”நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்றார் புரட்சிக் கவிஞர். அறிவுக்குப் பொருந்தாத, ஆபாசக் கதைகளைச் சொல்லி உங்கள் ஆண்டுக் கணக்கு இது தான் என்று, அறுபது ஆண்டுகளை நம் தலையில் கட்டிவிட்டது ஆரியம். இந்த பண்பாட்டுப் படையெடுப்பைக் கண்ட தமிழறிஞர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடி விவாதித்தனர். திருவள்ளுவர் பிறப்பு கி.மு.31 எனக் கொண்டு தமிழ் ஆண்டைக் கணக்கிடவும், தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தனர். கி.பி 1971-ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டு என்பதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டாலும், தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை 1-ஆகவே கருதப்பட்டு வந்தது. தமிழ் உணர்வுள்ளவன் என்பதால் ஒவ்வோராண்டும் எனது நண்பர்கள் சித்திரை 1-க்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்வார்கள். அவர்களை மறுத்து விளக்கம் சொல்லி, தமிழ்புத்தாண்டு என்பது தை முதல் ந...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.