தேவையான பொருட்கள்: 1. இந்திய தேசியக் கொடியின் படங்கள் சில. 2. கொடியின் வண்ணங்கள் கூடப் போதுமானது. அதிலும் குறிப்பாக ’வந்தே மாதரம்’ பாடல் டிசைனில் உள்ளது போன்ற நடுவில் அசோகச் சக்கரம் இல்லாத ஓவிய வடிவில் இருந்தால் இன்னும் உங்கள் தேசீய ‘கிரேடு’கூடும்!) 3. காந்தி, நேரு படம் பயன்படுத்தலாம். ஆனால் அதைப் பயன்படுத்தினால் காங்கிரஸ் சாயம் வந்துவிடும் ஆபத்து இருப்பதால், காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்-சின் இன்றைய அடையாளமான மோடி படத்தைப் பயன்படுத்தலாம். 4. அன்னா ஹசாரே, மதச்சார்பின்மையைக் காக்க அப்துல்கலாம் (வேறு எந்த முஸ்லிம் படமும் அனுமதியில்லை.) 5. ’பாரத் மாத்த்த்தா க்க்க்கீ ஜே!’, ’வந்த்த்தே மாத்த்தரம்’ போன்ற ரெடிமேட் ஸ்லோகங்கள் கொஞ்சம் போல வைத்துக் கொள்ளலாம். செய்முறை: இந்தியாவின் இண்டிபெண்டன்ஸ் டே, ரிபப்ளிக் டே (எது ஜனவரி 26, எது ஆகஸ்ட் 15 என்றெல்லாம் தெரியவேண்டியதில்லை.) என்று யாராவது சொல்லும் போதெல்லாம் மேற்காணும் படங்களில் ஒன்றைப் profile படமாகப் போட்டுவிட்டு, forward mail எதாவதிலிருந்து எடுத்து ஸ்டேடஸ் மெசேஜ் போடலாம்.. கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்த...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.