தகுதி, திறமை என்றால் அவாள் தான் என்பது பார்ப்பனர்களின் வசதிக்காக, பார்ப்பனர்களாலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை. அதிலும், இசை என்றால் அவாள் தான் என்ற மாயையை அவ்வப்போது பலர் உடைத்து வருகிறார்கள். தமிழ்த் திரை என்று மட்டும் இல்லாமல், தமிழிசை, கர்நாடக இசை என்று சாஸ்திரீய சங்கீதத்திலும் கொடி கட்டிப் பறந்தது என்னவோ நம்மவர்கள் தான். கே.பி.சுந்தராம்பாளாக இருந்தாலும், வீணை தனம்மாளாக இருந்தாலும், பாகவதராக இருந்தாலும், கற்க வாய்ப்புக் கிடைத்த தமிழர்கள் தங்கள் திறனால் உலகு புகழ வளர்ந்தார்கள். ”எங்களாவாவை கட்டிண்டதாலதான் எம்.எஸ். இப்படி தேனா பாடுறா!” என்ற இங்கிதம் இல்லாத இவர்களின் சங்கீத பீலாக்களை வரலாறு பதிந்துதான் வைத்திருக்கிறது. இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இதோ நேற்று (17.7.2011) ஓர் இளம் பிஞ்சு, இசைப் பாரம்பரியம் என்றெல்லாம் இல்லாத ஒரு 13 வயது மாணவி 16 மணி நேரம் வீணை வாசித்துச் சாதித்திருக்கிறார். கரூரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் ஸ்ரீநிதி கார்த்திகேயன். கருவூர் தமிழிசைச் சங்கமும், கருவூர் திருக்குறள் பேரவையும் இணைந்து கரூர், நாரத கானசபாவில் நடத்திய இந்நிகழ்வில் ச...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.