புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் பலர் எழுத்தாற்றல் மிகுதியினாலும், எழுத்தார்வம் மிகுதியினாலும், புகழ் ஆசை மிகுதியினாலும் கூட புத்தகம் போடுவதைப் பார்க்கிறோம். ஏராளமான கவிதைப் புத்தகங்கள், தன் வரலாற்றுப் புத்தகங்கள், தங்களுக்குத் தோன்றிய, இதுவரை எவரும் சொல்லாத (என்று தாங்களே கருதிக் கொள்ளும்) 'அரிய' கருத்துகளை எழுதியே தீருவேன் என்று அடம்பிடிப்போர் எழுதும் புத்தகங்கள் போன்றவற்றையும் கண்டு வருகிறோம். இவற்றுக்கு மத்தியில் நல்ல கருத்துகளடங்கிய புத்தகங்களும் அரிதாக வரக் காண்கிறோம். நண்பர்கள், தெரிந்தோர் என்பதற்காக வாங்கிவிடுவோம் - படிப்போமா என்பது தெரியாது. எப்படியாயினும் எந்தக் கருத்தையும் வெளியிடுவதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. காலப் போக்கில் அப்படி எழுதுவோரில் பலர் நன்கு தேறி வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, முதல் சில முயற்சிகளை, அவர்களுக்கான பயிற்சியாக நாம் கருதலாம், தவறில்லை. கடந்த பல்லாண்டுகளாகவே என் பள்ளித் தோழர்கள் தொடங்கி, இணையத் தோழர்கள், தந்தையின் நண்பர்கள் வரை தங்கள் எழுத்துகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற ஆர்வமுடையோர் பலரும், தொடர்ந்து வாசிக்க விரும்புபவ...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.