய்வது...

வருகிறேன் தோழர் !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…