ஹே! எல்லாம் கேட்டுக்க.... கேட்டுக்க....! மீசையில எனக்கு மண் ஒட்டலை... ஒட்டலை... ஒட்டலை! ஏன்னா எனக்கு மீசையே இல்ல...! உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆதரவாக, மனுத் தாக்கல் செய்யவந்த அரசியல் புரோக்கர் சு.சாமி மீது முட்டை வீசப்பட்டபின் ஓடிஒளிந்து நீதிபதிகளிடம் புகார் அளித்துவிட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த சு.சாமி, சாரி... (thatsislam-இன் வேண்டுகோள்படி மு.சாமி ) கருத்து தெரிவித்ததாவது: கோர்ட்டுக்குள் நான் நுழைந்தபோது சிலர் முட்டை வீசினார்கள்.. அதில் சில வக்கீல்களும் இருந்தார்கள். அவர்கள் வீசியது டேபிளின் மீது விழுந்தது. அங்கிருந்த File-களின் மீது விழுந்தது. டவாலியின் மீது விழப்போனது. இதை நீதிபதிகள் பார்த்தார்கள். பின்னர் அந்த கும்பல் ஒரு காவலரைப் பிடித்து அடித்து உதைத்தது. நீதிமன்றத்துக்குள் அவர்களது அட்டூழியத்தை நான் நீதிபதிகளிடம் புகார் செய்தேன். அவர்களும் பதிவு செய்துகொண்டனர்." இதை அவரு(னு)க்கேயுரிய ஜுனூன் தமிழில் சொன்னார். சரி... உன்னைய அடிச்சது உண்மையா-இல்லையா?... முட்டை உன் மேலே விழுந்ததா? இல்லையா? அதைச் சொல்லுப்பான்னா? பென்ச்-ல விழுந்தது... இன்ச்...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.