தென்னவன் கலைக்கூடம் சார்பில் தயாரிக்கப்படும் 'வணக்கம்மா' என்ற திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஏ.வி.எம். அரங்கில் நடைபெறவிருந்தது. தொடக்க விழாவுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்நிலையில் சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்தது காவல் துறை. காரணம் இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக காரணம் கூறப்பட்டது.
பிறகு தொடக்கவிழாவின் போதும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தங்கள் காலித் தனத்தை அரங்கேற்றி உள்ளன.
என்னடா காரணம்ன்னா...."ராமனை இழிவுபடுத்திவிட்டார்கள்! எங்கள் மனம் புண்பட்டுவிட்டது" என்று தேய்ந்து போன நொந்து போன பழைய ரெக்கார்டை ஓட்டி இருக்கிறார்கள்.
சரி.. அப்படியென்ன இழிவுபடுத்திவிட்டார்கள்ள்ள்ள்-னு கூப்பாடு போடுறீங்கன்னு கேட்டா...
"ராமனும் அனுமானும் ஒன்னுக்கு போவது போல சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அது எங்கள் மனதைப் புண்படுத்திவிட்டது." அப்படின்னு நம்ம ராம கோமாளி சொல்றாரு.
புண்பட்டதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்... இப்படியே புண்பட்டுப் போச்சு... புண்பட்டுப் போச்சுன்னு இவங்க சொன்ன கணக்குப் படி பார்த்தா இதயமே இருக்க முடியாது. வெறும் பிளாஸ்திரிதான் சுத்தியிருக்கணும். (சிங்களப்படை தாக்குதலில் இரந்த விடுதலைப்புலிகள்-னு அவனுங்க சொல்ற கணக்குப் படி பார்த்தா இலங்கையில ஆளே இருக்க முடியாதுன்னு சொல்வாங்க அதுமாதிரி)
சரி, அந்த சுவரொட்டியில என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க...
"கதைப்படி பல வேடங்களில் சென்று திருடக்கூடிய திருடர்களாக சரவணனும், பிரியனும் நடிக்கிறார்கள். அப்படி ஒருமுறை கடவுள் வேடமிட்டு திருடச் செல்கிறார்கள். அப்போது வருவது போல் ஒரு காட்சி இது. அவ்வளவுதான்" அப்படிங்குறாரு இயக்குநர் அரிராமன்.
சரி, இதில மனசு புண்படுத்துன்னா என்ன அர்த்தம்... நான் செய்யாத ஒரு விசயத்தை செஞ்சதா சொன்னா தப்பு, மனசு புண்படுதுன்னு சொல்லலாம்...
அனுமனும், ராமனனும் ஒன்னுக்கு போற மாதிரி காட்டியதில் என்ன தப்பு? சாலையில் அனுமான் உள்ளிட்ட கடவுள் படங்கள், இன்னும் சீதா, லட்சுமணன் சகிதமாக ராமர் படங்களையெல்லாம் வரைந்து பிச்சை எடுக்கிறார்களே அப்பவெல்லாம் உங்க மனம் புண்படலையா? தொடர் வண்டியில ராமன் வேசம் போட்டு பிச்சை எடுக்கிறாங்க? சாலையில கையில வில்லு, ஆர்மோனியப் பெட்டியோட பிச்சை எடுக்கிறாங்க.... அவங்கள்லாம் ஒன்னுக்கு போகும்போது என்ன வேடத்தை கலைச்சுட்டா போறாங்க...
அதெல்லாம் விடுங்க, கோவில்ல பெருசு பெருசா உண்டியல் வச்சு நீங்க எடுக்காத பிச்சையா?
இதில கேவலப்படாத ராமன், அந்தப் போஸ்டர்லதான் கேவலப் படுவாரா?
ஏன்? ராமனுக்கு ஒன்னுக்கு வராதா?
சும்மா, கடவுளுக்கு நரை, திரை, மூப்பு இல்லைன்னெல்லாம் பேசக்கூடாது.
பிறப்பு, இறப்பு இல்லாத கடவுள்னு சொல்லிக்கிட்டே ராமன் பிறந்தநாளுன்னு ராம நவமி கொண்டாடுறீங்க? ராமன் பிறந்த இடத்தில கோயில்கட்டணும்னு சொல்றீங்க?
ராமன் நதியில விழுந்து தற்கொலை பண்ணி செத்தான்னு சொல்றீங்க?
அவன் சரக்கு சாப்பிட்டான்(சோம பானம், சுரா பானம்), சல்லாபிச்சான், சண்டை போட்டான்னு எல்லாம் கதை இருக்கு.. சரக்கு சாப்பிட்டவனுக்கு ஒன்னுக்கு வராதா? இல்லை கக்கா போகாதா? லவ, குசா குழந்தைகள் அவனுக்கு தான் பிறந்ததுன்னா... அது மட்டும் வெளிய வரும்... சிறுநீர் வராதா?
கேட்க கேட்க அசிங்கம் இல்லையா? கேட்டா மனம் புண்படுமா?
போஸ்டர் ஒட்டி பிரபலப் படுத்துனது தான் தப்புன்னா... முதல்ல நீங்க சண்டை போட வேண்டியது 'சோ' பார்ப்பான்கிட்ட...
ஏன்னா ஒரு இடத்தில செருப்படிபட்ட ராமனை தமிழ்நாடு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி விளம்பரப்படுத்துனது அந்தப் பயதான்..
ஒரு கை பாக்குறது 'சோ'வை!