தமிழ் யூனிகோட் முறையில் சமஸ்கிருத கிரந்த எழுத்துகளைத் திணிக்க முயற்சிக்கும் பார்ப்பன முயற்சி குறித்துக் கண்டனம் தெரிவித்தும், தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்தும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை பின்வருமாறு: முதல்வரின் முக்கிய கவனத்துக்கு... ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!! யுனிகோட் (Unicode) எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம். தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒர...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.