இரவு 10:30 மணிக்கு ஒருவர் பெரியார் திடலுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். “சார், டி.என்.பி.எஸ்.சி-க்கு விண்ணப்பம் போடணும். இன்னிக்கு நைட் 11 மணி வரைக்கும் போடலாம்னாங்க... எனக்கு இங்க இண்டர்நெட் -டெல்லாம் கிடையாது சார். என் ஒன் டைம் நெம்பர வைச்சு விண்ணப்பம் போடணும் சார்” என்றார். யாருக்காவது போட்டு, இங்கே தப்பாக வந்துவிட்டதோ என்ற எண்ணத்துடன் “சார், நீங்க போட்டிருப்பது பெரியார் திடல் எண்ணுக்கு. இந்த விசயத்தில நான் என்ன பண்ணனும்னு எனக்குப் புரியல... எனக்கு அதைப் பற்றி விவரம் தெரியாது” என்றேன். “இல்ல சார்... டி.என்.பி.எஸ்.சி தொடர்பான எல்லா சந்தேகங்களையும் கேளுங்க-ன்னு இந்த நம்பர் பேப்பர்ல முன்னாடி வந்திருந்தது சார். அதை எடுத்து வச்சிருந்தேன் சார். நான் தர்மபுரி மாவட்டத்தில ஒரு கிராமத்தில இருக்கேன். டிஸ் ஏபில்டு சார்” என்றார். “சரிங்க... நீங்க சொல்ற பெரியார் பயிலக அலுவலகம் காலை 10 மணிக்கு தான் தொடங்கும். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இருந்தாலும், என்னிடம் இணைய இணைப்பு இருக்கு.. என்ன செய்வதென்று நீங்கள் சொன்னால் நான் செய்து தருகிறேன்.” என்றேன். அவர் சொன்ன தகவல்கள் போதாமல்...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.