எல்லைகளைக் கடக்கலாம் எங்கள் எழுத்து! ஆனால்... எங்களின் ஆனா... ஆவன்னாவில் நிறைந்திருக்கிறாய் நீ! எங்கள் வெற்றிப் படிகளைத் திரும்பிப் பார்க்கையில் ஒவ்வொரு புகைப்படத்திலும் உன் புன்னகை! என் அக்கா தொடங்கி அண்ணன் மகன் வரைக்கும் எங்களுக்கு ஆரம்பக் கல்வி தந்த ஆசான் நீ... முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர், அன்றைய சிவகங்கை மாவட்ட ASP ராஜேந்திரன் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் சாமி சமதர்மம், பின்னால் SVTC செல்வம் ’எழுமின்! விழிமின்!’ என்ற மதத்தைத் தாண்டிய விவேகானந்தரின் வரிகளை நீ இளம் நெஞ்சங்களில் விதைத்தாய்! ஒட்டுமொத்த பள்ளியையும் உட்கார வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க நீ எடுக்கும் வகுப்பு மறக்காது எமக்கு! இந்தி கற்க மாட்டேன் என்று ஒரு பொடிப் பயல் சொல்கிறானே என்றில்லாமல் என் உறுதிக்காகவே பள்ளியிலிருந்து இந்தியை நீக்கி வைத்து எனக்கு முதல் கொள்கை வெற்றியைத் தந்தவன் நீ! 1980களில் SVTC-ன் ஆண்டு விழா நிறைவில் எடுக்கப்பட்ட குழுப்படம் எங்கள் வளர்ச்சி கண்டு பூரித்த பெருமகன்! மாறாத பாசத்துடன் எங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடிய எம் தந்தையின் தோழன்! ...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.