பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் நான் கண்ட சுவரெழுத்து ஒன்றின் படம் மூலம் அறிந்தேன். இது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலிருக்கும் பூணூலூடுருவிகள் கொந்தளித்து திராவிடர் கழகத்துக்கு எதிராக ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்களாம். இந்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது த.பெ.தி.க! போராட்டத்துக்கான கிரெடிட் அவர்களுக்குப் போவது தான் சரியானது. திராவிடர் கழகம் அப்படியொரு போராட்டத்தை அறிவித்தால், அதற்கான எதிர்வினையையும் திராவிடர் கழகம் தாராளமாக எதிர்கொள்ளும் என்பது வரலாறு. ஆனால், என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்றே தெரிந்துகொள்ளாமல் கூறுகெட்டத் தனமாக குதிப்பது பின்புத்திப் பார்ப்பனர்களுக்குப் பழக்கமானது. என்ன செய்ய? நிற்க, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததாக புராணம் வைத்து, தீபாவளி கொண்டாடும் பார்ப்பனர்கள், அந்த வராக அவதாரத்தின் அடையாளமான பன்றிக்கு பூணூல் மாட்டினால் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை பூணூல் அணிவிப்பதற்கான / உபநயனம் செய்வதற்கான (பூணூல் கல்யாணம் செ...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.