(இந்த இடுகையை முழுதாகப் படிக்கவும், இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணவும் மேலே உள்ள தலைப்பை ஒரு முறை சொடுக்கவும்.) "மூடநம்பிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்." "மத நம்பிக்கைகள் என்பது வேறு; மூட நம்பிக்கைகள் என்பது வேறு" கடவுள், மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் போது இப்படியெல்லாம் பலர் உதார் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், மூடநம்பிக்கைகளும் மத நம்பிக்கைகளும் வேறுவேறானவை அல்ல.. மூடநம்பிக்கைகள் தான் மதத்திற்கான வருவாய், கூட்டம் சேர்க்கும் காரணிகள் என்பது நாம் அறிந்ததே! அதற்கான இன்னொரு சாட்சி - தினமலரின் இந்த வீடியோ செய்திக் காட்சி! சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அரசு நிறுவனமான "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" * குழந்தைகளுக்கான மூன்று நாள் அறிவியல் முகாம் ஒன்றை நடத்தியிருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளின் ஊடாக 'இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பான FIRA' -வின் செயலாளரும், நாடறிந்த மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும், 'மந்திரமா? தந்திரமா?' செயல் விளக்க வித்தகரும், பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியருமான நரேந்திர நாயக் அவர்களின் அறி...